வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டுமென்றால் நமக்கு நேரம் நன்றாக இருக்க வேண்டும். ஆனால் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கு நேரம் மட்டுமல்ல… அவர் நேரம் பார்க்கும் பொருளும் நன்றாகவே இருக்கிறது. அவரது கையில் கட்டியிருக்கும் கைக்கடிகாரத்தைத்தான் சொல்கிறோம். இப்போதைய நிலையில் இந்தியாவிலேயே அவர் கட்டியிருக்கும் கைக்கடிகாரம்தான் மிகவும் காஸ்ட்லியானது என்று அடித்துச் சொல்ல்லாம். அதன் விலை என்ன என்று தெரியுமா?… ஜஸ்ட் 66.5 கோடி ரூபாய்.
மும்பையில் சமீபத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில்தான் இந்த 66.5 கோடி ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரத்தை அணிந்து வந்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி.
Patek Philippe Grandmaster Chime வகையைச் சேர்ந்த இந்த கைக்கடிகாரத்தின் 2 பக்கங்களிலும் நீல நிற டயல்கள் உள்ளன. கைக்கடிகாரத்தின் உதிரி பாகங்கள் pristine white gold மற்றும் வைரங்களால் உருவாக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க வெறும் கைகளால் தயாரிக்கப்பட்டுள்ள கைக்கடிகாரம் என்பது இதன் மற்றொரு சிறப்பம்சம். இந்த கைகடிகாரத்தின் பட்டை முதலைத் தோலால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கைக்கடிகாரத்தின் மதிப்பு 66.5 கோடி ரூபாயாக இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, அதை உருவாக்க்குவதற்கு ஆகும் நேரம். ஆனந்த் அம்பானி அணிந்திருக்கும் Patek Philippe கைக்கடிகாரத்தை உருவாக்க ஒரு லட்சம் மனித நேரம் ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு அந்த கைக்கடிகாரத்தை பார்த்துப் பார்த்து செதுக்கி கைகளால் உருவாக்கி இருக்கிறார்கள்.
இந்த கைக்கடிகாரத்தை மட்டுமின்றி இதே நிறுவனம் தயாரித்துள்ள மற்றொரு விலை உயர்ந்த கைக்கடிகாரத்தையும் ஆனந்த் அம்பானி வாங்கி வைத்திருக்கிறார். அந்த கைக்கடிகாரத்தின் விலை என்னவென்று தெரியுமா? 18 கோடி ரூபாய்.
கைக்கடிகாரங்கள் மட்டுமல்ல… வாழ்க்கையில் மற்ற விஷயங்களையும் அணு அணுவாக ரசிக்கத் தெரிந்தவராக ஆனந்த் அம்பானி இருக்கிறார். இந்த வகையில் துபாயில் இருக்கும் பாம் ஜுமைரா பீச் ஹவுசும் ஒன்று. 10 படுக்கை அறைகளைக் கொண்ட இந்த வீட்டை மகனுக்காக பார்த்துப் பார்த்து கட்டிக் கொடுத்திருக்கிறார் தந்தை முகேஷ் அம்பானி.
வீடு, கைக்கடிகாரத்தைப் போலவே குண்டு துளைக்காத ஆடம்பர கார் உள்ளிட்ட பல ஆடம்பரப் பொருட்களும் ஆனந்த் அம்பானிக்கு சொந்தமாக உள்ளன.