தற்போது ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களும் சம்பளம் வாங்குகிறார்கள். தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகைகளின் லிஸ்ட்…
நயன்தாரா:
தென்னிந்திய நடிகைகளிலேயே சம்பள விஷயத்தில் நம்பர் 1 இடத்தில் இருப்பவர் நயன்தாரா. ஒரு படத்தின் நாயகன் யாராக இருந்தாலும் சரி, நாயகி நயன்தாரா என்றால் தியேட்டர் வசூலும், ஓடிடி ஒப்பந்தமும் கோடிக்கணக்கில் கொட்டும் என்பது தயாரிப்பாளர்களின் நம்பிக்கை. அதனாலேயே நயன் கேட்கும் சம்பளத்தைக் கொடுத்துவிடுகிறார்கள். தற்போது திருமணமாகியுள்ள நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பை விட்டு ஒதுங்கும் மூடில் இருக்கும் நயன்தாரா, ஒரு படத்துக்கு 7 கோடி ரூபாய் வரை வாங்குவதாக கோடம்பாக்கம் சொல்கிறது.
பூஜா ஹெக்டே:
‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பூஜா ஹெக்டே, அக்கட தேசத்திலும் சூப்பர் ஸ்டார்களின் ஜோடியாகத் திகழ்கிறார். தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‘ஜன கன மன’ படத்தில் நடித்துவரும் பூஜா ஹெக்டே, தனது சம்பளத்தை 5 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளாராம்.
சமந்தா:
பொதுவாக திருமணத்துக்குப் பிறகு நடிகைகளின் மார்க்கெட் சரியும். ஆனால் திருமணத்துக்கு பிறகு, அதிலும் விவாகரத்துக்கு பிறகு சமந்தாவின் மார்க்கெட் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கோலிவுட், டோலிவுட் என அனைத்து வுட்களிலும் சமந்தாவின் படங்கள் ஹிட் அடித்து வருவதால் அவரது கிரேஸ் கூடுகிறது. இதனால் தனது கால்ஷீட்டுக்கான ரேட்டை தொடர்ந்து உயர்த்திவரும் சமந்தா, தயாரிப்பாளரைப் பொறுத்து 3 கோடி முதல் 5 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார்.
ரகுல் ப்ரீத் சிங் :
தென்னிந்தியா மட்டுமின்றி பாலிவுட்டிலும் பரபரப்பாக இருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். ‘தடையற தாக்க’ ‘என்ஜிகே’, ‘தீரன் அதிகாரம் 1’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங் ஒரு பான் இந்தியா நட்சத்திரமாக திகழ்கிறார். ஒரு படத்துக்கு அவர் வாங்கும் சம்பளம் 3.5 கோடி ரூபாய்.
ராஷ்மிகா மந்தனா:
ஆரம்பத்தில் கொஞ்சம் மந்தமாக இருந்த ராஷ்மிகாவின் மார்க்கெட், ‘புஷ்பா’ ஹிட் அடித்த பிறகு றெக்கை கட்டிப் பறக்கிறது. அடுத்ததாக விஜய் பட நாயகியாகவும் புக் ஆகியுள்ள ராஷ்மிகா மந்தனா, இப்போதைக்கு வாங்கும் சம்பளம் ரூ.3 கோடி.
தமன்னா பாட்டியா:
தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக இருந்த தமன்னாவின் மார்க்கெட், பாகுபலிக்கு பிறகு இன்னும் எகிறியது. சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் அளவுக்கு பிரபலமாக இருக்கும் தமன்னாவின் சம்பளம் என்ன என்று கேட்டால் 3 விரல்களைக் காட்டுகிறார்.
ஸ்ருதி ஹாசன்:
இன்பினிடி நெட்வொர்த் இணையதளம் சமீபத்தில் வெளியிட்டுள்ள கணக்கின்படி ஸ்ருதி ஹாசனின் மொத்த சொத்து மதிப்பு 53 கோடி ரூபாய். ஒரு படத்துக்கு இவர் வாங்கும் சம்பளம் 2 கோடி ரூபாய்.
கீர்த்தி சுரேஷ் :
ஆரம்பத்தில் தமிழ் மற்றும் மலையாள படங்களில் கவனம் செலுத்திவந்த கீர்த்தி சுரேஷ், ‘மகாநடி படத்துக்குப் பிறகு தெலுங்கில் பிசி. ஒரு படத்துக்கு இவர் வாங்கும் சம்பளம் 2 கோடியாம்.
காஜல் அகர்வால்:
தெலுங்கு மற்றும் தமிழில் ஒரு காலத்தில் முன்னணியில் இருந்த காஜல் அகர்வாலின் இப்போதைய மார்க்கெட் கொஞ்சம் டல் அடித்துள்ளது. காரணம் திருமணம். இதனால் சம்பளம் சற்று குறைந்தாலும் இப்போதும் ஒரு படத்துக்கு 3 கோடி ரூபாய் வாங்குகிறார் காஜல் அகர்வால். சமீபத்தில் கோலிவுட்டில் இவர் நடித்து வெளியான ’ஆச்சார்யா’ தோல்வி அடைந்ததால் இவரது சம்பளம் இனி குறையலாம் என்கிறார்கள்.
த்ரிஷா:
ஒருகாலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் கொடிகட்டிப் பறந்த த்ரிஷாவுக்கு இப்போது இறங்குமுகம். ஆனாலும் ஒரு கோடி ரூபாய்க்கு குறையாமல் சம்பளம் கேட்கிறாராம்.