No menu items!

அஜித், கொஞ்சம் தமிழையும் கவனிங்க ப்ளீஸ்

அஜித், கொஞ்சம் தமிழையும் கவனிங்க ப்ளீஸ்

சினிமாவுக்கு நிகராக பைக்குகளை நேசிப்பவர் அஜித். ஷூட்டிங் இல்லாத காலத்தில் பைக்கை எடுத்து சுற்றுலா செல்வது அவருக்குப் பிடித்த விஷயங்களில் ஒன்று. இந்த விருப்பத்தின் காரணமாக ஏகே மோட்டோ ரைடு என்ற பெயரில் பைக் சுற்றுலா சேவை நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார் அஜித்.

ஆனால் விஷயம் அதுவல்ல… இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை. ஆங்கிலத்திலும் தமிழிலும் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. ஆங்கில அறிக்கை தரமாக எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ் அறிக்கை….?

ஆங்கில அறிக்கையை அப்படியே Google Translatorல் போட்டு வெளியிட்டிருக்கிறார். பல இடங்களில் தமிழ் தடுமாறுகிறது.

முதலில் அஜித் தனிப்பட்ட முறையில் வெளியிட்டுள்ள ஆங்கில அறிக்கையை பார்ப்போம்…

I have long loved and lived by this quote: “Life is a beautiful ride. Embrace the twists, turns, and open roads ahead.”

I am now pleased to share that I will be channeling my passion for motorcycles and the outdoors into a professional endeavour, through a motorcycle touring company, AK Moto Ride.

AK Moto Ride will offer avid riders, adventure enthusiasts, and wanderlust seekers tours that explore not only the scenic landscapes of India, but also exotic international roads.

With an unwavering commitment to safety and comfort, AK Moto Ride will provide a fleet of meticulously maintained adventure touring superbikes, ensuring reliability and performance throughout the tours. Professional guides well-versed in the intricacies of motorcycle tours and with extensive knowledge of local customs and traditions will offer riders a seamless and immersive experience from start to finish.

Live and let live. – Ajith Kumar

இப்படிச் செல்கிறது ஆங்கில அறிக்கை. அந்த அறிக்கையில் வார்த்தைகளை பார்த்துப் பார்த்து செதுக்கி இருக்கிறார்கள். ஆனால் அதே அறிக்கையை கூகுள் டிரான்ஸ்லேட்டரில் போட்டோ, தமிழ் தெரியாத நபரிடம் கொடுத்து மொழிபெயப்பு செய்தோவென்று வெளியிட்டிருக்கிறார்கள்.

அந்த தமிழ் அறிக்கை இதோ…

இந்த மேற்கோளை நான் நீண்ட காலமாக விரும்பி வாழ்ந்து வருகிறேன்: ‘வாழ்க்கை ஒரு அழகான பயணம். அதன் எதிர்பாராத தருணங்கள், திருப்பங்கள் மற்றும் திறந்த பாதைகளைக் கொண்டாடுங்கள்’.

மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெளிப்புறங்களில் எனது ஆர்வத்தை ஒரு தொழில்முறை முயற்சியாக மாற்றும் விதத்தில் ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride) என்ற மோட்டார்சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை கொண்டு வந்திருக்கிறேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளில் மட்டுமின்றி, அழகான சர்வதேச சாலைகளிலும் பயணம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கு ஏகே மோட்டோ ரைடு சுற்றுப்பயணங்களை வழங்கும்.

பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் சுற்றுப்பயணங்கள் முழுவதிலும் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்து, உன்னிப்பாக பராமரிக்கப்படும் சாகச சுற்றுலா சூப்பர் பைக்குகளை ஏகே மோட்டோ ரைடு வழங்கும். தொழில்முறை வழிகாட்டிகள், மோட்டார் சைக்கிள் சுற்றுப் பயணங்களின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்கள் மற்றும் உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் பற்றிய விரிவான அறிவைக் கொண்டவர்கள் தொடக்கம் முதல் இறுதி வரை ரைடர்களுக்கு தடையற்ற மற்றும் அதிவேக அனுபவத்தை வழங்குவார்கள்.

வாழு வாழ விடு – அஜித்குமார்

இப்படி தமிழுடன் வாக்கிய அமைப்புகளுடன் விளையாடுகிறது அறிக்கை.

அஜித், பைக்குகளை கவனிப்பது போல் கொஞ்சம் தமிழையும் கவனியுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...