No menu items!

ரஜினிக்கு புதிய சிக்கல்?

ரஜினிக்கு புதிய சிக்கல்?

’ஜெயிலர்’ பட விழாவில் ரஜினி பேசியது இன்று எல்லா தளங்களிலும் எதிரொலித்து கொண்டிருக்கிறது.

பருந்து, காகம் கதை பல சர்ச்சைகளுக்கும், வாய்கால் வரப்பு தகறாறுக்கு வழிவகுத்திருக்கிறது.

யார் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்து பஞ்சாயத்து சிந்துபாத் கதையைப் போல நீண்டுகொண்டே இருக்கிறது. இதற்கெல்லாம் ‘ஜெயிலர்’ பட விழாவில் ரஜினி பேசியது தூபம் போட்டிருக்கிறது.

இந்த கருத்துப் பஞ்சாயத்து ஒரு பக்கம் இருந்தாலும், ரஜினியின் ஜெயிலருக்கு ஒரு புதிய பிரச்சினை உருவாகி இருக்கிறது.

பொதுவாகவே தமிழ் சினிமாவின் முன்னணி கமர்ஷியல் ஹீரோக்களான ரஜினி, விஜய், அஜித் ஆகியோர் நடிக்கும் படங்களுக்கு அதிகாலையில் சிறப்புக்காட்சி ஏற்பாடு செய்யப்படும். மிகப்பெரும் பட்ஜெட்டில் இவர்களது படங்கள் இருப்பதாலும், ஏராளமான ரசிகர்கள் இருப்பதாலும்தான் இந்த சிறப்புக்காட்சி.
திரைப்படங்கள் இப்பொழுதெல்லாம் ஒரு வாரம் ஓடினாலே பெரிய விஷயம் என்றாகிவிட்ட நிலையில், போட்ட பணத்தை பாக்ஸ் ஆபீஸில் எடுக்க வேண்டுமென்றால், சிறப்புக் காட்சி என்ற பெயரில் அதிக விலைக்கு டிக்கெட்களை ரசிகர்களுக்கு விற்பது வழக்கம். இதன் மூலம் முதல் மூன்று நாட்களிலேயே போட்ட பணத்தை ஓரளவுக்கு எடுத்துவிட முடியும் என்பதே இந்த கணக்கு.

ஆகஸ்ட் பத்தாம் தேதி ரஜினி நடித்திருக்கும் ‘ஜெயிலர்’ படம் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் ரஜினி படமென்றாலே அதிகாலை காட்சியை முதலில் பார்ப்பதில் கடும் போட்டி இருக்கும். ஆனால் இந்த முறை ஜெயிலருக்கு சிறப்புக்காட்சியை திரையிட அனுமதி மறுக்கப்படும் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு முன்பாக திரைப்படங்களை திரையிடக்கூடாது. இது முன்னணி நடிகர்களுக்கும் பொருந்தும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் ஜெயிலர் வசூலுக்கு சிறிய பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்திற்கு சிறப்புக்காட்சிக்கான அனுமதி அளிக்கப்படவில்லை. அதேபோல் ஜெயிலர் படத்திற்கும் சிறப்புக்காட்சி அனுமதி மறுக்கப்படுமா அல்லது ரஜினிக்காகவும், சன் பிக்சர்ஸூக்காகவும் அனுமதி வழங்கப்படுமா என ஒரு விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது.


அனிகா டேட்டிங்கா?

அனிகா சுரேந்திரன், இந்தப் பெயரை சொன்னால் பலருக்கு தெரியாமல் கூட போகலாம், ஆனால் அஜித்தின் மகளாக திரையில் நடித்த அந்த குட்டிப்பெண் என்றால் சட்டென்று எல்லோருக்கும் நினைவுக்கு வருமளவுக்கு அனிகா முகம் பதிந்திருக்கிறது.

குழந்தை நட்சத்திரமாக நடித்தபோதே, இவர் நிச்சயமாக கதாநாயகியாக நடிப்பார் என்று கோலிவுட்டே அடித்து சொன்னது.

அதுவும் நடந்தது. ஆனால் கோலிவுட்டுக்கு முன்பாகவே அனிகாவை கதாநாயகியாக்கி அழகுப்பார்த்தது தெலுங்கு சினிமா உலகம்.

இப்போது மலையாளப் படத்தில் நடித்து வரும் அனிகா, சமீபத்தில் மாலத்தீவிற்கு சென்றிருந்தார். அப்போது அங்கே எடுத்த புகைப்படங்களையும், காணொலிகளையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டு கொண்டே இருக்கிறார்.

இங்குதான் பிரச்சினை ஆரம்பித்திருக்கிறது. அனிகா அங்கே ஒரு கதாநாயகியாக அடையாளம் காணப்படுவதற்கு ஏற்ற வகையில் பட்ஜெட் உடைகளில், தமன்னா, நயன்தாரா பாணியில் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தார். அவரது பக்கத்திலேயே ஒரு தாடி வைத்த இளைஞரும் இருந்தார்.

இந்த இளைஞர்தான் இப்போது அனிகாவின் காதலன் என்று பரபரப்பாகி இருக்கிறது. மாலத்தீவில் எடுத்த புகைப்படங்களில் இவர் அனிகாவுடனேயே இருப்பது பல நெட்டிசன்களின் கற்பனைகளுக்கு கதவை திறந்துவிட்டிருக்கிறது.

அனிகா டேட்டிங்கா என்று பரபரக்கிறது இணையம்.

சில்க் ஸ்மிதா விஷயத்தில் கூட கடைசிவரை ஒரு தாடிக்காரரைதான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த தாடிக்காரர் யார் என்று இன்று வரை யாரும் சொல்லிக்கொள்ளவும் இல்லை.

அதேபோல் இப்போதும் ஒரு தாடிக்காரரா என்று விசாரித்தால், அந்த தாடிக்கார இளைஞர் ஒரு மலையாள நடிகராம். அனிகாவின் நண்பர்கள் வட்டாரத்தில் இவரும் ஒருவர். மற்றபடி எதுவும் இல்லை.

அனிகாவுக்கு இப்போதுதான் 18 வயதாகிறது. அவர் எங்கு சென்றாலும் பவுன்சர்களுக்கு பதிலாக அவரது அம்மாவே கூட செல்வதால், டேட்டிங் சமாச்சாரத்திற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை அடித்து சொல்கிறது அனிகா நட்பு வட்டாரம்.


தனுஷ் கால்ஷீட் எப்போது கிடைக்கும்?

இன்றைய நிலவரப்படி, தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிஸியாக இருப்பது தனுஷ்தான்.

இயக்குநர் நெல்சன், அடுத்து தனுஷ் படத்தை இயக்கப் போகிறார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது.
அது குறித்து விசாரித்த போதுதான், தனுஷின் கால்ஷீட் டைரியில் நெல்சன் படத்தை உடனடியாக பண்ணுவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிய வந்திருக்கிறது.

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படம் வெளியாவதற்கான வேலைகள் அனைத்து மும்முரமாக நடந்து வருகின்றன. இப்படத்திற்கு அடுத்து அவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் படத்தை இயக்குவதோடு நடிக்கவும் இருக்கிறார்.

இந்தப் படத்திற்கு பின்பு தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்த இரண்டுப் படங்களும் முடியவே ஒரு வருடம் பிடிக்கும். ஆனாலும் இதற்கு அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் திட்டமும் இருக்கிறதாம்.

இதற்கு அடுத்து நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் மட்டுமே அடிப்படும் ‘வட சென்னை -2’ படம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிமாறன் ’விடுதலை –2’ மற்றும் ’வாடிவாசல்’ ஷூட்டிங்கை முடித்துவிட்டு வரும் போது தனுஷூக்கும் இந்த மூன்றுப் படங்கள் முடிந்திருக்கும். அதனால் தனுஷின் கால்ஷீட்டுக்கு இப்போது ஏக டிமாண்ட் ஆகி இருக்கிறதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...