No menu items!

சொல்லி அடிக்கும் லோகேஷ் கனகராஜ்!

சொல்லி அடிக்கும் லோகேஷ் கனகராஜ்!

இன்றைய இளைய தலைமுறை இயக்குநர்களில் சோஷியல் மீடியாவின் பலத்தை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

’விக்ரம்’ படம் அறிவிப்புக்குப் பிறகு, அதைப் பற்றிய பேச்சே இல்லாமல் இருந்தது. ஆனால் ரிலீஸூக்கு முன்பாக ஆரம்பித்த விளம்பர ஆர்ப்பாட்டங்கள் இப்படத்தை பிஸினெஸ் விஷயத்தில் உச்சத்திற்கே கொண்டு சென்றது.

இதை நன்றாகப் புரிந்து கொண்ட லோகேஷ் கனகராஜ், விஜயுடன் மீண்டும் இணைந்திருக்கும் ’லியோ’ படத்திற்கான பப்ளிசிட்டி வேலையை ஸ்மார்ட்டாக செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

கூர்ந்து கவனித்துப் பார்த்தால், ‘லியோ’ பட ஃபர்ஸ்ட் லுக் வருவதற்கு முன்பாகவே, மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன், த்ரிஷா, சஞ்சய்தத் என ஒவ்வொருத்தரும் லியோவில் நடிப்பது பற்றி அடித்த கமெண்டை வைரல் ஆக்கினார்..

அடுத்து எல்சியூ என்ற லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் கான்செப்ட்டை தொடர்ந்து பேசும் ஒரு சமாச்சாரமாக ரசிகர்களிடையே பரபரக்க வைத்திருக்கிறார்.

அவரது நண்பர் ரத்னாவும் தன் பங்கிற்கு அவ்வப்போது சோஷியல் மீடியாவில் ஏதாவது ஒன்றை பதிவிட்டு லியோவை லைம் லைட்டிலேயே வைத்திருக்கிறார்.

ஷூட்டிங்கில் மிகப்பெரிய கேமராவை பயன்படுத்தும் விஷயத்தையும் கூட ஆக்‌ஷனுக்காக களமிறங்கிய பிரம்மாண்டமான கேமரா என டெம்போவை கிளப்பியிருக்கிறது லோகேஷ் டீம்.

மணிரத்னம், ஷங்கர், ராஜமெளலி மாதிரியான் பெரிய இயக்குநர்களின் படங்களுக்கு கூட இந்தளவிற்கு ப்ரமோஷன் பண்ணியது இல்லை. அதேபோல் எல்லோரும் ஆச்சர்யப்படுமளவிற்கு லோகேஷ் கனகராஜ் மீடியாவின் வெளிச்சத்தில் நனைந்து கொண்டிருப்பதற்கு இந்த மாதிரியான ப்ரமோஷன் ப்ளான்களும் காரணம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

#leo, #thalapathy67, #lcu, #logesshkanagaraj, #logi, #trisha, #mysskin, #gvm, #sanjaydutt ,#gauthammenon, #paramahamsa, #rathnakumar, #vijay,#thalapathy,


கவர்ச்சியை அதிகம் விரும்பும் மாளவிகா மோகனன்!

மலையாள சினிமாவை சேர்ந்தவராக இருந்தாலும், மும்பைவாசியாக இருக்கும் மாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் மும்பை நடிகைகள் பாணியை கடைப்பிடிக்கிறாராம்.

அதாவது புதிய படத்தில் கமிட்டாகும் போதே என்னென்ன காட்சிகள் இருக்கின்றன. எந்த மாதிரியான காஸ்ட்யூம்கள் அணிய வேண்டும் என எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுத் தெரிந்து கொள்கிறார்.

அடுத்து கவர்ச்சி விஷயத்தில் ரொம்பவே தாராளம் காட்டுகிறாராம்.

கதையின் படி, அந்த காட்சிக்கு தேவை என்றால் கவர்ச்சியாகவோ அல்லது நெருக்கமாகவோ நடிக்க தயங்குவதில்லை. இயக்குநர் காட்சியை விளக்கிவிட்டால் போதும், மற்றதை அவரே பார்த்து கொள்கிறார் என்கிறார்கள்.

இதனால் மாளவிகாவுடன் நடிக்கும் நடிகர்களுக்குதான் கூச்சமாக இருக்கிறதாம். அந்தளவிற்கு நடிப்பதில் ஒத்துழைப்பு கொடுக்கிறாராம்.

ஷூட்டிங் மட்டும்தான் இப்படியா என்றால் இல்லை அவர் ஷூட்டிங் வரும்போதே ஒட்டுமொத்த யூனிட்டையும் திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் கவர்ச்சியான உடையில் இயக்குநர் முன் வந்து ’ப்ரசண்ட் சார்’ என்கிறாராம்.

#master, #vijay, #thalapathy, #logeshkanagaraj, #malavika, #malavikamohanan, #glamour, #cinemalove,


ஹெச்.பி.ஒ- வை கழற்றிவிட்ட டிஸ்னி ஹாட்ஸ்டார்!

இந்திய ஒடிடி தளத்தில் அதிக எண்ணிக்கையிலான சந்தாதாரர்களுடன் முதலிடத்தில் இருப்பது டிஸ்னி ஹாட்ஸ்டார்.

ஸ்டார் டிவியின் நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், ஒரிஜினல்கள் மற்றும் டிஸ்னியின் தயாரிப்புகளை ஹாட்ஸ்டாரில் பார்க்கமுடியும். இவற்றுடன் புகழ்பெற்ற ஹெச்.பி.ஒ-வின் திரைப்படங்களும் ஒரிஜினல்கள், சீரியல்களையும் இதுவரை பார்க்க முடிந்தது.

ஆனால் இனி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஹெச்.பி.ஒ. நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், சிரீயல்கள் எதையும் பார்க்க முடியாது என்று டிஸ்னி ஹாட்ஸ்டார் அறிவித்திருக்கிறது.

வருகிற மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு ஹெச்.பி.ஒ-வின் கான்டென்ட்கள் எதுவும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இடம்பெறாது. இதனால் பிரபலமான வெப் சிரீஸ், கேம் ஆஃப் த த்ரான்ஸ், மாதிரியான படைப்புகளை இனி ஹாட்ஸ்டாரில் பார்க்க முடியாது.

#ot,t #ottindia, #hotstar, #disney, #hbo, #gameofthethrones, #webseries, #originals, #films ,#disneyhotstar,


அவதார் 2 – ஒடிடியில் எப்போது பார்க்கலாம்?

ஹாலிவுட்டின் ப்ளாக்பஸ்டர் ‘அவதார் 2’ – வே ஆஃப் வாட்டர்’ படம் வசூலில் பல புதிய சாதனைகளைப் படைத்திருக்கிறது.

இப்படத்தை ஒடிடியில் பார்க்கலாம் என காத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. வெகுவிரைவில் ‘அவதார் 2’ ஒடிடியில் ஸ்ட்ரீம் ஆக இருக்கிறது.

அமேஸான் ப்ரைம் வீடியோவில் இப்படம் ஸ்ட்ரீம் ஆகும் என்று அறிவிப்பு வெளியாகிறது.

மார்ச் 28-ம் தேதியை உங்களது காலண்டரில் குறித்து வைத்து கொள்ளுங்கள். பே ஆன் வியூ முறையில் குறிப்பிட்ட தொகையை செலுத்திதான் இப்படத்தை ஒடிடி-யில் கண்டுகளிக்க முடியும். என்கிறார்கள். ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று தெரிகிறது.

#OTT, #Hollywood, #blockbuster, #AmazonPrime, #AppleTV, #Vudu #AvatarTheWayOfWater,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...