No menu items!

டி20 கிரிக்கெட்: இந்தியாவின் தோல்விக்கு 4 காரணங்கள்

டி20 கிரிக்கெட்: இந்தியாவின் தோல்விக்கு 4 காரணங்கள்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை மிகுந்த எதிர்பார்ப்போடு தொடங்கியது இந்தியா. விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், பும்ரா, முகமது ஷமி போன்ற முன்னணி வீரர்கள் இந்த தொடரில் ஆடவில்லை. இருப்பினும் 2 வாரங்களுக்கு முன் முடிந்த ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் சாதித்த இளம் நட்சத்திரங்கள் பலரும் இந்த அணியில் இடம்பெற்றிருந்ததால் இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எல்லோருடைய எதிர்பார்ப்புகளையும் தகர்த்து முதல் 2 டி20 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது இந்தியா.

இந்த தொடர் தோல்விகளுக்கான காரணங்களைப் பார்போம்…

டாஸ் தோல்வி:

இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் பெரும்பாலும் இரண்டாவதாக ஆடும் அணியே வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. இதற்கு காரணம் பனி.

பொதுவாக இரவு 8 மணிக்கு மேல் பனி பெய்வதால், மைதானத்தில் ஈரத்தன்மை ஏற்படுவது வழக்கம். இதனால் பந்துவீச்சாளர்கள், குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தை சாரியாக கிரிப் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.

இதேபோல் பீல்டர்களாலும் பந்தை சரியாகப் பிடிக்க முடியாது. இது இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். அதனால் டாஸ் வெல்லும் அணிகள் 2-வதாக பேட்டிங் செய்வதையே விரும்பும். இந்நிலையில் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பந்த் டாஸில் தோற்றார். டாஸில் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இது இந்தியாவின் தோல்விக்கு முதல் காரணமாக அமைந்தது.

அனுபவமற்ற அணி:

இந்த தொடரைப் பொறுத்தவரை தென் ஆப்பிரிக்க அணியின் அனைத்து வீரர்களும் அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்திய அணி தனது அனுபவம் வாய்ந்த 5 வீரர்களை தொடரில் ஆடவைக்கவில்லை.

முற்றிலும் அனுபவமற்ற அணியை இந்தியா ஆடவைத்தது. இந்த அனுபவமின்மை இந்திய அணியின் தோல்விகளுக்கான காரணங்களில் ஒன்றாக அமைந்தது.

முதல் போட்டியில் 200 ரன்களுக்கு மேல் குவித்தும் இந்திய அணி தோற்றதற்கு இந்த அனுபவமின்மையே காரணம்.

ரிஷ்ப் பந்த்தின் கேப்டன்ஷிப்:

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு முதலில் கே.எல்.ராகுல்தான் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் காயத்தால் அவர் தொடரில் இருந்து வெளியேற ரிஷப் பந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பில் செயல்பட்டபோதே சில தவறான முடிவுகளை ரிஷப் பந்த் எடுத்திருந்தார். இது அந்த அணியின் வெற்றி வாய்ப்பை பல போட்டிகளில் பாதித்தது.

இந்த சூழலில் தென் ஆப்பிரிக்க தொடரில் ரிஷப் பந்த் கேப்டனாக அறிவிக்கப்பட்டபோது பலரும் தங்கள் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். அவருக்கு பதிலாக ஐபிஎல் கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியாவை கேப்டனாக்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது.

இந்த சூழலில், தான் ஒரு சிறந்த கேப்டன் அல்ல என்பதை மீண்டும் நிரூபித்து வருகிறார் ரிஷப் பந்த். 2-வது டி20 போட்டியில் இக்கட்டான சூழலில் இந்திய அணி இருக்கும்போது அதிரடி வீரரான தினேஷ் கார்த்திக்கை அனுப்பாமல், அக்சர் படேலை பேட்டிங் செய்ய அனுப்பியது உள்ளிட்ட பல விஷயங்களில் அவர் தவறு செய்துள்ளார். முதல் 2 போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்யும்போது முதலில் இந்தியாதான் வெற்றிபெறும் நிலையில் இருந்துள்ளது. அந்த டெம்போவை கடைசிவரை கொண்டுசென்று வெற்றிபெறும் வித்தை அவருக்கு தெரியவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவரது பீல்ட் பிளேசிங்குகளும் விமர்சனத்தை எழுப்பியுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக கேப்டன்ஷிப் தந்த நெருக்கடிகளால் அவரது பேட்டிங்கும் பாதிக்கப்பட்டது.

தவறான அணித் தேர்வு:

ஐபிஎல் போட்டிகளில் மிகச் சிறப்பான முறையில் பந்துவீசி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக். ஆனால் இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக ஆவேஷ் கான் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். உம்ரான் மாலிக்கை அணியில் சேர்த்திருந்தால் நிச்சயமாக புவனேஷ் குமாருக்கு துணையாக இருந்திருப்பார். அவர் இல்லாததால் இந்திய அணி புவனேஷ் குமாரை மட்டுமே சார்ந்திருக்க வேண்டி இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...