No menu items!

இடையழகி இலியானா கர்ப்பம்!

இடையழகி இலியானா கர்ப்பம்!

சமூக ஊடகங்களில் ஒரு நாளுக்கு நாலைந்து ரீல்களையும், போட்டோகளையும் போடும் ஒரு பெண் திடீரென நாலைந்து மாதங்களாக ஆளையே பார்க்கமுடியாமல் ஆப்செண்ட் ஆனால், அதே பெண் பொசுக்கென்று வந்து நான் இப்போ அம்மாவாக போகிறேன், ஆனால் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று சொன்னால் எப்படியிருக்கும்?

இதே அதிர்ச்சியைதான் கொடுத்திருக்கிறார் இடையழகி இலியானா. ‘நண்பன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பாரே அதே இலியானாதான்.

திடீரென ‘சீக்கிரம் வரப்போகுது. இனிமேலும் என்னால காத்திருக்க முடியாது. வா என் குட்டிச் செல்லமே’ [“Coming soon. Can’t wait to meet you, my little darling.”] என்று ஒரு தடாலடி ஸ்டேட்மெண்ட்டையும், ’MAMA’ என்று பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட டாலரையும் சேர்த்து சமூக ஊடகத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இப்படி ஒரு சந்தோஷமான செய்தி பகிர்ந்து கொண்ட இலியானா, குழந்தைக்கு அப்பா யார் என்றோ, தனக்கு திருமணம் ஆகிவிட்டதா இல்லையா என்பதையோ சொல்லவே இல்லை.

உடனே ஜேம்ஸ் பாண்ட்டை போல இணையத்தில் ஆராய்ச்சியில் இறங்கிய நெட்டிசன்கள், இலியான முன்பு ஆண்ட்ரூ நீம்போன் என்பவரைதான் முதலில் காதலித்தார். ’மிகச்சிறந்த கணவர்’ என்று இவரைதான் இலியானா புகழ்ந்து தள்ளினார். அவர்கள் இருவரும் டேட்டிங் போனார்கள் என்று ஒரு ஃப்ளாஷ்பேக்கை எடுத்துவிட்டார்கள்.

ஆனால் ஆண்ட்ரூவுடன் இருந்த காதல், எப்போவோ மோதலில் முடிந்துவிட்ட து என இலியானாவே 2019-ல் வெளிப்படையாக சொல்லிவிட்டார்.

அப்படியானால் இலியானாவின் மனம் கவர்ந்தவர் யார்?

வேறு யாரு.. பாலிவுட்டில் கிறங்கடிக்கும் அழகில் நளினமாய் ஆட்டம் போடும் காத்ரீனா கைஃப்பின் உடன்பிறப்புதான் என்கிறார்கள் நெட்டிசன்கள். செபாஸ்டின் லாரெண்ட் மைக்கேல்தான் காத்ரீனா கைஃப்பின் தம்பி. இவர் லண்டனில் வசிக்கும் மாடல். இவருக்கும் இலியானாவுக்கும் இடையேதான் கொஞ்ச முன்னால் பத்திகிச்சு என்று லவ் ரிப்போர்ட்டை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார்கள்.

#Mama, #KatrinaKaif,#SebastianLaurentMichel,#Ileana, #pregnancy, #AndrewKneebone,கீர்த்தி சுரேஷ் கல்யாணம்?

மளமளவென உச்சத்திற்கு போவதும், அதே வேகத்தில் இருக்கும் இடம் காணாமல் போவதும் சினிமாவில் ரொம்பவே சகஜம்.

அதற்கு சரியான உதாரணம் கீர்த்தி சுரேஷ். சினிமாவில் அறிமுகமானதுமே படபடவென முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார். கமர்ஷியல் ஹீரோயின் ஆக முக்கியத்துவம் பெற்றார். ஆனால் ஒரேயொரு தேசிய விருதுதான் வாங்கினார். அப்படியே நம் படைப்பாளிகள் அவர் நாம் சொல்கிற படி நடிப்பாரா விருது வாங்கிவிட்டாரே என்று ஓரங்கட்டிவிட்டனர்.

இதில் சிக்கிய கீர்த்தி சுரேஷ் ஒருவழியாக உற்சாகத்திற்கு வந்திருக்கிறார். காரணம் தெலுங்கில் இவர் நானியுடன் நடித்திருக்கும் ‘தசரா’ ஓரளவிற்கு வசூலைக் குவித்திருக்கிறது. நல்ல விமர்சனங்களையும் பெற்றிருக்கிறது.

இதனால் உற்சாகமான கீர்த்தி சுரேஷ், ரசிகர்களோடு கலகலப்பாக கலந்துரையாடினார்.
அங்கே தொட்டு, இங்கே தொட்டு கடைசியில் ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் கல்யாணத்தில் வந்து கொக்கியைப் போட்டார்கள்.

கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் கீர்த்தி சுரேஷ் நெருக்கமான நட்பில் இருக்கிறார். இவரைதான் விரைவில் திருமணம் செய்யப் போகிறார் என்ற கிசுகிசு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.

ஆனால் சுதாரித்து கொண்ட கீர்த்தி சுரேஷ் ‘அப்படியா சொல்லவே இல்ல’ என்ற வடிவேலுவின் மீம்ஸை போட்டு, எஸ்கேப் ஆகிவிட்டார்.

கீர்த்தி சுரேஷூக்கு மிகப்பெரும் நட்சத்திரத்தின் ஆதரவு இருப்பதால் அவர் இப்போதைக்கு திருமணம் செய்து செட்டில் ஆக வாய்ப்புகள் மிக மிக குறைவு. இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் இப்படியேதான் போகும் என்று கண் சிமிட்டுகிறது கோலிவுட் பட்சி.

#keerthysuresh, #dasara, #keerthisuresh, #marriage, #cinemalove, #nani,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...