No menu items!

கோபத்தில் சமந்தா

கோபத்தில் சமந்தா

’யானை படுத்தாலும் குதிரை மட்டம்’ என்ற பழமொழி இன்றைய தேதியில் சமந்தாவுக்கு பொருந்தும்.

சமந்தா இன்ஸ்டாக்ராம், ட்விட்டர் என சமூக ஊடகங்களில் பரபரப்பாக இருப்பவர். நாளொன்றுக்கு ஒரு அப்லோட்டாவது அவரது அக்கெளண்ட்களில் ஏறிவிடும்.

அப்படிப்பட்ட சமந்தா, கடந்த இரண்டு மாதங்களாக எந்த அப்லோடையும் தனது அக்கெளண்ட்டில் இருந்து பண்ணவில்லை.

இதைப் பார்த்து சில யூட்யூப் சேனல்களும், வெப்சைட்களும், ‘சமந்தாவுக்கு உடல்நிலை சரியில்லை. ஏதோ தீவிர பிரச்சினை’ என்று பரபரப்பை கிளப்பி விட்டன. ஆரம்பத்தில் இதைக் கண்டுகொள்ளாத சமந்தா, ஒரு கட்டத்திற்கு பிறகு தான் விழித்து கொண்டிருக்கிறார். ஆளாளுக்கு அவர்கள் மனதில் பட்டதை செய்தியாக வெளியிட்டது சமந்தாவை ரொம்பவே பாதித்து இருக்கிறது என்கிறது அவருக்கு நெருங்கிய வட்டாரம்.

இதனால், சமந்தாவின் மேனேஜர் இந்த மாதிரி செய்திகளை வெளியிட்ட யூட்யூப் சேனல்களுக்கும், இணைய தளங்களும் எதிராக வழக்கு தொடரப்படும் என்று கொஞ்சம் உச்சஸ்தாயில் கூறியிருக்கிறார்.

விசாரித்தவரையில் சமந்தா நலம் என்று தெரிய வருகிறது.

பொன்னியின் செல்வன் – கமல் போட்ட ப்ளான்!

மணி ரத்னம் இயக்கியிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படம் செப்டெம்பர் 30-ம் தேதி வெளியாகிறது. ஆனால் இப்படம் தொடர்பாக பல ஆண்டுகளுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர் கமல்.

அப்போது கமல் திட்டமிட்ட பொன்னியின் செல்வன் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ.

1989-ல் கமல் ஹாஸன் ஒரு தமிழ் இதழுக்கு பேட்டி ஒன்றை கொடுத்தார். அதில் ‘பொன்னியின் செல்வன்’ கதையை இயக்குநர் மணி ரத்னத்துடன் இணைந்து எடுக்க ஆசைப்படுவதாக கூறியிருந்தார்.

கமலை அடுத்து இப்படத்தில் இணைய பிரபு மற்றும் சத்யராஜ் இருவரும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்ட கமல், மிகப்பிரம்மாண்டமான செட்களை போடும் பணிகள் குறித்தும் திட்டமிடப்பட்டது.

பிரம்மாண்டத்தை மிரட்டும் வகையில் காட்டுவதற்காக விஎஃப்எக்ஸ் ஜாம்பவான்களை ஹாலிவுட்டிலிருந்து வரவழைக்கவும் கமல் திட்டமிட்டார்.

அந்நேரத்திலேயே இப்படத்தை பிரம்மாண்டமாக எடுக்க பட்ஜெட் இரண்டு கோடி என முடிவு செய்யப்பட்டது.

ஒளிப்பதிவுக்கு பி.சி. ஸ்ரீராம், இசைக்கு இளையராஜா என பிஎஸ் டீம் லிஸ்ட் தயாரானது.

23 வருடங்களுக்குப் பிறகு இப்போது மணி ரத்னம் இப்பொழுது பொன்னியின் செல்வனை எடுத்திருக்கிறார்.

காதலில் தேவி ஸ்ரீபிரசாத்?

சமீபத்தில் மரண ஹிட்டாக அமைந்த ‘புஷ்பா’ பாடல்களுக்கு இசையமைத்தவர் தேவி ஸ்ரீ பிரசாத்.

தமிழில் ’சச்சின்’ ‘சிங்கம்’ மாதிரி அவ்வப்போது கோலிவுட் பக்கம் வந்து இசையமைத்து வரும் இவர்தான் இன்று. தெலுங்கில் நம்பர் ஒன் இசையமைப்பாளர்.

43 வயதானாலும் இதுவரையில் திருமணம் செய்து கொள்ளாமல், காதல் கசமுசா கிசுகிசுக்களுடனும், ட்யூன்களை போடுவதில் இசையுடனும் பொழுதைக் கழித்து வரும் பேச்சிலர் இந்த டிஎஸ்பி.

டிஎஸ்பி தற்போது மீண்டும் வைரல் டாபிக் ஆகி இருக்கிறார். காரணம் பூஜிதா.

தெலுங்கில் இரண்டுப் படங்களில் நடித்துள்ள பூஜிதா பொன்னாடாவுடன் டிஎஸ்பி நெருங்கி பழகி வருவதாக கிசுகிசுக்கள் வட்டமடித்தப்படி இருக்கின்றன. ஆளாளுக்கு இவர்களுக்கு இடையே காதல் இருக்கிறது என்று கிசுகிசுக்களை அள்ளிவிட்டாலும், இரண்டு பேரும் இதுவரை மறுக்கவும் இல்லை. ஒப்புக்கொள்ளவும் இல்லை.

டிஎஸ்பி இந்த விவகாரத்தில் கடுமையான மெளன விரதம் இருந்து வருகிறார். ஆனால் சமீபத்தில் பூஜிதா வேறுவழியில்லாமல் பேச வேண்டிய சூழல் உருவானது.

டிஎஸ்பி காதலைப் பற்றிய கேள்விகள் எழுந்ததும், ‘நான் டிஎஸ்பியுடன் டேட்டிங் எல்லாம் போகவில்லை. நான் இப்பவும் சிங்கிள்தான்.’ என்ற கொந்தளித்து இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...