No menu items!

இணைகிறார்கள் யுவன் – அனிருத்!

இணைகிறார்கள் யுவன் – அனிருத்!

கனவா நிஜமா என்றிருக்கிறது. ஆனால் நிஜம். யுவன் சங்கர் ராஜாவும் அனிருத்தும் இணைந்து பணியாற்றப் போகிறார்கள்.

யுவன் தமிழ் இசையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர். யுவன் பாடல்கள் என்று யாரும் சொல்வதில்லை, யுவன் ட்ரக்ஸ் (Yuvan Drugs) என்று யுவனின் இசையை போதையுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள், யுவன் ரசிகர்களை தாண்டி அனைத்து இசை ரசிகர்களுக்குமே யுவன் பாடல்கள் என்றாலே தனி போதை தான்.

யுவன் எப்படி நீண்ட கால இசை போதையோ இந்தக் கால இளைஞர்களின் ராக் ஸ்டாராக இருப்பவர் அனிருத். அவரது இசையும் மயக்கும் இசைதான்.

இசையுலகில் ஒரு சில காம்போ (combo) வந்தாலே ஹிட் வரிசையில் தான் இடம்பிடிக்கும். யுவன் – நா. முத்துக்குமார் காம்போ, யுவன் – தனுஷ் காம்போ , யுவன் – செல்வராகவன் காம்போ , யுவன் – வெங்கட் பிரபு காம்போ , யுவன் – ராம் காம்போ . இவர்களில் எந்த காம்போ இணைத்தாலும் அந்த ஆல்பம் யுவன் ரசிகர்களின் பிளேலிஸ்டில் இடம் பிடித்துவிடும்.

இன்னொரு புறம் தமிழ் இசையுலகின் ராக்ஸ்டார் அனிருத் தொட்டதெல்லாம் ஹிட் தான். அனிருத் அவர்களின் குரலுக்கு அனைத்து இளவட்ட கூட்டமும் அடிமை. இவர் இசையுலகில் வந்த முதல் படத்திலுருந்தே அனைத்து பாடல்களுமே ஹிட் தான். இவர்க்கும் சில காம்போ இருக்கிறது. அனிருத்வுடன் இவர்கள் இணைந்தாலே ரசிகர்களுக்கு அது Most Favoriteதான். சிவகாரத்திக்கேயன் – அனிருத் காம்போ , தனுஷ் – அனிருத் காம்போ , விக்னேஷ் சிவன் – அனிருத் காம்போ . இவர்கள் இணைத்தாலே அது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

சரி, யுவன் காம்போ ரசித்துவிட்டோம் , அனிருத் காம்போ பாடல்களும் நம் பிளேலிஸ்ட் -ஐ ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. யுவன் – அனிருத் இணைந்து ஒரு காம்போவாக மாறினால்?

உங்கள் அளவில்லா சந்தோஷம் புரிகிறது. நினைத்தாலே இவ்ளோ சந்தோஷமாக இருக்கிறதே. அது நடந்தால் எப்படி இருக்கும்!

நாம் நினைத்தால் போதுமா அவர்கள் இருவரும் நினைக்க வேண்டுமே என்று நீங்கள் சொல்வது கேக்கிறது.

அவர்கள் இருவரும் நினைத்து விட்டார்கள்!

ராஜா யுவன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஜூலை 27 ஆம் தேதி ட்வீட் பதிவிட்டுஸ்ள்ளார்.

Which music director do you think I should collaborate with for my next big song?

அவர் பதிவிட்ட சிரிது நேரத்திலேயே சந்தோஷ் நாராயணன் ”Idho Kelambitten 😜” என்று மீம் உலகின் நாயகன் வடிவேலு படம் கொண்ட gif -ஐ யுவன் கேட்ட கேள்விக்கு நகைச்சுவையாக தனது டிவிட்டர் பக்கத்தில் விருப்பத்தை தெரிவித்தார்.

அவர் தவிர கமெண்ட்ஸ்- களில் யுவன் ரசிகர்கள் பலரும் தங்களது விருப்பத்தையும், ஆசையையும் தெரிவித்திருந்தனர். பலரும் அனிருத்துடன் இணைந்து யுவன் இசையமைக்க வேண்டும் என்று கமெண்ட் செய்திருந்தனர்.

நேற்று (ஆகஸ்ட் 1 ) யுவன் தனது டிவிட்டர் பக்கத்தில் யுவன் – அனிருத் இருவரும் வொட்சப்(whatsapp) வாய்ஸ் நோட் -ல் பேசியதை வீடியோவாக தனது டிவிட்டர் பக்கதில் பதிவிட்டுள்ளார் யுவன்.

”Fans ஆச படுறாங்க ப்ரோ” என்று யுவன் அனிருத் -விடம் கேட்க ”பண்ணிறலாம் ப்ரோ” என்று கூறிய ஆடியோவை சந்தோஷமாக பதிவிட்டுள்ளார் ராஜா யுவன்.

அடுத்த படத்தில் இணைவார்களா இல்லை, ஆல்பம் பாடலாக வெளியீடுவார்களா என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் இருவரும் இணைத்தாலே நமக்கு கொண்டாட்டம் தான்.

அதுவரை யுவன் காம்போ , அனிருத் காம்போ – வை தனித்தனியாக கேட்டு Vibe பண்ணி கொண்டிருப்போம்.

யுவன் – அனிருத் காம்போ- காக காத்திருப்போம் Vibe பண்ணுவதற்காக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...