No menu items!

’லியோ’ இசை விழா ரத்து ஏன்? – முழுப் பிண்ணனி!

’லியோ’ இசை விழா ரத்து ஏன்? – முழுப் பிண்ணனி!

தமிழ் சினிமாவில் லேட்டஸ்ட் பஞ்சாயத்து விஜய்யின் ‘லியோ’ பட இசை வெளியீட்டு விழா எதிர்பாராத வகையில் ரத்து செய்யப்பட்டதுதான்.

’லியோ’ இசை வெளியீட்டு விழா ரத்து ஆனதன் காரணம் என்ன என விசாரித்தால், அதன் பின்னணியில் பல சமாச்சாரங்கள் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

’லியோ’ பட இசை வெளியீட்டு விழா திட்டமிட்டப்படி நடைப்பெறாது. இப்படத்தின் சென்னை, செங்கல்பட்டு, தென் ஆற்காடு, வட ஆற்காடு விநியோக உரிமையை ரெட் ஜெயிண்ட்டுக்கு கொடுக்கவில்லை. அதனால் நேரு விளையாட்டு உள்ளரங்கில் விழாவை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் சமூக ஊடகங்களில் திடீரென பரவின.

இசை வெளியீட்டு விழா ரத்து என்ற தகவல் பரவிய அதே நேரத்தில், நேரு விளையாட்டு உள்ளரங்கில் விழாவுக்கான பணிகள் நடந்து வருவது குறித்த புகைப்படங்களும் வெளியாகி இருந்தன.

அதேபோல் விழா நடக்குமிடத்தில் லியோ படத்தயாரிப்பாளர் லலித் குமாரும், விஜய்யின் மேனேஜருமான ஜகதீஷ்ஷூம் விழா பணிகளைக் கவனித்து கொண்டிருக்கும் புகைப்படமும் ஊடக வட்டாரத்தில் வெளியிடப்பட்டன.

இதனால் மீடியாவிலும் ஒரு திடீர் குழப்பம் உண்டானது. கொஞ்ச நேரத்திலேயே லியோ இசை வெளியீட்டு விழா ரத்து என தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது. விழாவில் கலந்துகொள்ள நுழைவுச்சீட்டு கேட்டு அதிக கோரிக்கைகள் வந்தவண்னம் இருக்கின்றன. மேலும் அதில் கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பை முன்னிட்டு இவ்விழாவை ரத்து செய்கிறோம் என்று லியோ படக்குழுவினர் சார்பாக தகவல் வெளியாகியது.

இதனால் விஜய் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட ஏமாற்றம். எக்கச்சக்கமான குழப்பம்.

உண்மையில் இதுவரையில் சந்தித்திராத பிரச்சினையை விஜய் எதிர்கொண்டிருக்கிறார். ‘பீஸ்ட்’ பட விழா கொரோனா காரணமாக நடைபெறவில்லை. அதேபோல் ‘வாரிசு’ பட விழாவும் இங்கே நடைபெறவில்லை. இதனால் ’லியோ’ பட விழாவுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்பு.

முன்பெல்லாம் விழாவில் கலந்து கொள்ள நுழைவுச்சீட்டுகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விஜய் ரசிகர் தலைமை மன்றத்திற்கு வழங்கப்படும். இவற்றை மன்றங்கள் சரியான விகிதத்தில் பகிர்ந்து கொள்வது வழக்கம்.

ஆனால் சமீபகாலமாக, விஜய் மன்ற நிர்வாகி புஸ்ஸி ஆனந்த், விஜய் மக்கள் இயக்கத்தை ஒரு அரசியல் கட்சியைப் போல் கையாண்டு வருவதாலும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தொகுதிவாரியாக சந்தித்து வருவதால், இந்த முறை விழா நுழைவுச் சீட்டை ஒரு தொகுதிக்கு பத்து என கொடுக்கலாம் என திட்டமிடப்பட்டதாம். இதனால் மன்ற நிர்வாகிகளுக்கு 10 என வைத்தால், 234 தொகுதிகளுக்கும் மொத்தமாக 2340 நுழைவுச்சீட்டுகள் போதும் என முதலில் கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால் பிரச்சினை வேறுவிதமாக கிளம்பியது. விழா நடக்கும் நேரு விளையாட்டு உள்ளரங்கில், மக்கள் உட்கார்ந்து பார்க்கும் காலரியில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் இரண்டு காலரிகளில் இப்போது  யாரும் அமர்ந்து பார்க்கும் வாய்ப்புகள் இல்லை. மேலும் ஒரு காலரியானது, விழா மேடையின் பின்பக்கம் வரும் என்பதால் அதையும் பயன்படுத்த முடியாது. மீதமுள்ள காலரிகளை மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால்  விழாவுக்கு அதிக எண்ணிக்கையில் மக்களை அனுமதிக்க முடியாது.

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் என்றால் ஒரு தொகுதிக்கு 20 முதல் 25 பேர் இருக்கிறார்கள். இதனால் இவர்களிலிருந்து 10 பேருக்கு மட்டும் நுழைவுச்சீட்டு கிடைத்தால் அது மற்றவர்களை உதாசீனப்படுத்துவது போல் ஆகிடும். இதை தடுக்க ஒரு தொகுதிக்கு 100 நுழைவுச்சீட்டுகள் வேண்டுமென ரசிகர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது சாத்தியம் இல்லை என்று புஸ்ஸி ஆனந்த தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

23,400 பேருக்கு நுழைவுச்சீட்டு என்பது முடியாத காரியம் என புஸ்ஸி ஆனந்த் கையை விரித்து விட்டாராம்.

இந்தப் பஞ்சாயத்து ஒருப்புறம் இருக்க, நிகழ்ச்சியின் பாதுகாப்பு கேட்டு காவல் துறையை அணுகிய லியோ படக்குழுவினரிடம், எங்களுக்கும் நுழைவுச்சீட்டு வேண்டுமென காவல்துறை சார்பில் கணிசமான எண்ணிக்கையைக் குறிப்பிட்டு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் கிசுகிசுக்கிறார்கள்.

இந்த பிரச்சினையை எதிர்பார்க்காத,  படக்குழுவினருக்  மற்றுமொரு அதிர்ச்சி, ஒரு மத்திய மந்திரி சார்பில் சில நூறு நுழைவுச்சீட்டுகள் வேண்டுமென கூறப்பட்டதாம்.

இப்படி நுழைவுச்சீட்டு கேட்டு எல்லா பக்கமும் நெருக்கடி உண்டாகவே, இது நமக்கு தேவையா என்ற விஜய் கேட்க, விழாவே வேண்டாம் என ஒரு மனதாக முடிவாகி விட்டதாம்.

இந்த விழா ரத்து ஆனதில் விஜய்க்குதான் லாபம். காரணம், ரஜினி ‘ஜெயிலர்’ பட விழாவில் கூறிய ‘காகம் பருந்து கதைக்கு’ விஜய்யின் பதில் என்னவாக இருக்கும் என எதிர்பார்பு ரசிகர்கள், ஊடகங்கள் மத்தியில் இருந்தது.

அதனால் விஜய் என்ன கூறினாலும் அதற்கு அரசியல் சாயம் பூசப்படும். அடுத்த இரண்டு வாரங்களுக்கு விஜய் பற்றிய சர்ச்சைகள் தொடரும்.  விஜய் பேசினாலும் சிக்கல். யாரையாவது பகைத்து கொள்ளதான் வேண்டும். பேசாமல் நழுவினாலும் சிக்கல். ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். இதனால் விழா நடக்காமல் போனதில் விஜய்க்கு பெரிய வருத்தம் இல்லை. ஆனால் லோகேஷ் கனகராஜூவுக்குதான் ஏக வருத்தம் என்கிறார்கள்.

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி எழுந்த நாள் முதலே, விஜய்க்கும் நெருக்கடிகள் ஆரம்பமாகி விட்டன.  அந்த அழுத்தம் அவர் தோள்மீது அமர்ந்து கொண்டே இருப்பதால், தற்காலிக நிவாரணமாக இந்த விழா ரத்து அமைந்திருக்கிறது என்கிறார்கள் விஜய்க்கு நெருங்கிய நண்பர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...