No menu items!

ஆப்கானிஸ்தானின் முதல் கார்

ஆப்கானிஸ்தானின் முதல் கார்

தீவிரவாதம், குண்டுவெடிப்புகள், பெண் அடிமைத்தனம் என்று சதா நெகட்டீவான செய்திகளே வந்துகொண்டிருந்த ஆப்கானிஸ்தானில் இருந்து முதல் முறையாக ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட Mada 9 என்ற சூப்பர் காரை உலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது தலிபான் அரசு.

தலிபான் அரசின் உயர்கல்வித்துறை அமைச்சரான அப்துல் பாகி ஹக்கானி இந்த காரை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் ENTOP என்ற நிறுவனம் சுமார் 5 ஆண்டுகாலம் பல்வேறு ஆய்வுகளை நடத்தி இந்த சூப்பர் காரை உருவாக்கி உள்ளது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 30 பொறியாளர்கள் இணைந்து இந்தக் காரை வடிவமைத்ததாக ENTOP நிறுவனம் தெரிவித்துள்ளது.

டயோட்டா கொரோலாவின் இஞ்சினைக் கொண்டு இயங்கும் இந்த காரின் செயல்பாடு சாலைகளில் எப்படி இருக்கும் என்பது பற்றிய விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் மற்ற நாடுகளில் தயாரிக்கப்படும் கார்களின் திறனுக்கு சற்றும் குறையாமல் இந்த காரின் திறன் இருக்கும் என்று இதை வடிவமைத்துள்ள பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


உலகின் பெரிய வாழைப்பழம்

பொதுவாக நாம் ஒரு கிலோ வாழைப்பழம் வாங்கினால் அதில் குறைந்தது 5 பழங்களாவது இருக்கும். ஆனால் பாப்புவா நியூ கினியில் விளையும் ‘Giant Highland Banana’ என்ற வாழைப்பழத்தை ஒரு கிலோ வாங்கச் சென்றால் ஒரு பழத்தில் கொஞ்சத்தை வெட்டித்தான் கொடுப்பார்கள். அதன் சைஸ் அப்படி. ஒரு பழம் மட்டுமே சுமார் 6 கிலோ வரை இருக்கும் என்கிறார்கள்.

இந்த வாழைப்பழம் விளையும் வாழை மரம் மூசா இன்ஜென்ஸ் [Musa Ingens] என்று அழைக்கப்படுகிறது. இந்த மரங்கள் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மலேசியா போன்ற நாடுகளில் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. இருப்பினும், பப்புவா நியூ கினி எனும் நாட்டில் தான் அதிக உயரமாக வளர்கிறது. 15 முதல் 30 மீட்டர் உயரம் வரை இந்த வாழை மரங்கள் வளர்கின்றன.

பழத்தின் எடை எப்படி அதிகமோ, அதேபோல் இந்த வாழை மரங்கள் காய்ப்பதற்கான காலமும் அதிகம். இவ்வகை மரங்கள் காய்க்க 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த வாழை மரங்கள் வெப்பமண்டலத்தில் தாழ்வான பகுதிகளில் வராது. மேட்டுப்பகுதியில் அதுவும் பகலில் குளிர்ச்சியாகவும், இரவில் ஈரமான மற்றும் சூடான மிதமான காலநிலையில்தான் வளரும். இதனால் தான், இந்த வாழை மரங்கள் பாப்புவா நியூ கினியில் அதிகமாக விளைகின்றன.


பாகிஸ்தானின் கழுத்தை நெரிக்கும் விலைவாசி

இலங்கையில் கடந்த ஆண்டில் ஏற்பட்டதைப் போன்ற விலை உயர்வு இந்த ஆண்டில் பாகிஸ்தானின் கழுத்தை நெரிக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 36 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெங்காயத்தின் விலை, இந்த ஆண்டு 220 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல் ஒரு கிலோ சிக்கனின் விலை 383 ரூபாயாகவும், கடலை எண்ணெயின் விலை 532 ரூபாயாகவும், ஒரு லிட்டர் பாலின் விலை 150 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இதேபோல் மற்ற பொருட்களின் விலையும் கடுமையாக உயர பாகிஸ்தான் அரசின் மீது கோபத்தில் இருக்கிறார்கள் அந்நாட்டு மக்கள்.

பாகிஸ்தானின் பணவீக்கம் 20 சதவீதத்தை கடந்திருப்பதே இதற்கு காரணம் என்று விளக்கம் அளித்துள்ள அந்நாட்டு அரசு, சிக்கன், தேயிலை போன்றவற்றின் பயன்பாடுகளை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனால் மக்கள் கோபத்தில் இருக்க, இதைப் பயன்படுத்தி அரசுக்கு எதிராக போராட அவர்களை தூண்டி வருகிறார் அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான இம்ரான் கான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...