No menu items!

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டாவுடன் காதலா?

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டாவுடன் காதலா?

’நேஷனல் க்ரஷ்’ என்று கொண்டாடப்பட்ட ’ரஞ்சிதம்’ ராஷ்மிகா மந்தானா எந்தளவிற்கு உச்சத்தில் இருக்கிறாரோ அந்தளவிற்கு சர்ச்சைகளிலும் சிக்கிக்கொண்டிருக்கிறார்,

கன்னட சினிமாவில் அறிமுகமானாலும், ராஷ்மிகாவை வாரியணைத்து கொண்டது என்னவோ தெலுங்கு சினிமாதான்.

’கீதா கோவிந்தம்’ படம் ராஷ்மிகாவுக்கு என்று ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. அப்படத்தில் ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா,ஜோடியை ஒரு உண்மையான காதல் ஜோடியாகவே திரையில் ரசிக்குமளவிற்கு அப்படம் இருந்தது.

இதே ஜோடி அடுத்து ‘டியர் காமரேட்’ படத்தில் மீண்டும் இணைய இவர்கள் இருவரது உடல்மொழி அவர்களுக்குள் ஒரு நெருக்கமான உறவு இருப்பதை உறுதி செய்திருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் அடிக்க ஆரம்பித்தார்கள்.

அதிலிருந்து ஆரம்பித்தது ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா காதல் கிசுகிசு.

அடுத்தடுத்து அவர்கள் வேறு நட்சத்திரங்களுடன் நடித்தாலும், இவர்களுக்குள் அந்த உறவு தொடர்கிறது என்று பத்திரிகைகளும் எழுத ஆரம்பித்தன. ஆனால் இவர்கள் இருவரும் இது குறித்து மறுக்கவோ அல்லது ஒப்புக்கொள்ளவோ இல்லை.

இதற்கிடையில் கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றார்கள். இருவரும் தனித்தனியாக சுற்றுலா சென்றது போல சொன்னாலும், இருவரும் ஒரே நாளில் கிளம்பினர். சுற்றுலா முடிந்த ஒரே நாளில் திரும்பினர்.

சுற்றுலாவின் போது ராஷ்மிக தனது ரசிகர்களுடன் கலந்துரையாடும் வீடியோவில், பின்னணியில் ஒரு ஆண் குரல் கேட்டது. அது விஜய் தேவரகொண்டாவின் குரல்தான் என அடுத்த கட்ட சர்ச்சை கிளம்பியது.,

இப்படி இவர்கள் இருவரும் காதல் சர்ச்சை தொடர்பாக, எதையும் கண்டுகொள்ளாதது போல இருந்தாலும், மீடியா என்னவோ இதில் திவீரமாகதான் இருக்கிறது.

இந்நிலையில் சமூக ஊடகத்தில், ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் டேட்டிங்கில் இருக்கிறார்கள், இருவரும் ஒரே வீட்டில், ஒரே அறையில்தான் தங்கியிருக்கிறார்கள், இன்னும் செய்திகள் வரக்கூடும்’ என்று ஒருவர் கொளுத்திப் போட்டார்.

வழக்கமாக இதுபோன்ற கமெண்ட்களுக்கு எந்தவிதமான எதிர்வினையும் கொடுக்காத ராஷ்மிகா இந்த முறை உடனடியாக, ‘ஐயையோ ரொம்ப ஓவரா யோசிக்காதீங்க பாபு’ என்று தனது பதிலை தட்டிவிட்டிருக்கிறார்.

ராஷ்மிகா பதட்டத்தில் இந்த பதிலை போட்டிருக்கிறார். இதுவே இருவருக்கும் இடையில் காதல் இருக்கிறதோ என்று சந்தேகத்தை உறுதி செய்வது போல இருக்கிறது என்கிறார்கள்.


ஜி.டி. நாயுடுவாக மாதவன்!

சினிமாவில் இளசுகள் எல்லோரும் ரொமான்ஸ் செய்ய ஆசைப்படும் ’சாக்லேட் பாய்’ ஆக கொண்டாடப்பட்டு, இப்போது கதை, கதாபாத்திரங்களுக்கேற்றபடி நடிப்பதில் அக்கறை காட்டும் ’ஸ்கிரிப்ட் மேன்’ ஆக மாதவனின் சினிமா க்ராஃப் ரொம்பவே அழகாக இருக்கிறது.

கடைசியாக ‘ராக்கெட்ரி’ படத்தில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனாக நடித்ததோடு, படத்தை இயக்கியும் இருந்தார் மாதவன்.

இப்போது மீண்டும் தலைப்பு செய்திகளில் அடிப்பட ஆரம்பித்திருக்கிறார். காரணம் இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்படும் நம்ம கோயம்புத்தூரைச் சேர்ந்த ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ஜி.டி. நாயுடுவாக நடிக்கிறார்.

கோபால்சாமி துரைசாமி நாயுடு என்பதுதான் ஜி.டி. நாயுடுவின் முழுப்பெயர். 1937-ல் இவர் உள்நாட்டிலேயே மோட்டர் இன்ஜினை கண்டுப்பிடித்து எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்தார்.

ஜி.டி. நாயுடுவின் பயோபிக்கை எடுக்க பலர் முயற்சித்த நிலையில் எதற்கும் பிடிக்கொடுக்காத ஜி.டி. நாயுடு சாரிட்டீஸ், ஜி.டி.நாயுடுவின் பேரன், ஒரு வழியாக மீடியா ஒன் க்ளோபல் என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்திற்கு பச்சைக்கொடி காட்டியிருக்கிறார்கள்.

அமிதாப் பச்சன் நினைத்த ‘சீனி கம்’, ரஜினி நடித்த ஆங்கிலப்படமான ‘ப்ளட் ஸ்டோன்’, ஷாரூக்கான் நடித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, மாதவன் நடித்த ‘தம்பி’ உள்பட பல படங்களைத் தயாரித்த நிறுவனம்தான் இந்த மீடியா ஒன் க்ளோபல் என்டர்டெயின்மெண்ட்

’எங்க தாத்தா தன்னோட வாழ்க்கை, அவரோட கண்டுபிடிப்புகளைப் பத்தியெல்லாம் நிறைய ஆவணங்களை கொடுத்திருக்கார். அதெல்லாம் நூலகத்துல இருக்கு. எங்க தாத்தாவுக்கு நம்ம கல்வி முறையை மேம்படுத்துறல ரொம்ப ஆர்வம் இருந்துச்சு’ என்கிறார் ஜி.டி. நாயுடுவின் பேரன் ராஜ்குமார்


இயக்குநராக களமிறங்கிய விஜய் மகன் சஞ்சய்!

விஜய் உச்சத்தில் இருந்தாலும், ஒரே விஷயத்தில் மட்டும் ரொம்பவே தெளிவாக இருக்கிறார்.
தனது மனைவி சங்கீதாவை தவிர்த்து தனது மகள், மகன் பற்றிய செய்திகளோ, புகைப்படங்களோ எதுவும் வெளிவரக்கூடாது. எந்தவிதத்திலும் தனது பாப்புலாரிட்டி அவர்களது சொந்த வாழ்க்கையைப் பாதித்துவிட கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்.

ஆனாலும் சமூக ஊடகங்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், ப்ரைவஸி என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. சமீப காலமாக விஜய் மகன் சஞ்சய் பற்றிய செய்திகள் அதிகம் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.

விஜய் மகன் சஞ்சய்க்கும் சினிமா மீதுதான் ஆர்வம் அதிகம். ஆனால் தனது அப்பாவைப் போல் இல்லாமல் திரைக்குப் பின்னால் பரபரப்பாக செயல்பட விரும்புகிறாராம்.

சஞ்சய்க்கு டைரக்‌ஷனில் ஆர்வம் அதிகம். அதற்காக சினிமா தொடர்பாக படித்து முடித்திருக்கும் சஞ்சய் இப்பொழுது ஒரு குறும்படமொன்றை இயக்கி இருக்கிறார். ‘புல் த ட்ரிக்கர்’ [] என்ற பெயரில் இந்த குறும்படம் தயாராகி இருக்கிறது.

சஞ்சய் இப்படி ஒரு பாதையில் பயணிக்க விரும்பினாலும், அவரை நடிகராக அறிமுகப்படுத்த ஒரு பெருங்கூட்டமே ரவுண்ட் அடித்தப்படி இருக்கிறது.

தெலுங்கில் ஹிட்டான, விஜய் சேதுபதி அங்கே அறிமுகமான ‘உப்பண்ணா’ படத்தை ரீமேக் செய்ய விஜய் ஆர்வமாக இருக்கிறார். அதில் ஹீரோவாக தனது மகனை களமிறக்க விஜய் விரும்புகிறார் என்கிறார்கள்.

ஆனால் அதேநேரம் விஜய் சேதுபதியும் இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய விருப்பமாக இருக்கிறாராம்.
கூட்டிக்கழித்துப் பார்த்தால், ’மாஸ்டர்’ படத்தில் இணைந்ததால் விஜய் – விஜய் சேதுபதி நட்பினால் உப்பண்ணா ரீமேக்கில் சஞ்சய் ஹீரோவாகவும், விஜய் சேதுபதி தனது கதாபாத்திரத்திலும் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

ஆகமொத்தம் விஜயின் வாரிசை சீக்கிரமே சினிமாவில் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...