No menu items!

ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் என்ன பிரச்சினை? – மருத்துவர் விளக்கம்

ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் என்ன பிரச்சினை? – மருத்துவர் விளக்கம்

கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, நலமுடன் இருப்பதாக ஈஷா யோகா அறக்கட்டளையின் சார்பில், ஜக்கி வாசுதேவின் எக்ஸ் தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜக்கி வாசுதேவுக்கு அவசரமாக அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு அவருடைய மூளையில் என்ன பிரச்சினை?

சத்குரு ஜக்கி வாசுதேவும் அவரது ஈஷா யோகா மையமும் தமிழ்நாடு, இந்தியா கடந்து உலகம் முழுமைக்கும் பிரபலமானதுய். உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் ஈஷா யோகா மையத்திற்கு சுற்றி பார்க்கவும் தியானங்கள் செய்யவும் வருகிறார்கள். சமீபத்தில்தான் ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதில் நடிகை தமன்னா, நடிகர் சந்தானம் உட்பட பலர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்தான், திடீரென ஜக்கி வாசுதேவுக்கு டில்லி அப்போலோ மருத்துவமனையில் செய்யப்பட்ட மூளை அறுவை சிகிச்சை குறித்து நேற்று தகவல் வெளியானது. ஜக்கி வாசுதேவ்வே தெரிவித்தபடி, நீண்ட காலமாக அவர் ஒற்றைத் தலைவலி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். கடந்த சில நாட்களாகவும் அதேபோல ஒற்றை தலைவலி மிகக் கடுமையாக இருந்ததுடன் வாந்தி மற்றும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அதற்கு சிகிச்சை எடுப்பதற்காகவும் பரிசோதனை செய்வதற்காகவும் தில்லி அப்போலோ மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார்.

நாள்பட்ட ஒற்றைத் தலைவலி என்பதால் தலையில் அவருக்கு எம்ஆர்ஐ உள்ளிட்ட முக்கிய பரிசோதனைகள் செய்யப்பட்டது. அந்த சோதனைகளின் முடிவில், அவருடைய மூளையின் ஒரு பகுதியில் இரண்டு முறை ரத்தக்கசிவு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது

இதை உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்த உடனடியாக அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது வெண்டிலேட்டர் அகற்றப்பட்டு அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பிறகு வார்டுக்கு மாற்றப்பட்ட ஜாக்கி தேவ் மயக்கத்தில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பி மருத்துவமனையில் ஓய்வில் இருக்கிறார்.

இந்நிலையில், தனக்கு இருந்த பிரச்சனை குறித்தும் இப்போது செய்யப்பட்டு இருக்கு அறுவை சிகிச்சை பற்றியும் மூளையில் வேறு எந்த விதமான பிரச்சினையும் இல்லை என்றும் அவரே விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

ஈஷா யோகா மையத்தில் சமீபத்தில் சிவராத்திரி முடிந்தது. அந்த சிவராத்திரி கொண்டாட்டத்திலும் அதற்கு சில மாதங்களுக்கு முன்பு இருந்தே அதற்கான வேலைகளிலும் கவனம் செலுத்தி வந்ததால் ஜக்கி வாசுதேவ் ஓய்வு இல்லாமல் இருந்திருக்கிறார். அதிக வேலை அழுத்தத்தின் காரணமாக, தலைவலி ஏற்படும்போது அவரே வலி நிவாரணிகளைப் பயன்படுத்தி வந்திருக்கிறார். அது தீவிரமடைந்ததால் கடந்த 4 வாரங்களாகவே தலைவலி கடுமையாக இருந்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

ஜக்கி வாசுதேவுக்கு சிகிச்சையளித்த நியூராலஜிஸ்ட் வினித் சூரி, இது தொடர்பாக கூறும்போது, “சத்குருவுக்கு தொடர்ச்சியாக தலைவலி இருந்திருக்கிறது. அதை அவர் பொருட்படுத்தால், ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது, மீட்டிங், உள்ளவற்றிலும் ஈடுபட்டிருக்கிறார். அதிக அழுத்தத்தின் காரணமாக ஒரு வாரத்திற்கு முன்பு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.

நிறைய வலி நிவாரணிகளை பயன்படுத்தியிருக்கிறார். கடந்த ஒரு வாரத்திறகுள் இரண்டு முறை அதிக அளவில் மூளையில் இருந்து (வெளிப்புறத்தில்) ரத்தப்போக்கு ஏற்பட்டு எலும்புவரை வடிந்திருக்கிறது.

இதனால் மூளையில் வீக்கம், மூளை நகர்வும் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்திய பிரதமர் மோடி, ஜக்கி வாசுதேவை அழைத்து நலம் விசாரித்து உள்ளார். இதை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜக்கி வாசுதேவ்வின் விசிறிகள் அவர் விரைவில் நலம் பெற்றுத் திரும்ப பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...