No menu items!

’சின்ன நயன்தாரா’ ப்ரியா பவானி சங்கர்

’சின்ன நயன்தாரா’ ப்ரியா பவானி சங்கர்

தமிழ் சினிமாவில் நயன்தாரா குறிப்பிட்டு சொல்லுமளவிற்கு ஒரு வித்தியாசமான நடிகை.

காரணம் அவருடைய குணமும்.. செயலும்…

மளமளவென படங்களில் கமிட்டானார். நன்றாக சம்பாதித்தார். அதை அவரே வைத்து கொள்ளாமல், தனக்கு உதவியாக வேலைப்பார்ப்பவர்களுக்கு வீடு, கார், பைக் என எல்லாமும் வாங்கி கொடுத்தார்.

உதவிக்குப் பணியாற்றுபவர்களுக்கே இப்படி என்றால் அவர் ஒருத்தரைக் காதலித்தால் எப்படி இருக்குமென்று கொஞ்சம் கற்பனையை ஓட்டிப் பாருங்கள்.

பிரபு தேவாவுடன் காதலில் இருந்தார் என்று சொல்லப்பட்ட காலத்தில், பிரபு தேவா செளதியில் ஒரு டான்ஸ் அகாடமி தொடங்கினார், அதற்கு முழு நிதியும் கொடுத்து உதவியது நயன்தாரா என்பார்கள். இதேபோல் பல விஷயங்கள் கோலிவுட்டில் உலா வந்தது நியாபகம் இருக்கலாம்,

இப்பொழுது ப்ரியா பவானி சங்கர், நயன்தாராவைப் போலவே குணத்திலும் செயலிலும் இருக்கிறார்.

நீண்ட நாட்களாகவே ப்ரியா பவானி சங்கர், காதலில் திளைத்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய காதலனுடன் திருமணமாகி செட்டிலாக வேண்டுமென விரும்பும் இவர் கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் சொந்தமாக ஒரு வீட்டை வாங்கினார். அந்தவீட்டில் ப்ரியா பவானி சங்கரும் அவரது காதலரும் முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டு பலரது உள்மனதில் புகையைக் கிளப்பியிருந்தார்.

இப்பொழுது அடுத்தப்படியாக தனது காதலருக்காக ஒரு ரெஸ்டாரண்ட்டை கட்டிக்கொடுக்க முடிவு செய்திருக்கிறார்.

காதலன் செட்டிலாகவேண்டும் என்பதற்காகதான் இந்த ரெஸ்டாரண்ட் பிஸினெஸ்ஸில் அவரை களமிறக்க ப்ரியா பவானி சங்கர் இந்த காஸ்ட்லி கிஃப்ட்டை கொடுத்து காதலரை குஷியில் ஆழ்த்தியிருக்கிறார்.

இந்தியன் -2, டிமான்டி காலனி -2, பத்துதல, பொம்மை, ருத்ரன், அகிலன் என கைவைசம் அரை டஜன் படங்கள் இருப்பதால் ஷூட்டிங் பிஸியாக இருக்கும் ப்ரியா பவானி சங்கர் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணமில்லை என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

இன்னும் சம்பாதிக்க வேண்டுமே அதனால்தான் இந்த முடிவாம்.


விஜயுடன் கைக்கோர்க்கும் கமல்?

கோலிவுட்டின் லேட்டஸ்ட் கிசுகிசு லோகேஷ் கனகராஜ் சூப்பராக நடிகர்களுக்கிடையே பகடி ஆட்டம் ஆடுகிறார் என்பதுதான்.

’லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்’ என்ற பெயரில் முன்னணி நடிகர்களுக்குள்ளே ஒரு சிண்டிகேட் போன்று ஒரு உணர்வை உருவாக்கி, அவர்களுடைய படங்களில் மற்றவர்களை நடிக்க வைப்பதற்கு ஏற்ப ஸ்கிரிப்ட்டில் ஒரு தனி ட்ராக்கை உருவாக்கி விடுகிறார் என்கிறார்கள்.

இந்த பட்டியலில் லேட்டஸ்ட்டாக சிக்கியிருப்பவர் கமல்.

கமலுக்கு ஒரு ரீஎண்ட்ரி கிடைக்க லோகேஷ் கனகராஜ் ஒரு முக்கிய காரணம். அதை வைத்து லோகேஷ் தற்போது இயக்கவிருக்கும் படத்தில் விஜயுடன் கமலை நடிக்க வைக்க பேசி வருவதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

விக்ரம் படத்தில் ‘ரோலக்ஸ்’ என்ற ஒரு கதாபாத்திரத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் சூர்யா அதிகம் பேசப்பட்டார்.

இதைப் போலவே விஜயின் படத்தில் கமலை வரவைக்கும் வகையில் கதையில் சின்ன மாற்றத்தை கொண்டி வந்திருப்பதாகவும், கமலிடம் லோகேஷ் நடிக்க அழைப்பு விடுத்திருப்பதாகவும் பேச்சு அடிப்படுகிறது.

இதற்கு பிரதிப்பலனாக, கமலை வைத்து லோகேஷ் இயக்கும் படத்தில் விஜயை ஒரு சில காட்சிகளில் நடிக்க வைக்கவும் திட்டமிருக்கிறதாம்.


முரட்டு சிங்கிள் பிரேம்ஜிக்கு திருமணமா?

சோஷியல் மீடியாவின் வளர்ச்சி இன்று அதிகாரப்பூர்வமான தகவல்களுக்குப் பதிலாக பல யூகங்களுக்கே பக்கபலமாக இருக்கிறது.

பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் முதல் யாருக்கு யாருடன் ரிலேஷன்ஷிப் என்பதை வரை இன்று பத்திரிகைகளோ, எந்த ஊடகங்களோ சொல்வதற்கு முன்பாகவே, யாரோ ஒரு தனிநபர் தீர்மானித்துவிடுகிறார்.

இதனால் உண்மை எது.. கிசுகிசு எது, வதந்தி எது என்பதைக் கூட இப்பொழுது தெரிந்து கொள்ள முடிவதில்லை.
இந்த வகையறா செய்திகளில் இப்பொழுது இடம்பிடித்திருப்பவர் முரட்டு சிங்கிள் பிரேம்ஜி.

பின்னணி பாடகி வினைதாவுக்கும் பிரேம்ஜிக்கும் இடையே நெருங்கிய நட்பு ரொம்ப நாட்களாகவே இருந்தது வருகிறது.

இது சினிமா மியூசிக் வட்டாரத்தில் அநேகமாக அனைவருக்கும் தெரியும்.

சில நாட்களுக்கு முன்பாக இதே பிரேம்ஜிக்கும் வினைதாவுக்கும் கல்யாணம் என்று ஒரு கிசுகிசு கிளம்பியது. ஒரு வாரம் ஓடிய இந்த கிசுகிசு அப்புறம் சுவடே இல்லாமல் அமைதியானது.

இப்பொழுது மீண்டும் அதே கிசுகிசுவுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் வினைதா.

திடீரென பிரேம்ஜியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ’பேக் வித் மை புருஷன்’ என்பது போல ஒரு கமெண்ட்டையும் தட்டிவிட்டிருக்கிறார் வினைதா.

இதைப் பார்த்து இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே திருமணமாகி விட்டது போலவும், ஏதோ பிரச்சினையினால் பிரிந்தவர்கள் மீண்டும் சந்தோஷமாக இணைந்துவிட்டது போலவும் ஒரு கருத்துருவாக்கம் ஆகியிருக்கிறது.

இதை சினிமா மியூசிக் வட்டாரத்தில் விசாரித்தால் எல்லாமே டுபாக்கூர் மேட்டர்.

அவர்கள் இருவரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். ஒன்றாக பார்ட்டி பண்ணுவார்கள். ஆனால் திருமணம் என்பது எல்லாமே பொய். வினைதா பப்ளிசிட்டிக்காவே இப்படியொரு ஸ்டண்டை கையிலெடுத்து இருக்கிறார். யாரும் ஏமாந்து விடாதீர்கள் என்று நம்மை தோளில் தட்டிக்கொடுத்து தேற்றுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...