No menu items!

’லியோ’வில் மிரட்டும் கேமரா ரோபோ’!

’லியோ’வில் மிரட்டும் கேமரா ரோபோ’!

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக விஜய், சூர்யா, கார்த்தி ரசிகர்கள் மத்தியில் அதிகம் முணுமுணுக்கப்படும் வார்த்தை ‘எல்’சி’யூ’ அதாவது லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்பதுதான்.

விஜயுடன் இணைந்திருக்கும் ‘லியோ’ படத்திலும் லோகேஷ் கனகராஜ் தனது எல்சியூ-வை வைப்பாரா இல்லையா என்று ஒரு பட்டிமன்றமே சமூக ஊடகங்களில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் லோகேஷ் இப்போது சைலண்ட்டாக ஒரு வேலையைப் பார்த்திருக்கிறார்.

’விக்ரம்’ படத்தில் பரபரக்க வைத்த ஆக்‌ஷன் காட்சிகளை எடுக்க ‘மோகோபோட்’ கேமராவை வைத்து எடுத்திருந்தார்.

இப்பொது ’லியோ’ படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளையும் அதே மோகோபோட் கேமரா ரோபோவை [Mocobot. High-Speed Camera Robot] வைத்துதான் எடுத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

சண்டைக்காட்சிகளில் ஃபயரை பறக்கவிடும் இரட்டையர்கள் அன்பறிவ்தான் லியோவின் ஸ்டண்ட் மாஸ்டர்கள். இப்போது இவர்கள் வசம் மோகோபோட் கேமரா ரோபோ இருக்கிறது. இதனால் லியோவில் ஆக்‌ஷன் காட்சிகள் அசத்தலாக இருக்கும் என்கிறது லியோ படக்குழு.

மோகோபோட் என்பது இரண்டு ஹை ஸ்பீட் மோஷன் கண்ட்ரோல் ரோபோக்களை கொண்டிருக்கும். இந்த கேமரா ரோபோகளை வைத்து கொண்டு எந்தவொரு ஆளையோ அல்லது ஏதாவது ஒரு பொருளை மிகத்துல்லியமாக பின் தொடர்ந்து ஷூட் செய்ய முடியும். ஒரு விநாடிக்கு 5 மீட்டர் வரை செல்லும் இதன் வேகம் ஆக்‌ஷன் காட்சிகளை அதிர வைக்குமளவிற்கு ஷூட் செய்ய் உதவும். எந்த மாதிரியான அசைவுகளிலும் கூட துல்லியமாக எடுக்க முடியும். ஸூம், ஐரிஸ், ஃபோகஸ் என எல்லாவற்றையும் துல்லியமாக செய்ய இந்த மோகோபோட் உதவும்.

இதனால் லியோவின் க்ளைமாக்ஸூக்கு முந்தைய சண்டைக்காட்சி ரசிகர்களுக்கு பெரும் ஆக்‌ஷன் விருந்தாக இருக்கும் என்கிறார்கள்.


போதையில் தள்ளாடும் மலையாள சினிமா!

மலையாள சினிமா இப்போது கலகலத்து போயிருக்கிறது. காரணம் நட்சத்திரங்களைத் தள்ளாட வைக்கும் போதை.

இதனால் மலையாள நடிகர்கள் நடிகைகளின் சங்கம் அம்மா [AMMA], டிரைவர்கள் முதல் டைரக்டர்கள் வரை மொத்தம் 19 டெக்னிஷீயன்கள் சங்களை உள்ளடக்கிய பெஃப்கா [FEFKA] மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் என மலையாள சினிமாவின் முக்கிய அமைப்புகள் ஒன்று சேர்ந்து இரண்டு நடிகர்களுக்கு தடை விதித்திருக்கிறது. இந்த அமைப்புகள் எதிர்காலத்தில் இந்த இரு நடிகர்களுடன் இணைந்து பணியாற்றாது என்றும் தெரிவித்திருக்கின்றன.

அப்படி என்னதான் நடந்தது?

மலையாள சினிமாவை சேர்ந்த இரு நடிகர்கள் கண்ணியமாக நடந்து கொள்வது இல்லை. இவர்கள் இருவரும் சொன்ன நேரத்திற்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவதில்லை. எந்த அக்ரிமெண்டையும் மதிப்பதும் இல்லை. இதனால் அவர்களோடு பணியாற்றும் இதர நட்சத்திரங்களுக்கும், டெக்னிஷியன்களுக்கும் மன உளைச்சல்தான் ஏற்பட்டு இருக்கிறது என்று முதலில் பெயரை சொல்லாமல் பெஃப்கா அமைப்பு ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தது.

ஆனால் அடுத்த ஒரு வாரத்திலேயே ஷான் நிகம், ஸ்ரீநாத் பாஸி என இவர்கள் இருவரின் பெயரையும் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறது மலையாள சினிமா உலகம்.

’கும்பளங்கி நைட்ஸ்’ படத்தில் நடித்திருக்கும் ஷான் நிகம் மற்றும் ’ஹோம்’ படத்தில் நடித்திருக்கும் ஸ்ரீநாத் பாஸி இவர்கள் இருவரும் வரைமுறை இல்லாத அளவிற்கு, எதையும் கண்டுக்கொள்ளாமல், யாரையும் மதிக்காமல் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவந்திருக்கிறது.

இவர்களது கெட்டப் பெயருக்கு காரணா போதைதான் என்கிறார்கள். இதனால் மலையாள சினிமாவில் பரவி வரும் போதை கலாச்சாரத்தைத் தடுக்க கேரள அரசுடன் மலையாள சினிமா இணைந்து செயல்படவும் முடிவு செய்திருக்கிறதாம்.


’வாத்தி’ ஹீரோயினா? அலறும் தயாரிப்பாளர்கள்!

மலையாளத்தில்தான் அறிமுகம். அங்கே பிரித்விராஜ் உடன் நடித்தும் பெரிய அளவில் ஜொலிக்க முடியாமல் போனதால், மற்ற மொழிப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ‘வாத்தி’ பட கதாநாயகி சம்யுக்தா.

தனுஷூக்கு ஜோடியாக நடித்த ‘வாத்தி’ படம் சுமாராக போனாலும், ‘வா வாத்தி’ பாடல் மூலம் இங்கே தமிழ் சினிமாவில் க்ளிக் ஆகியிருக்கிறார்.

இங்கே அவர் ஒரு ரவுண்ட் வர ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, அவரைப் பற்றி எச்சரிக்கை புராணம் பாட ஆரம்பித்திருக்கிறது ‘வாத்தி’ படக்குழு.

சம்யுக்தாவை கமிட் பண்ண வேண்டுமென்றால், இதையெல்லாம் நீங்கள் எதிர்கொள்ள நேரிடலாம் என்று ஒரு பட்டியலை நீட்டுகிறார்கள். அதாவது நீங்கள் நினைத்த நேரத்தில் ஷூட்டிங்கை தொடங்க முடியாமல் போகலாம். திட்டமிட்ட மாதிரி ஷெட்யூலை முடிக்க முடியாமலும் போகலாம். இரண்டு அல்லது மூன்று மணி நேரம் லேட்டாகதான் வருவார். ப்ரமோஷனுக்கு பெரிய ஒத்துழைப்பு கொடுக்க மாட்டார். இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், ஷூட்டிங் ஆரம்பித்த உடனே அவர் போடுகிற கண்டிஷன்கள், சொல்கிற வேலைகளையெல்லாம் செய்ய ஒரு தனி குழு அமைந்தால்தான் முடியும். என இந்த பட்டியல் நீள்கிறது.

இதனால்தான் சம்யுக்தாவுக்கு வாய்ப்புகள் அதிகம் வரவில்லை என கிசுகிசுக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...