No menu items!

ஓபிஎஸ் மகன் – காயத்ரி கசமுசா! – மிஸ் ரகசியா

ஓபிஎஸ் மகன் – காயத்ரி கசமுசா! – மிஸ் ரகசியா

”ராகுல் காந்தி எம்.பி. பதவி தப்பிடுச்சு..ஓபிஎஸ் ரவீந்திரநாத் எம்.பி.பதவியும் தப்பிச்சுருச்சு” என்று வரும்போதே லேட்டஸ்ட் செய்தியுடன் வந்தாள் ரகசியா.

“ஆமாம் ஃபளாஷ் நியூஸ்ல பார்த்தோம். ராகுலுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கியது ஏன்னு குஜராத் நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி கேட்டிருக்கே..நடப்பு நாடாளுமன்றத் தொடர்ல ராகுல் காந்தி கலந்துப்பாரா? கலந்துக்க முடியுமா?”

“இதே கேள்வியைதான் டெல்லில கேட்டேன். காங்கிரஸ்காரங்க உற்சாகத்துல இருக்காங்க. உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி ராகுல் நாடாளுமன்றத்துக்கு வரலாம். ஆனால் சபாநாயகர்தான் முடிவெடுக்கணும். வர்ற வாரம் மணீப்பூர் கலவரங்கள் தொடர்பா நாடாளுமன்றத்துல விவாதம் நடத்த பாஜக முடிவு செஞ்சிருக்கு. இந்த நேரத்துல ராகுல் நாடாளுமன்றத்துக்கு வந்தா அது பெரிய சீனா மாறுமே பாஜக பயப்படுது. அதுனால சபாநாயகர் யோசிச்சுதான் முடிவெடுப்பாருனு சொல்றாங்க. இப்ப ராகுல் மேல எடுத்திருக்கிற நடவடிக்கையை நாடாளுமன்ற செயலகம் நீக்கினால்தான் ராகுலால் பார்லிமெண்டுக்கு வர முடியும்”

”அப்போ நிச்சயம் 2024 தேர்தல்ல ராகுலால் போட்டி போட முடியும். செம போட்டிதான். ரவீந்திரநாத் வெற்றிப் பெற்றது செல்லாதுங்கிறதையும் உச்சநீதிமன்றம் நிறுத்தி வச்சிருக்கே”

“ஆமாம், இன்னைக்கு விசாரணைக்கு எடுத்துக்கலனா உயர் நீதிமன்றம் கொடுத்த ஒரு மாத அவகாசம் போய்டும். உடனே எடுத்து விசாரிங்கனு உச்ச நீதிமன்றத்துல ரவீந்திரநாத் தரப்பு அவசர மனு போட்டாங்க. உச்ச நீதிமன்றம் இப்போதைக்கு செல்லாதுங்கிற தீர்ப்பை மட்டும் நிறுத்தி வச்சிருக்கு. அக்டோபர்ல விசாரிக்கிறோம்னு சொல்லியிருக்காங்க”

“ஆனா இந்த சந்தோஷத்தை ரவீந்திரநாத்தால கொண்டாட முடியாதுல. அவர் மேல காயத்ரி தேவின்றவங்க கம்ப்ளைண்ட் கொடுத்திருக்காங்களே?”

“ஆமா, இந்த விஷயத்துல அவருக்கு எப்பவுமே ரொம்ப கெட்டப் பேரு. அவருடைய பெண்கள் தொடர்பு குறித்து ஓபிஎஸ் கிட்ட ஏற்கனவே நிறைய கம்ப்ளைண்ட் போயிருக்கு. ஆனா அவரால மகனை கண்ட்ரோல் பண்ண முடியல. பாலா வொய்ஃப் ரவீந்திரநாத்கிட்ட வந்தப்பவே அவர் வண்டவாளங்கள் வெளில வர ஆரம்பிச்சிருச்சு”

“பாலா வொய்ஃப் எப்படி அவர் கூட லின்க் ஆனாங்க?”

“ரெண்டு விதமா சொல்றாங்க. பாலா மனைவி மலர் குடும்பமும் ஓபிஎஸ் குடும்பமும் நல்லா தெரிஞ்சவங்க. பாலா குடும்பத்தை சரியா பாத்துக்கலனு ஓபிஎஸ்கிட்ட புகார் சொல்ல மலர் ஓபிஎஸ்ஸை பார்க்க வந்திருக்காங்க. அப்ப ரவீந்திரநாத்தை சந்திச்சு அப்படியே கனெக்ஷன் வந்திருச்சுனு சொல்றாங்க. இப்படியில்லை, பாலா மனைவி ரொம்ப மாடர்னானவங்க அவங்க தன்னோட செட்டோட ஃபைவ் ஸ்டார் ஓட்டல் பார்ட்டிக்கெல்லாம் வருவாங்க. அங்க ரவீந்திரநாத்தும் வருவார். அப்படி கனெக்ஷன் ஆயிருச்சுனும் சொல்றாங்க. ரெண்டுமே கூட பாஸிபிள்தான்”

“அப்போ இந்த காயத்ரி தேவி?”

“இவங்களும் ரவீந்திரநாத்துக்கு நல்லா தெரிஞ்சவங்கதான். ஆனா எந்த இடத்துல சண்டை வந்தது? ஏன் கம்ப்ளைண்ட் கொடுத்தாங்கன்ற விவரம்தான் யாருக்கும் தெரியலை. நல்லா விசாரிச்சுட்டு உங்களுக்கு சொல்றேன். இன்னொரு விஷயமும் சொல்றேன். ஓபிஎஸ் மகன்னு போடாதிங்க. அவர் பேரை போடுறதுனா ஓபிஆர் போடுங்கனு சில செய்தியாளர்கள்கிட்ட ஓபிஎஸ் தரப்பு சொன்னதாகவும் செய்தி இருக்கு”

“அப்பாவுக்கு அவ்வளவு கோபமா? சரி, கொடநாடு தொடர்பா ஓபிஎஸ் போராட்டம் நடத்துன நாள்ல இந்த விவகாரம் வெளி வந்தது. போராட்டத்தை திசை திருப்ப நடந்த விஷயம்னு சொல்றாங்களே?”

“ஓபிஎஸ் தரப்பு அப்படி சொல்லுது. ஓபிஎஸ் கொடநாடு விவகாரத்துக்காக போராட்டம் நடத்துனது யாருக்குத் தெரியும்? இதெல்லாம் சும்மா. பாவம் ஓபிஎஸ்”

“கோடநாடு வழக்கு தொடர்பா அவர் நடத்தின போராட்டத்துக்கு வரவேற்பு இல்லையா?”

“தெரியாத மாதிரி கேக்குறிங்க. இந்த போராட்டத்துல ஓபிஎஸ் கட்சியில இருந்து பெரிய அளவுல யாரும் கலந்துக்கல. இதுல கலந்துக்கிட்டவங்கள்ல பலரும் தினகரனோட அமமுக கட்சித் தொண்டர்கள்தான். அதுவும் ஓபிஎஸ்ஸை வருத்தத்துல தள்ளியிருக்கு. பேசாம கட்சியை கலைச்சுட்டு தினகரனோட சேர்ந்துடலாம்னு அவரோட தேனி மாவட்ட ஆதரவாளர்கள் சொல்றாங்களாம். தினகரன் எப்படியாவது பாஜககிட்ட பேசி தேசிய ஜனநாயக கூட்டணியில சீட் வாங்கிடுவார்ங்கிறது அவங்களோட நம்பிக்கை.”

”பாஜக கூட்டணில ஓபிஎஸ்க்கு சீட் கிடைக்குமா?”

”கிடைக்க வாய்ப்பில்லனுதான் இப்ப உள்ள நிலைமை. தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்களை சின்னச் சின்ன குழுக்களா சந்திச்சு அவங்களுக்கு விருந்து கொடுத்துட்டு வரார் மோடி. அந்த வரிசையில் தென்னிந்திய எம்பிக்களுக்கு அவர் கொடுத்த விருந்துல கலந்துக்க அதிமுக கூட்டணி எம்.பி.க்களான தம்பிதுரைக்கும், ஜி.கே.வாசனுக்கும் அழைப்பு போயிருக்கு. ஆனா அதிமுகவோட ஒரே மக்களவை தொகுதி எம்பியான ஓ.பி.ரவீந்திரநாத்தை அவர் கூப்பிடலை. இதனால ஓபிஎஸ் அப்செட். விருந்துக்கே கூப்பிடலனா கூட்டணிக்கு எப்படி கூப்பிடுவாங்க”

“லாஜிக் கரெக்டா இருக்கு. ஆனா அண்ணாமலை ஓபிஎஸ்ஸை புகழ்ந்துக் கிட்டு இருக்கிறாரே?”

“ஆமாம். ஓபிஎஸ் பெரிய தலைவர். மக்களுக்காக அரும்பாடுபட்டவர், முதலமைச்சரா இருந்திருக்கார்ன்னு புகழ்ந்து அண்ணாமலை பேசியிருக்கிறார். இதைக் கேள்விப்பட்டு எடப்பாடியோட கோபம் அதிகமாகி இருக்கு. அதனால அண்ணாமலையோட நடைப்பயணம் தங்கள் மாவட்டத்துக்குள்ள நுழையும்போது அதிமுக மாவட்ட செயலாளர்கள் யாரும் அவரை வரவேற்க போக வேண்டாம்னு சொல்லி இருக்காராம் எடப்பாடி பழனிசாமி”

“ஓ விஷயம் இப்படி போகுதா? சரி, அதிமுக மாநாடு ஏற்பாடுகள் எந்த அளவுக்கு போய்ட்டு இருக்கு?”

“ஆகஸ்ட் 20-ம் தேதி நடக்கப்போற அதிமுக மாநாட்டை வெற்றியாக்கி பாஜகவுக்கு நம்ம செல்வாக்கை காட்டணும்னு மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி உத்தரவு போட்டிருக்கார். கட்சிக்காரங்க எல்லாரும் குடும்பத்தோட வரணும்னும் உத்தரவு போட்டிருக்கார். அப்படி குடும்பத்தோட வர்றவங்களுக்கான வாகனம், தங்குமிடம் மாதிரி விஷயங்களை மாவட்ட செயலாளர்கள் கவனிச்சுக்கணும்னும் சொல்லி இருக்கார். அதிமுக முன்னாள் அமைச்சர்களை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பி, இந்த மாநாடு எந்த அளவுக்கு முக்கியமானதுன்னு எடுத்துச் சொல்லவும் உத்தரவிட்டு இருக்கார்.”

“மாநாடு நடக்கறது ஓபிஎஸ் ஏரியாலயாச்சே… அவர் சும்மா இருப்பாரா?”

“அவர் எப்படி சும்மா இருப்பார்? முக்குலத்தோர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்கிட்ட ‘நீங்க அதிமுகவா இருந்தாலும் அதிமுக மாநாட்டுக்கு போகாதீங்க. எடப்பாடி நம்ம சமுதாயத்துக்குன்னு எதையுமே செய்யலை’ன்னு சொல்லிட்டு இருக்கார். அதைக் கேள்விப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார் போன்ற தலைவர்கள் அதே சமுதாய அமைப்பினர்கள்கிட்ட, ‘இதையெல்லாம் நீங்க நம்பாதீங்க. ஓபிஎஸ் முதல்வராவும், துணை முதல்வராவும் இருந்தப்ப இந்த சமுதாயத்துக்காக ஏதாவது செஞ்சாரா. சசிகலா குடும்பத்துக்கு மட்டும்தானே எல்லாத்தையும் செஞ்சிருக்கார். எடப்பாடி அப்படி இல்லை நம்ம சமூகத்து ஆட்களை கவுரவமாத்தான் நடத்தறார். அதனால மாநாட்டுக்கு வாங்க’ன்னு சொல்லிட்டு இருக்காங்க.”

“அண்ணாமலை நடைபயணத்தைப் பத்தி ஏதாவது நியூஸ் இருக்கா?”

“அண்ணாமலையோட நடை பயண பட்ஜெட் 75 கோடியாம். முதல் நாள் தொடக்க விழாவுக்கு ஆட்களை திரட்ட மட்டுமே ஒன்றரை கோடி ரூபாயை செலவு செஞ்சிருக்காராம். ஆனா இந்த செலவையெல்லாம் கட்சி செய்யலைன்னு சொல்லிக்கறாங்க. வழக்கப்படி அவரோட நலத்தை விரும்பற சில தொழிலதிபர்கள்தான் செஞ்சிருக்காங்கனு ஒரு பேச்சு இருக்கு”

“நாடாளுமன்றத் தேர்தல்ல போட்டியிடப் போறதில்லைன்னு அண்ணாமலை அறிவிச்சிருக்காரே?”

“அதிமுக தனக்கு சீட் ஒதுக்காது. அப்படியே ஒதுக்கினாலும் அதிமுக தொண்டர்கள் தனக்காக வேலை செய்ய மாட்டங்க. அதனால நாமளா எதுக்கு அசிங்கப்படணும்னு அண்ணாமலை நினைக்கறாராம். அதான் இப்ப தேர்தல்ல போட்டியிடப் போறதில்லைன்னு அறிவிச்சிருக்காரு.”

“திமுக சைட் நியூஸ் ஏதும் இல்லையா?”

”நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தேசிய அரசியலில் ஸ்டாலின் பங்கேற்பார். மாநிலத்தை உதயநிதி ஸ்டாலின் பார்த்துக் கொள்வார்னு ஒரு பேச்சு இப்ப அறிவாலயத்துல கிளம்பி இருக்கு. எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருந்தால் அப்ப ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வருவார்னு அவங்க சொல்றாங்க. முதல்வருக்கு இந்த யோசனையை டி.ஆர்.பாலுதான் சொல்லி இருக்காராம்.”

“கொஞ்ச நாளா அடக்கி வாசிட்டு இருந்த பிடிஆர், திடீர்னு நிர்மலா சீதாராமனை சந்திச்சு பேசி இருக்காரே?”

“இதுல உள்குத்து ஏதும் இல்லை. தமிழக அரசின் இலவச திட்டங்கள் தேவையானவங்களுக்கு மட்டும் போய்ச் சேரணும்கிறது பிடிஆரோட பாலிஸி. இதுக்காக அவர் நிதி அமைச்சரா இருந்தப்ப, தமிழ்நாட்டில் வருமான வரி செலுத்துவோர் பத்தின விவரங்களை மத்திய நிதித்துறை அமைச்சகத்துல கேட்டிருந்தார். தற்சமயம் நிதி அமைச்சர் சொல்லி வருமானவரித் துறை அந்த விவரங்களை பிடிஆருக்கு கொடுத்திருக்கு. அதுக்கு நன்றி சொல்லத்தான் அவர் நிர்மலா சீதாராமனை சந்திச்சி இருக்கார். இந்த விவரங்களை தலைமைச் செயலாளர் கிட்ட பிடிஆர் கொடுக்கப் போறாராம். கலைஞர் உரிமைத்தொகை உண்மையான பயனாளிகளுக்கு போய் சேர இந்த விவரங்கள் உதவும்னு பிடிஆர் தரப்புல சொல்றாங்க”

“அப்போ அவர் பாஜகவுக்கு கட்சி மாறல?”

“ஏன் உங்களுக்கு அவர் பாஜகவுல சேரணும்னு ஆசையா இருக்கா” சிரித்துக் கொண்டே கேட்டு கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...