No menu items!

4DX ஃபார்மேட்டில் வெளியாகும் பொன்னியின் செல்வன்!

4DX ஃபார்மேட்டில் வெளியாகும் பொன்னியின் செல்வன்!

’பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகம் வெளியாக காத்திருக்கிறது.

இந்நிலையில், ’பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகம் IMAX ஃபார்மேட்டில் மட்டுமில்லாமல் 4DX ஃபார்மேட்டிலும் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளி வந்திருக்கின்றன.

அதென்ன 4DX ஃபார்மேட்?

4DX என்பது அதிநவீன சினிமட்டோக்ராஃபிக் டெக்னாலஜி. இந்த தொழில்நுட்பத்தை CJ4DPLEX. நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

4DX தொழில்நுட்பமானது, திரையில் பார்க்கும் காட்சிகளோடு, அதில் இடம்பெறும் சுற்றுப்புறத்தில் கேட்கும் மழை, காற்று, தண்ணீர், பனி, புகை என இவற்றின் பலவிதமான, நுணுக்கமான ஓசையையும் மிகத்துல்லியமாக காட்சியோடு இணைந்து கேட்கச் செய்யும் தொழில்நுட்பமாகும்.

4DX தொழில்நுட்பத்தில் படம் பார்க்கும் போது படம் பார்ப்பவர்கள் அமர்ந்திருக்கும் இருக்கையும் கூட காட்சிகளின் சூழலுக்கு ஏற்றவாறு மெல்லிய நகர்வை உருவாக்கும். இதனால் படம் பார்க்கும் போது, காட்சி நடக்கும் இடத்தில் நாமும் நேரடியாக சென்று பார்ப்பதை போன்ற உணர்வை அளிக்கும்.

பொதுவாக இந்த 4DX தொழில்நுட்பம், அட்ரினலினை தூண்டும் ஆக்‌ஷன் படங்கள், மிரட்டும் ஹாரர் வகையறா படங்கள், மனதை மெல்லியதாக்கும் அனிமேஷன் படங்கள், படபடக்க வைக்கும் லைவ்- ஆக்‌ஷன் படங்களைப் பார்க்கும் அனுபவத்தை இன்னும் பிரமாதமப்படுத்தும்.

இதனால் ’பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை’ 4DX தொழில்நுட்பத்தில் வெளியிட மணி ரத்னம் முடிவு செய்திருப்பதாக கூறுகிறார்கள்.

இந்தியாவில் 4DX ஸ்கிரீன்கள் எண்ணிக்கை மிகக் குறைவுதான். சூரத், அகமதாபாத், இந்தூர், நொய்டா, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, திருவனந்தப்புரம், கொச்சி, குர்கிராம், புனே, மும்பை மற்றும் நியூடெல்லியில் பிவிஆர் சினிமாஸில் இந்த 4DX ஸ்கிரீன்கள் இருக்கின்றன. அதேபோல் சினிபோலிஸ் ஆறேழு நகரங்களில் 4DX ஸ்கிரீன்களை வைத்திருக்கிறது.

4DX ஃபார்மேட்டில் வெளியாகும் முதல் தென்னிந்தியப் படம் ‘பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்’.

#ps, #ps2, #maniratnam, #4dx #imax, #trisha #vikram, #jayamravi, #karthi, #ponniyinselvan, #april28,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...