No menu items!

ஜோ-நயன் வழியில் ஹன்சிகா!

ஜோ-நயன் வழியில் ஹன்சிகா!

பெரிய ரவுண்ட் வருவாங்கனு எதிர்பார்க்கப்பட்ட ஹன்சிகாவின் ரவுண்ட் இடையிலேயே தடை பட்டுப் போனது. காரணம் அதிகரித்த அவர் உடல் பருமன். எடையை குறைக்க சிகிச்சையில் இருந்தவர் இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். லவ் டூயட் என்று வழக்கமான படங்கள் வேண்டாம் என்று கூறி ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களைத் தேடுகிறார். ஜோதிகா, நயந்தாரா வரிசையில் கதாநாயகிக்கு ரோல் முக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர் கண்டிஷன்.

வாலு, ஸ்கெட்ச் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் விஜயசந்தர் தயாரிப்பில் அறிமுக இயக்குநரான குரு சரவணன் இயக்கத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையில் நடிச்சிட்டு வற்ராங்க. அந்தப் படத்தோட படப்பிடிப்பு சென்னையில் ஃபிலிம் சிட்டியில் நடைப்பெற்று வருகிறது.


பிரமாண்ட இயக்குநர் ஷங்கரா? ராஜமவுலியா?

தெலுங்கு சினிமாவில் கால் பதிக்கும் இயக்குநர் ஷங்கர், ராம்சரணை வைத்து இயக்கும் படத்திற்கு ‘சர்காரோடு’ என்ற பெயர் வைத்திருக்கிறார்கள்.

படத்தில் ராம்சரணுக்கு டபுள் ரோல். இளமைத் துள்ளல் மிக்க ஒரு கல்லூரி மாணவர், நேர்மையான அரசு ஊழியர் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

ரமோஜி ராவ் ஃப்லிம் சிட்டியில் சமீபத்தில் ஒரு பாடல் காட்சிகளை எடுத்திருக்கிறார்ள். பட்ஜெட் 9 கோடி ரூபாய். அடுத்து ஒரு சண்டைக் காட்சியையும் எடுத்திருக்கிறார்கள். இதன் பட்ஜெட் 10 கோடி. ஆக, ஒரு பாட்டுக்கும் சண்டைக்கும் 19 கோடி ரூபாய். பாகுபலிக்குப் பிறகு, இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்றால் எஸ்.எஸ்.ராஜமெளலி என்றிருப்பதை மாற்ற ஷங்கர் முயற்சிக்கிறார் என்கிறார்கள் படக் குழுவினர்.


பாலா படத்தில் மாற்றுத்திறனாளியாக நடிக்கிறாரா சூர்யா..?

பிதாமகன் , நந்தா படங்களை தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா பாலா கூட்டணியில் தனது 41 வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. 2டி தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியும் தங்கையாக கேரள நடிகை மமிதா பைஜூவும் நடித்து வருகிறார்கள்.

படத்தில் சூர்யாவுக்கு இரட்டைவேடம். அதில் ஒரு கதாபாத்திரம் காது கேட்காத, பேச இயலாத மாற்றுத் திறனாளி என்று திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் படக்குழு இந்தத் தகவலை மறுக்கிறது. பொதுவாய் சினிமாக்காரர்கள் மறுத்தால் அது உண்மையாக இருக்கும். பார்ப்போம்.


செல்பி மூலம் பிஸியான தங்கதுரை, இப்போதைக்கு ஹீரோ வாய்ப்பு வேணா!

சின்னத்திரையில் காமெடி ஷோ மூலம் அறிமுகமான தங்கதுரை. தற்பொழுது வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார். சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் சின்ன காதாப்பாத்திரம் என்றாலும் கூட அவர் பேசிய வசனம் உங்க சிஷ்யான இருக்குறதுல பெருமை குருவேனு சொல்லக்கூடிய வசனம் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது. இப்போது பிரபுதேவாவுடன் பொய்கால் குதிரை, ஜல்சானு இரண்டு படங்கள், ஹன்சிகா கூட ஒரு படம், யோகிபாபுவுடன் பன்னிக்குட்டி ,பம்பர்…. இப்படி பல படங்களில் நடிக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்று படமெடுப்பவர்கள் சொல்கிறார்கள். ’காமெடி மட்டுமல்லை, ஹீரோவா நடிக்க நிறைய சான்ஸ் வருது ஆனா நான் ஜாக்கிரதையா தான் இருக்கேன். ஹீரோவா இப்ப நடிக்க மாட்டேன்” என்று சிரிக்கிறார் தங்கதுரை. உஷார்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...