No menu items!

சமந்தாவுக்கு பிறகு இப்போது மம்தா!

சமந்தாவுக்கு பிறகு இப்போது மம்தா!

சமந்தாவுக்கு ஆட்டோஇம்யூன் பிரச்சினையான ‘மையோசிடிஸ்’ வியாதியால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது அதிலிருந்து கஷ்டப்பட்டு மீண்டு வந்திருக்கிறார்.

அந்த சோகத்திலிருந்து சினிமா ரசிகர்கள் மீள்வதற்கு முன்பாக இப்போது மம்தா மோகன்தாஸூம் ஆட்டோஇம்யூன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிய வந்திருக்கிறது.

மம்தா மோகன்தாஸூக்கு ஆட்டோஇம்யூன் பிரச்சினயான விட்டிலிகோ வியாதி இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கும் மம்தா மோகன்தாஸ் தமிழ், தெலுங்குப் படங்களிலும் நடித்திருக்கிறார். கிறங்க வைக்கும் தனது இனிமையான குரலில் பல சினிமா பாடல்கள் பாடியிருக்கும் இவரது குரலுக்கு ரசிகர்கள் ஏராளம். பரபரப்பாக அவர் நடித்துகொண்டிருக்கும் போதே, அவருக்கு புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு, புற்றுநோய் சிகிச்சையில் இறங்கினார். இவரது மன தைரியத்தால் அதிலிருந்து மீண்டு வந்தார். ஆனால் அந்த சந்தோஷம் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை.
மீண்டும் புற்றுநோய் தாக்கியது. தனது போராடும் குணத்தால் இரண்டாவது முறை தாக்கிய புற்றுநோயை வெற்றி கொண்டு நடிக்க ஆரம்பித்தார்.

எல்லாம் நன்றாக போய் கொண்டிருக்கையில் தற்போது அவருக்கு விட்டிலிகோ வியாதி இருப்பதாக மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்திருக்கிறது.

விட்டிலிகோ வியாதி வந்துவிட்டால், சருமத்தின் நிறம் மாற ஆரம்பிக்கும். படை படையாக நிறம் மாற்றம் அதிகரிக்கும். இதனால் சருமத்தின் வசீகரம் குறையும், அழகில் மாற்றம் உண்டாகும்.

தனக்கு விட்டிலிகோ இருப்பதை வெளிப்படையாகவே ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார் மம்தா மோகன்தாஸ். விட்டிலிகோ பிரச்சினையில் இருந்தது அவர் மீண்டு வருவார். காரணம் அவரது அந்த போராடும் குணம்.


அஜித்துடன் ஐஸ்வர்யா ராய் – AK62 Update

ஒரு வழியாக அஜித் நடித்த ‘துணிவு’ வெளியாகிவிட்டது. ஒரு வாரம் கடந்துவிட்டது.
அப்படியானால் அடுத்து என்ன?

அஜித்62 படம்தான். இப்பொழுது அஜித்62 படம் பற்றிய புதுப்புது தகவல்கள் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன.

முக்கியமான கிசுகிசு என்னவென்றால், அஜித் நடிக்க விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித்தின் 62-வது படம், விக்னேஷ் சிவனின் ஃபேவரிட் ஜானர் ஆன ரொமான்டிக் கதையாக இருக்குமா அல்லது ஆக்‌ஷன் கதையாக இருக்குமா என்று யோசித்து கொண்டிருக்கையில், ஐஸ்வர்யா ராய் நடிக்க இருக்கிறார் என்று ஒரு பேச்சு கிளம்பியிருக்கிறது.

2000-ல் வெளியான ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் அஜித்தும், ஐஸ்வர்யா ராயும் நடித்திருந்தார்கள். அதில் ஐஸ்வர்யா ராய் மம்மூட்டிக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

ஆனால் இப்பொழுது அஜித்திற்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்று கிளம்பியிருக்கும் செய்தியில் எந்தளவிற்கு உண்மை இருக்கும் என்பது இப்போதுள்ள சூழலில் தெரியவில்லை. படத்தில் நயன்தாராவும் இருப்பதால் இவர்கள் இருவரில் ஒருவர் ஃப்ளாஷ்பேக்கில் வரும் கதாபாத்திரமாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக பேசிக்கொள்கிறார்கள்.

அடுத்து இந்தப் படத்தில் அர்விந்த சுவாமி வில்லனாக நடிக்கவிருக்கிறார் என்றும் கொளுத்திப் போட்டிருக்கிறார்கள்.


அசுர வேகமெடுக்கும் நெட்ஃப்ளிக்ஸ்!

ஒடிடி-க்கு இந்தியாவில் மிகப்பெரும் வாய்ப்புகள் இருக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொண்ட ஹாட் ஸ்டார் டிஸ்னி ப்ளஸ் அதற்கேற்ற வகையில் இந்தியாவுக்கேற்ற ஒரிஜினல்கள், வெப் சிரீஸ்களை களத்தில் இறக்கியது. இதனால் ஹாட் ஸ்டாருக்கு இன்று கோடிக்கணக்கில் சந்தாதாரர்கள் இருக்கிறார்கள்.
இதை மோப்பம் பிடித்த அமேசான் ப்ரைம் வீடியோவும் இங்குள்ள ஒடிடி சந்தாதாரர்களுக்கேற்ற கண்டெண்ட்களை வழங்க ஆரம்பித்தது.

ஆனால் இங்குள்ள ட்ரெண்ட் என்ன என்பதை தெரியாமலேயே இருந்து வந்த நெட்ஃப்ளிக்ஸ் இப்போது சுதாரித்து கொண்டிருப்பது போல் தெரிகிறது. இதற்கு காரணம், வரிசையாக தமிழ் படங்களின் ஒடிடி உரிமையை வாங்கி குவித்திருக்கிறது. 2023-ல் நெட்ஃப் ளிக்ஸில் வெளிவரவிருக்கும் படங்களின் பட்டியலையும் வெளியிட்டு தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ்.

அதிரடியாக அஜித்தின் 62-வது படத்தின் ஒடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் வாங்கியிருக்கிறது.
அடுத்து ஆர்யன், சந்திரமுகி 2, கட்டா குஸ்தி, ஜெயம் ரவியின் இறைவன், இறுகப்பற்று, கார்த்தியின் ஜப்பான், எஸ்.ஜே. சூர்யா, ராகவேந்திரா லாரன்ஸ் நடிக்கும் ஜிகர்தண்டா : டபுள் எக்ஸ், உதயநிதியின் மாமன்னன், நாய் சேகர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் பெயரிடப்படாத படம், யோகிபாபுவின் பெயரிடப்படாத படம், அருள்நிதியின் பெயரிடப்படாத படம், ரிவால்வர் ரீட்டா, விக்ரமின் தங்கலான், தனுஷின் வாத்தி, வரலாறு முக்கியம் என பட்டியல் பலமாக இருக்கிறது.

இந்தப் படங்கள் அனைத்தும் திரையரங்குகளில் வெளியான பின்பு சில வாரங்கள் கழித்து நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆக இருக்கின்றன.

இந்த மாதிரியான ஒடிடி ஸ்ட்ரீம் சினிமா தயாரிப்பாளர்களுக்கு ஒரு வருவாயாக இருந்தாலும், நெட்ஃப்ளிக்ஸ் சப்ஸ்க்ரிப்ஷனை மட்டும் வாங்கி வைத்து கொண்டு, மெதுவாக படம் பார்த்து கொள்ளலாம் என்று திரையரங்குகளுக்கு மக்கள் வராமல் போனால் திரையுலகம் பெரும் அழிவை வெகுவிரைவில் சந்திக்கக்கூடும் என்ற எச்சரிக்கை மணியும் கூடவே ஒலிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...