எத்தனை புதிய புதிய ஆப்கள் வந்தாலும் பெரும்பாலும் அனைவரும் விரும்புவது வாட்ஸப் தான். மணிக்கணக்கில் எவ்வளவு நேரம் வேண்டுமாலும் நமக்கு பிடித்தவர்களிடம் chat செய்யலாம். வாட்ஸ்சப்-யை அனைவரும் விரும்புவதற்கு முக்கிய காரணம், அதிலிருக்கும் ப்ரைவசி தான். ஆரம்ப காலக்கட்டத்தில் உரையாடலுக்காக மட்டும் பெரிதாக பயன்படுத்தப்பட்டாலும், வாட்ஸப்பில் தற்போது வாட்ஸப் குரூப் தான் டிரெண்டிங்கில் உள்ளது. கரோனா காலக்கட்டத்தில் வாட்ஸப் குரூப் தான் பள்ளிக்கூடமாக மாறியது. ஆசிரியர்கள் நோட்ஸ் அனுப்புவது தொடங்கி மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களை தீர்த்து வைப்பது வரை அனைத்தும் வாட்ஸப் மூலம் தான் நடந்தது. தற்பொழுது அனைத்திற்குமே வாட்ஸப் தான். உறவினர்களுக்கு தனியாக, ஃபிரண்ட்ஸ்களுக்கு என்று தனியாக குரூப், இதுப்போன்று அலுவலக வேலைகளுக்கும் தகவல்களை பகிரவேண்டும் என்றாலும் வாட்ஸப் குரூப் தான்.
புதிய புதிய அப்டேட்களை அவ்வப்போது வாட்ஸப் நிறுவனம் கொடுத்துக் கொண்டே இருந்தாலும், தற்போது கொண்டுவந்துள்ள அப்டேட் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. யூடூப், டெலிகீராமில் உள்ளது போல சேனல் வசதியை வாட்ஸ்சபிலும் அறிமுகப்படுத்தியுள்ளது வாட்ஸப் நிறுவனம்.
இந்த அறிவிப்பைப் கேட்டவுடன் அனைவருக்கும் எழும் கேள்வி இனி வாட்ஸ்சப்பில் ப்ரைவசி இருக்குமா?
வாட்ஸப் நிறுவனம் அந்த அறிவிப்பிலேயே பதில் அளித்துவிட்டது. தங்களது சாட்ஸ், ஸ்டேட்டஸ், குரூப்ஸ், கமூனிடீஸ் போன்றவற்றிற்கு எந்தப் ப்ரைவசி பாதிப்பும் ஏற்படாது.
மேலும் நீங்கள் யாரைப் பின்தொடர்கீறீர்கள் என்பது பிறருக்கு தெரியாது. சேனல்களை பின்தொடர்பவர்களின் ஃபோன் நம்பர் சேனல் உரிமையாளருக்கு கூட யார் நம்மை பின்தொடர்கிறார்கள் என்று தெரியாது, ப்ரைவசியாக பாதுகாக்கப்படும், சேனலின் உரிமையாளரின் ஃபோன் நம்பரும், ப்ரோஃபைல் பிக்சரும் ப்ரைவசியாக பாதுக்காகப்படும் என்று உறுதியளித்துள்ளது வாட்ஸப் நிறுவனம்.
சேனலின் உரிமையாளர் மட்டும்தான் டெக்ஸ்ட், வீடியோஸ், போட்டோஸ் போன்றவைகளை அனுப்ப முடியும், சேனலை பின்தொடர்பவர்கள் ரிப்ளை செய்ய முடியாது, எமோஜிகள் மூலம் ரியக்ட் மட்டும் செய்துக்கொள்ள முடியும்.
30 நாட்களுக்கு ஒரு முறை சேனலின் உரிமையாளர் அனுப்பியுள்ள அனைத்து போட்டோஸ், வீடியோஸ் மற்றும் டெக்ஸ்ட் எல்லமே ஸ்டோரேஜ்- லிருந்து நீக்கப்படும். சேனலில் வரும் தகவல்களை யார் வேண்டுமாலும் அவர்களுடைய வாட்ஸப் குரூப்களுக்கும், தனியாகவும் ஃபார்வார்டு செய்துக்கொள்ளலாம்.
நமக்கு பிடித்த பிரபலங்களை எப்படி பின்தொடர்வது ?
எப்போதும் போல பிளே ஸ்டோர்-லில் வாட்ஸ்சப்யை அப்டேட் செய்துவிட்டால், வாட்ஸ்சப்பில் ஏற்கனவே சேனல் வைத்திருப்பவர்களின் ப்ரோஃபைல்கள் காட்டும். இன்ஸ்டாகிராமீல் நமக்கு பிடித்த பிரபலங்களை சர்ச் செய்து பின்தொடர்வது போல நமக்கு பிடித்த பிரபலங்களை வாட்ஸ்சப்பில் find channel என்ற ஆப்ஷன் மூலம் சர்ச் செய்து பின்தொடரலாம்
சரி, நாமும் ஒரு சேனலை ஆரம்பித்துவிட வேண்டியது தான் என்று உங்களுக்கு தோன்றுவது தவறில்லை.
ஆனால், வாட்ஸப் நிறுவனம் இப்போது அந்த ஆப்ஷனை கொடுக்கவில்லை.
தற்போது பிரபலங்கள், முன்னனி நிறுவனங்கள் மட்டும்தான் சேனல் தொடங்க முடியும். இன்னும் சில நாட்களுக்கு பிறகு யார்வேண்டுமாலும் சேனல் தொடங்கலாம் என்ற ஆப்ஷனை கொண்டு வரும் என்று வாட்ஸப் நிறுவனம் கூறியுள்ளது.