No menu items!

லோகேஷ் கனகராஜூக்கு சம்பள பாக்கியா?

லோகேஷ் கனகராஜூக்கு சம்பள பாக்கியா?

விஜய் நடித்த ‘லியோ’ படம் ஏகப்பட்ட எதிர்பார்புகளுக்கு இடையில் வெளியானது. இதற்கு காரணம், விஜய் படம் என்றாலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்பதால் எதிர்பார்பு அதிகமிருந்தது.

படம் வெளியாகி அதிக வசூல் செய்திருக்கிறது என்று தயாரிப்பி நிறுவனம் சார்பாக அறிவிப்பும் வெளியானது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜூக்கு சம்பள பாக்கி. ஆரம்பத்தில் ஐம்பது கோடி சம்பளம் பேசப்பட்டது. படத்தின் ப்ரீப்ரொடக்‌ஷன், ஷூட்டிங், எடிட்டிங், டப்பிங் என ஒவ்வொரு கட்டமாக லோகேஷூக்கு கொஞ்சம் கொஞ்சமாக சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் இன்னும் 5 கோடி சம்பளம் பாக்கி இருக்கிறது என்று ஒரு பேச்சு அடிப்பட ஆரம்பித்திருக்கிறது.

’விக்ரம்’ படத்திற்கு 30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும், அப்படம் வெற்றி பெற்றதால் சம்பளத்தை 50 கோடியாக லோகேஷ் கனகராஜ் உயர்த்திவிட்டார் என்றும் கூறப்பட்டது. விசாரித்த வகையில் லோகேஷூக்கு சம்பளம் 50 கோடி இல்லை என்கிறார்கள்.

‘விக்ரம்’ படத்தை இயக்க லோகேஷூக்கு வழங்கப்பட்ட சம்பளம் 10 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இதன் பின் இயக்கிய ‘லியோ’வுக்கு சம்பளம் 20 கோடி ரூபாய் தான் என்றும் கூறுகிறார்கள். அதுவும் விஜய் லோகேஷ் கனகராஜை கைக்காட்டியதால் 20 கோடிக்கு தயாரிப்பாளர் தரப்பு ஒப்புக்கொண்டதாம்.

இதனால் சம்பள பாக்கி என்பது இல்லை. யாரோ கிளப்பிவிட்ட புரளி என்பது போல் தயாரிப்பாளர் தரப்பில் கூறுகிறார்கள். இதனால் சம்பள பாக்கி பற்றிய கேள்விக்கு தயாரிப்பாளர் லலித் குமார், ‘லோகேஷ் சொல்லட்டும். அப்புறம் பார்க்கலாம்’ என்கிற ரீதியில் ஒரே வரியில் பதிலளித்துவிட்டு இடத்தை காலி செய்து விட்டார்.


கோடிகளில் கெடுபிடி போடும் தமன்னா!

த்ரிஷாவைப் போலவே சினிமாவில் அறிமுகமானதில் இருந்து இதுவரை கதாநாயகியாகவே நடித்து வருகிறார் தமன்னா.

இவருக்கு மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போது இவர் வாங்கிய சம்பளம் 2 கோடிதான். பல உச்ச நட்சத்திரங்களுடன் நடித்தப் போது கூட 1.5 கோடி முதல் 2 கோடி வரைதான் வாங்கினார்.

ஆனால் இப்போது ஒடிடி-களில் கவர்ச்சிகரமான நாயகியாக நடித்ததன் பலன், இவரது மார்க்கெட்டில் இப்போது ஒரு புது உச்சம்.

புதிய நடிகைகளின் வரவு அதிகமிருந்தாலும், தமன்னாவுக்கு வெப் சிரீஸூம், காவாலா பாடலின் மவுசும் சம்பளத்தை ஏற்ற கைக்கொடுத்திருக்கிறது. 1.5 கோடி கேட்டு வந்தவர் இப்போது, 3 கோடி சம்பளம் கேட்கிறாராம்.

ஆனால் தயாரிப்பாளர்கள் தரப்பில் தமன்னா 50 லட்சம் முதல் 60 லட்சம் வரை சம்பளத்தில் குறைத்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறதாம்.

திரைப்படங்கள் மற்றும் வெப் சிரீஸ் என்றால் 3 கோடிதான் என சம்பள விஷயத்தில் பின்வாங்காத தமன்னா, ’காவாலா’ மாதிரி கவர்ச்சிகரமாக ஒரு பாடலுக்கு ஆடவும், முக்கியமான கதாபாத்திரத்தில் சில காட்சிகள் மட்டும் நடிக்க வேண்டுமென்றால் 80 லட்சம் முதல் 1 கோடி வரை சம்பளம் வேண்டுமென்கிறாராம்.

ஆனால் இப்போது தமன்னாவிடம் அவரது புதிய கவர்ச்சி அவதாரத்திற்கு இன்னும் ரசனை ஏற்றும் வகையிலான கதைகளுடன் பலர் தொடர்கிறார்களாம். இதுதான் தமன்னாவின் சம்பள உயர்வுக்கு காரணம் என்கிறது அவருக்கு நெருங்கிய வட்டாரம்.


‘பையா 2’-க்கு நோ சொன்ன கார்த்தி, ஆர்யா!

’பருத்திவீரன்’ பட வெற்றிக்குப் பிறகு கார்த்திக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி ‘பையா’ படம். லிங்குசாமி இயக்கத்தில் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார்.

‘அஞ்சான்’ தோல்விக்குப் பிறகு துவண்டு கிடந்த லிங்குசாமி, அதிலிருந்து மீண்டு வர நீண்ட காலம் பிடித்தது. ஒரு வழியாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகும் வகையில் தெலுங்கு நடிகர் ராம் பொத்னேனியை வைத்து அவர் இயக்கிய ‘வாரியர்’ படமும் சரியாக ஓடவில்லை.

இதனால் தனது ஹிட்டான ‘பையா’வின் மவுசை வைத்து ‘பையா 2’ எடுக்கலாம் என களத்தில் இறங்கியிருக்கிறார் லிங்குசாமி.

’பையா 2’ என்பது பையாவின் தொடர்ச்சி அல்ல. வேறு கதை. வேறு களம். ஆனால் அதுவும் சாலைப் பயணத்தை அடிப்படையாக வைத்து நகர்கிற கதை. இதனால் ’பையா 2’ என்று பெயரிடலாமா அல்லது புதிதாக பெயர் ஒன்றை வைக்கலாமா என்ற யோசனையில் இருந்தார் லிங்குசாமி. ஆனால் அவரது நட்பு வட்டாரம், புதியப்படத்திற்கு ‘பையா 2’ என்று பெயரிடலாம். வியாபாரம் எளிதாக இருக்கும் என்று பரிந்துரைக்கவே ‘பையா 2’ என்று பெயரிட லிங்குசாமி ஒப்புக்கொண்டாராம்.

’பையா 2’ என்ற டைட்டிலோடு கார்த்தியை அணுகினார் லிங்குசாமி. ஆனால் கார்த்தி கால்ஷீட் ஃபுல் என்று கையை விரித்துவிட்டார். இதனால் லிங்குசாமியுடன் நட்புப்பாராட்டி வரும் ஆர்யாவை அணுகியிருக்கிறார். முதலில் ஓகே சொன்ன ஆர்யா இப்போது பின்வாங்கி இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
இதற்குப் பிறகு, லிங்குசாமி கார்த்தியைச் சந்தித்து பேசிய முயற்சியும் இப்போது பலன் அளிக்கவில்லையாம்.

’கதைதான் எல்லாமே. அது என்கிட்ட இருக்கு. புது பையனை வைச்சு ஹிட் கொடுக்கப் போறேன்’ என்று தெம்போடு லிங்குசாமி ‘பையா 2’ வேலைகளை ஆரம்பித்திருக்கிறாராம்.

அநேகமாக ‘பையா 2’ படத்தில் மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.

ஆகாஷ் இப்போது இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் படமொன்றில் நடித்து வருகிறார். அதில் ஆகாஷூக்கு ஜோடி ஷங்கரின் மகள் அதிதி. இந்தப்படம் முடியும் தருவாயில் இருக்கிறது.

இதனால் ஆகாஷூக்காக காத்திருக்கிறார் லிங்குசாமி. கூடிய விரைவிலேயே ’பையா 2’ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...