No menu items!

லியோ தயாரிப்பாளரின் பேராசை!

லியோ தயாரிப்பாளரின் பேராசை!

விஜய்யின் ‘லியோ’, அக்டோபர் 19-ம் தேதி வெளியாகும் என்ற அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கான முன்பதிவு 16-ம் தேதி வரை தொடங்கவில்லை. இன்று மல்ட்டிப்ளெக்ஸ்களில் மட்டும் முன்பதிவு ஆரம்பித்திருக்கிறது.

மல்ட்டிப்ளெக்ஸ் முன்பதிவு அநேகமாக முடிந்தும் விட்டது.

ஏன் இவ்வளவு தாமதம் என்றால் ’லியோ’ படத்தயாரிப்பாளரின் பேராசைதான் காரணம்.

முதலில் வட ஆற்காடு, தெற்கு ஆற்காடு, சென்னை, செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள திரையரங்குகளுடன் ஒப்பந்தம் போடுவதில் தயாரிப்பாளர் லலித் பிடிவாதம் பிடித்ததுதான் இந்த தாமதத்திற்கு காரணம்.

பொதுவாகவே முன்னணி கமர்ஷியல் ஹீரோக்களின் படங்களுக்கு மினிமம் கியாரண்டி என்றழைக்கப்படும் எம்.ஜி. முறையில்தான் வியாபாரம் நடக்கும். அதாவது   மினிமம் கியாரண்டி என்பதில் குறிப்பிட்டது போலவே ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வசூலாகும் தொகையில் தயாரிப்பாளருக்கு பாதி, விநியோஸ்தர்களுக்கு பாதி போய் சேரும்.

குறிப்பிட்ட தொகைக்கு மேல் எவ்வளவு அதிக லாபம் வந்தாலும் இதில் பாதி பாதிதான்.

ஆனால் மற்றொரு முறையான டிஸ்ட்ரிபியூஷன், படம் வசூலிக்கும் மொத்த தொகையும் தயாரிப்பாளருக்குப் போய் சேரும். அந்த தொகையில் ஐந்து சதவீதம் அல்லது மூன்று சதவீத கமிஷன் மட்டுமே விநியோகஸ்தர்களுக்கு கிடைக்கும். இதனால் படம் வெற்றியடையும் பட்சத்தில் தயாரிப்பாளருக்கு பெரும் தொகை சேரும் வாய்ப்புகள் இந்த முறையில் இருக்கிறது.

இப்படி வசூலை அள்ளவேண்டுமென லலித் கொண்டிருக்கும் பேராசையால், படத்தை டிஸ்ட்ரிபியூஷன் முறையில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறது படக்குழுவினர்.

இதற்கு அடுத்து திரையரங்கு உரிமையாளர்களிடமும் கையை வைத்திருக்கிறார் லலித்.

திரையரங்கு உரிமையாளர்களிடம் வசூலில் 75 முதல் 80 சதவீதம் எங்களுக்கு வேண்டும் என்றும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கூறப்பட்டிருக்கிறது. இதைக் கேட்டு திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள். இதனால் ஆரம்பித்த பேச்சுவார்த்தையில் இன்று முன்னேற்றம் இருக்கும். முன்பதிவு தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் இருக்கும் மல்ட்டிப்ளெக்ஸ்களில் வசூலில் 50 சதவீதம் மட்டுமே தயாரிப்பாளர்களுக்கு போய் சேரும். இங்கேயும் எங்களுக்கு 60 சதவீதம் வேண்டுமென லலித் கேட்டிருக்கிறார். பிவிஆர் மல்ட்டிப்ளெக்ஸ் உடன் ஒப்பந்தம் ஆகிவிடும் என்று நம்பப்படுகிறது, இன்று பிவிஆர் முன்பதிவு பக்கத்தை ஹவுஸ்ஃபுல் போல் காட்டிக் கொண்டிருக்கிறது.

லியோ பெரும் வசூலை அள்ளும் என்று கணக்குப் போட்டு எல்லா பணமும் தனக்கே வரவேண்டுமென நினைக்கிறார் லலித். ஆனால் கரணம் தப்பினால் மரணம் என்பது போல் படம் சுமார் என்றால் விழும் அடி ’லியோவில்’ ஹைனா ஆடும் வேட்டையை விட மிகக் கொடியதாக இருக்கும்.


முத்தத்துக்கு எக்ஸ்ட்ரா சம்பளம்? – ராஷ்மிகா மந்தனா!

ராஷ்மிகா மந்தனாவுக்கு இப்போது சுக்ரன் உச்சத்தில் இருக்கிறார் என்று ஜோதிடர்கள் சொல்லுமளவிற்கு பெரிய வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.

பாலிவுட்டில் அவர் நடித்த ‘மஞ்சு’ படம் சரியாக போகவில்லை. இதனால் வருத்தத்தில் இருந்தவருக்கு நம்பிக்கையாக இருக்கும் ஒரே வாய்ப்பு ‘அனிமல்’ என்ற ஹிந்திப்படம்.

இதில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்திருக்கிறார். இப்படத்தின் முதல்பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளிவந்தது. அதில் ராஷ்மிகா ரன்பீர் கபூருக்கு லிப் லாக் கொடுக்கும் புகைப்படம் இடம்பெற்று இருந்தது.

இந்த போஸ்டர் வைரல் ஆகி கொண்டே இருக்கும் போது, ராஷ்மிகா இந்த முத்தக்காட்சியில் நடிக்க, ஏற்கனவே பேசிய சம்பளத்தைவிட கூடுதலாக சம்பளம் கேட்டார் என்ற செய்தியும் பட்டென்று பரவியது.

எப்பொழுதும் சிரித்தப்படியே போஸ் கொடுக்கும் ராஷ்மிகா இந்த பஞ்சாயத்தில் கொஞ்சம் ஆடிப்போயிருக்கிறார்.

ரன்பீர் கபூருடனான பாடலில் ராஷ்மிகா முத்தமழையில் நனைவது போல் எடுக்கப்பட்டிருக்கிறதாம். அதனால் கூடுதலாக சம்பளம் கேட்டார் என்ற கிசுகிசுவுக்கு, ‘இதெல்லாம் சுத்தப் பொய். ராஷ்மிகாவுக்கு வேண்டாதவர்கள் கிளப்பிவிடும் பொய்செய்தி. கூடுதலாக பணம் கொடுத்த தால் முத்தக்காட்சியில் நடிக்கவில்லை. கதைக்கு தேவைப்பட்டதால் ராஷ்மிகா நடித்தார்’ என்று ராஷ்மிகா தரப்பிலிருந்து உடனடியாக பதிலளிக்கப்பட்டிருக்கிறது.


ஹிந்தியை எதிர்க்கும் சூர்யா!

சூர்யா ‘கங்குவா’ பட வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். இந்தப் படத்தில் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வேலைகள் அதிகமிருப்பதால், ஷூட்டிங்கை வேகமாக முடித்துவிட்டு போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளை திட்டமிட்ட காலத்திற்குள் முடிப்பதற்காக கங்குவா இயக்குநர் சிவா திட்டம் மேல் திட்டம் போட்டு ஷூட் செய்து கொண்டிருக்கிறார்.

இதற்கு அடுத்து சூர்யா, ‘சூரரைப் போற்று’ இயக்குநர் சுதா கொங்க்ரா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ’சூர்யா 43’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். சூர்யாவுடன் நஸ்ரியா, துல்கர் சல்மான் என பல நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கிறார்கள்.

திட்டமிட்டப்படி ‘கங்குவா’ ஷீட்டிங் முடிந்தால், இப்படம் வருகிற நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுதா கொங்க்ரா எழுதியிருக்கும் கதை கொஞ்சம் தீவிரமான கதை என்கிறார்கள். இதில் தமிழ்நாட்டின் விதியையே புரட்டிப்போட்ட, ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை. அதில் எழுச்சிமிக்க கல்லூரி மாணவராக சூர்யா தோன்ற இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் நாட்டில் பெரும் பலத்துடன் இருந்த காங்கிரஸ் கட்சியை, 1969 தேர்தலில் தோற்கடித்து தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆனார் அண்ணா. இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம், 1965-ல் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டம். இதில் கல்லூரி மாணவர்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வை அடிப்படையாக வைத்து திரைக்கதையை சுதா எழுதியிருப்பதாகவும் கூறுகிறார்கள். இதனால் ஹிந்தி திணிப்பை எதிர்த்து சூர்யா பதிவு செய்யும் வகையில் காட்சிகள் இருப்பதாகவும் தெரிகிறது.

இப்படியொரு காட்சி இருப்பது உண்மையென்றால், சூர்யாவுக்கான மவுசு இங்கே இளைஞர்கள் மத்தியில் இன்னும் உயரக்கூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...