கடந்த அக்டோபர் 1- ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் 7 , முதல் வாரத்திலிருந்தே சுவாரசியங்களுக்கு குறைவைக்காமல் இருக்கிறது. இன்று என்ன நடக்கப் போகிறது என்று பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் வண்ணம்தான் கடந்த 29 நாட்களும் இருந்தன.
இந்த சூழலில் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக வைல்டு கார்டு என்ட்ரியை தொடங்கியுள்ளது பிக்பாஸ் குழு. பொதுவாக வைல்டு கார்டு என்ட்ரியை 50 நாட்களுக்கு பிறகுதான் கொண்டுவருவார்கள். ஆனால் இந்த சீசனில் முதல் மாத இறுதியிலேயே தொடங்கியிருக்கிறார்கள்.
பொதுவாக வைல்டு கார்டு என்ட்ரி என்றால் இரண்டு அல்லது மூன்று பேர்தான் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவார்கள். ஆனால் இந்த முறை 5 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார்கள். அடுத்தடுத்து வரிசைகட்டி வந்த வைல்ட் கார்ட் எண்ட்ரி நபர்களைப் பார்த்து பார்வையாளர்கள் மட்டுமின்றி போட்டியாளர்களும் திகைத்துப்போய் நிற்கிறார்கள்.
இப்படி வரிசைகட்டி வந்த 5 புதிய போட்டியாளர்களைப் பார்ப்போம்…
முதல் போட்டியாளர் நடிகர் தினேஷ் கோபால்சாமி, இவர் பல தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் படங்களில் நடித்திருக்கிறார். கடந்த பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்ட ரட்சிதாவின் கணவர்தான் இவர். பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த்துமே நிறைய பட்டாசுகளை கொளுத்திப் போட்டிருக்கிறார் தினேஷ் கோபால்சாமி. இன்னும் என்ன செய்ய போகிறார் என்று பொறுத்திருந்து பார்போம்.
அடுத்த வைல்டு கார்டு என்ட்ரி பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி. சற்றும் எதிர்பாராத வைல்டு கார்டு என்ட்ரி இவர். பல வருடங்களாக பட்டிமன்ற பேச்சாளராக பல மேடைகளைப் பார்த்தவர், பிக் பாஸையும் ஒரு கைப்பார்த்து விடலாம் என்ற ஆர்வத்துடன் களமிறங்கி இருக்கிறார்.
மூன்றவதாக உள்ளே வந்தவர் VJ அர்ச்சனா, விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி 2 என்ற தொடரின் மூலம் பிரபலமடைந்தவர். இவர் ஏற்கனவே உள்ளே இருக்கும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நான்காவது போட்டியாளராக உள்ளே வந்தவர் RJ பிராவோ. இவர் நமக்கு புதிய முகம். துபாயில் உள்ள ரெடியோ ஒன்றில் RJ வாக பணியாற்றிக்கொண்டிருக்கிறாராம், சோசியல் மீடியாவிலும் ஆக்டியுவாக இருக்கிரார் பிராவோ. கலக்கலப்பாக உள்ளே நுழைந்த இவர் வீட்டையும் கலகலப்பாக மாற்றுவாரா என்று பார்போம்.
கடைசியாக ஐந்தாவது வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வந்தவர் நம்ம கானா பாலா. சூது கவ்வும் படத்தில் இடம்பெற்றுள்ள “காசு பணம் துட்டு மணி மணி” என்ற பாடலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் கானா பாலா. இவர் நன்றாக பாடுவார் என்று நமக்கெல்லாம் தெரியும். ஆனால், படிப்பிலும் கைதேர்ந்தவர் என்று நேற்று தான் தெரிந்தது. M.Sc பாட்டனி முடிந்துள்ளாராம். மேலும், B.BL டிகிரியையும் முடிந்துள்ளாராம் நம் கானா பாலா.
மிகவும் தெளிவாக “நான் நானாக இருக்கப்போகிறேன்” என்று சொல்லிவிட்டு, கானாப் பாடலை பாடிக்கொண்டே உள்ள சென்றார் கானா பாலா. பிக் பாஸ் வீட்டில் உள்ள இளைஞர் பட்டாளத்திற்கு நடுவே, 50 வயதை கடந்த இவர் என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்.
ஆட்டம் இப்போதுதான் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே, உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு வைல்டு கார்டு என்ட்ரியில் வந்த யாரையும் பிடிக்கவில்லை. நாமினேஷன் வரட்டும் உங்களை பார்த்துக்கொள்கிறோம் என்று கண்டென்ட் கொடுக்கும் கூட்டம் காத்திருக்கிறது.