No menu items!

நயன்தாரா இடத்தை குறிவைக்கும் சமந்தா!

நயன்தாரா இடத்தை குறிவைக்கும் சமந்தா!

சினிமாவில் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திலும் வழக்கத்திற்கு மாறான, கொஞ்சம் போல்ட்டான ஒரு நடிகை அனைவரது கவனத்தையும் ஈர்ப்பது வழக்கம். இந்த வகையில் சமீபத்தில் சேர்ந்திருப்பவர் சமந்தா.

மாடலாக இருந்து சினிமாவிற்குள் நுழைந்தவர் எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் கவர்ச்சிக்குத் தாவினார். காதலித்தார். காதலித்தவரையே திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து ரசிகர்களுக்கு பரிசாக வெளியிட்டு கொண்டிருந்தார்.

பெரிய இடத்து மாப்பிள்ளை, சொத்து, புகழ் என எல்லாவற்றையும் ஒரு இன்ஸ்டாக்ராம் போஸ்ட் மூலம் இதெல்லாம் ஒன்றுமில்லை என தூக்கி வீசிவிட்டு மீண்டும் சினிமாவிற்கு திரும்பினார்.

கவர்ச்சியில் தன்னுடைய அடுத்தக்கட்ட வெர்ஷனாக கிறங்கடிக்கும் சமந்தா-2-வை காட்டி ’ஊ சொல்றீயா’ என அனைவரது கவனத்தையும் சிதறடித்தார்.

தற்போது கவர்ச்சியில் திகட்டுமளவிற்கு களத்தில் இருக்கும் சமந்தாவிற்கு பெரிய வருத்தம் இருக்கிறதாம். நயன்தாராவைப் போல சிக்காத சர்ச்சைகள் இல்லை. நயனை விட கவர்ச்சியில் துணிச்சல் காட்டியாயிற்று. ஆனாலும் என்னுடைய இந்த காரசாரமான ப்ரொபைலுக்கு சம்பளம் மட்டும் எவ்வளவு நைட்ரஜன் அடித்தாலும் சைலண்ட்டாக இறங்கும் ட்யூப்லெஸ் டயர் மாதிரி அப்படியே இருக்கிறதே வருத்தத்தில் இருக்கிறாராம்.

தற்போது கமிட்டாகும் படங்களுக்கு சமந்தா இரண்டு கோடி கேட்பதாக கிசுகிசுக்கிறார்கள். ஆனால் இவருக்கு பின்னால் வந்து விஜயுடன் ஜோடி சேர்ந்திருக்கும் ராஷ்மிகா, பூஜா ஹெக்டே மூன்று நான்கு என சமந்தாவை ஓவர் டேக் செய்திருக்கிறார்கள்.

இதனால் தான் வாங்கும் இரண்டை எப்படி நான்காக மாற்றுவது என்று காத்திருக்கிறாராம்.

அடுத்து விஜயுடன் நடிக்கும் படம் ஹிட்டானால், இந்த இரண்டு நான்காக மாறிவிடும். கவலைப்படாதீர்கள் என அவரது மேலாளர் வட்டாரம் சொல்ல சமந்தா சாந்தமாகி இருக்கிறாராம்..

ராம் சரணைச் சந்தித்த லோகேஷ் கனகராஜ்

இன்றைய நிலவரப்படி தென்னிந்தியாவில் சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் நட்சத்திரங்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் இயக்குநர் யார்?

  1. எஸ். எஸ். ராஜமெளலி
  2. பிரசாந்த் நீல்
  3. லோகேஷ் கனகராஜ்
  4. இந்தப் பட்டியலில் நீங்கள் 3-வதாக இருக்கும் லோகேஷ் கனகராஜை டிக் செய்திருந்தால், நீங்கள் அப்டேட்டாக இருக்கிறீர்கள் என்று உங்களுக்கு ஒரு லைக்கை நீங்களே போட்டு கொள்ளுங்கள்.

விஷயம் இதுதான். ’ஆர்.ஆர்.ஆர்.’ மற்றும் ’கே.ஜி.எஃப்-2’ இந்த இரண்டு தென்னிந்தியப் படங்கள் இந்திய அளவில் வசூலில் புதிய பாக்ஸ் ஆபிஸ் எண்களைக் காட்ட, ஒட்டுமொத்த கவனமும் தென்னிந்திய சினிமா பக்கம் திரும்பியது.

அந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே புத்தம் புதிய ‘விக்ரம்’ என்ற பாக்ஸ் ஆபீஸ் பாம் ஒன்றை கமலும், லோகேஷ் கனகராஜூம் தூக்கி அடித்திருக்கிறார்கள். இதன் தாக்கம் ரொம்பவே இருக்கிறது என்கிறார்கள்.

ராஜமெளலி மற்றும் பிரசாந்த் நீல் இவர்கள் இருவரும் தெலுங்கிற்கு ஏற்கனவே பரீட்ச்சயமாகிவிட்டதால், தற்போது தெலுங்கு சினிமாவில் லோகேஷ் கனகராஜூக்கு ஏக டிமாண்ட் ஆகியிருக்கிறதாம்.

’விக்ரம்’ படத்தின் வெற்றியைக் கொண்டாட ஹைதராபாத்திற்கு பறந்த கமல் மற்றும் லோகேஷை தனது வீட்டிற்கு வரவழைத்து விருந்து கொடுத்து கொண்டாடினார் மெகா ஸ்டார் சிரஞ்சீவி.

இந்த கொண்டாட்டத்திற்கு முன்பாகவே ஐந்து நட்சத்திர அறையில் தங்கியிருந்த லோகேஷை தனியாக வந்து சந்தித்து இருக்கிறார் சிரஞ்சீவியின் மகனும், முன்னணி கமர்ஷியல் ஹீரோவுமான ராம் சரண்.

இந்த சந்திப்பின் விளைவாக, லோகேஷூம் ராம்சரணும் இணைந்து படம் பண்ணும் வாய்ப்பு பிரகாசமாகி இருப்பதாகவும் தெரிகிறது. 2023-ல் இந்த ஜோடி தங்களது படம் பற்றி அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...