No menu items!

மஞ்சு வாரியர் சம்பளம் எவ்வளவு?

மஞ்சு வாரியர் சம்பளம் எவ்வளவு?

மலையாள சினிமாவிலிருந்து ஹீரோயின்கள் இறக்குமதி ஆவது தமிழ் சினிமாவிற்கு அதிகம் பழக்கப்பட்ட சமாச்சாரம்தான்.

நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், அமலா பால், நிவேதா தாமஸ், நஸ்ரியா, பார்வதி, அசின், மஞ்சிமா மோகன், அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டின், பாவனா, நவ்யா நாயர், திவ்யா உன்னி என இந்த அழகான பட்டியல் மிகபெரியது.

மலையாளத்தில் முன்னணி நடிகைகளாக இருந்தாலும், அங்கே அவர்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை சம்பளம்தான்.

படங்கள் ஹிட்டானாலும், பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக தொடர்ந்து நடித்தாலும் கூட நடிகைகளின் சம்பளம் பத்து லட்சம் முதல் 20 லட்சங்கள்தான்.

ஆனால் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தால் அவர்களது சம்பளம் 20 லட்சத்திலிருந்துதான் ஆரம்பிக்கும். இதனால்தான் மலையாள நடிகைகள் தமிழ்ப்படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம்.

இந்த வகையில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த மஞ்சு வாரியர். தனது திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த மஞ்சு வாரியர், விவாகரத்திற்குப் பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

அதேவேகத்தில்தான் இங்கே தனுஷுடன் ‘அசுரன்’ படத்தில் நடித்தார். சமீபத்தில் அஜித்துடன் ‘துணிவு’ படத்திலும் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் நடிப்பதற்கு மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம் ஒன்னரை கோடி என்கிறார்கள். அதாவது மஞ்சு வாரியர் இதுவரையில் வாங்கிய சம்பளத்தில் அதிகப்பட்சம் துணிவுக்கு வாங்கிய சம்பளம்தானாம். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், அமலா பாலுக்கு அடுத்தப்படியாக அதிக சம்பளம் வாங்கும் மலையாள நடிகையாக மாறியிருக்கிறார் மஞ்சு வாரியர்.

#manjuwarrier, #thunivu, @ajith, #ak, #ajithkumar, #hvinodh, #thunivutamilmovie, #nayanthara, #keerthysuresh ,#amalapaul, #malayalam,


ரஜினியின் தங்கையாக ஜீவிதா ரீஎண்ட்ரி!

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக 1990-களில் வலம் வந்த ஜீவிதா, டாக்டர் ராஜசேகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். ஆனால் சினிமா மீது இருந்த அந்த பாசம் அவரை சில வருடங்களுக்கு முன்பு அவரை இயக்குநராகவும் மாற்றியது.

அம்மா ஜீவிதா வழியில் அவரது மகள் ஷிவானி ராஜசேகர் நடிகையானார். ஆனால் அவருக்கு ஜீவிதாவுக்கு கிடைத்த வரவேற்பும், சரியான வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

இதனால் இப்பொழுது ஜீவிதாவே நடிகையாக சினிமாவில் களமிறங்கப் போகிறாராம்.

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கவிருக்கும் ‘லால் சலாம்’ படத்தில் ரஜினிக்கு முக்கியமான கேமியோ ரோல் என்கிறார்கள். இப்படத்தில் ரஜினியின் தங்கையாக ஜீவிதா நடிக்க இருப்பதாக பேச்சு அடிப்படுகிறது.

1990-க்கு பிறகு சினிமாவில் நடிப்புக்கு முழுக்குப் போட்ட ஜீவிதா இப்பொழுது ஏறக்குறைய 32 ஆண்டுகளுக்குப் பிறகு நடிப்புக்காக மேக்கப் போட இருக்கிறார்.

’லால் சலாம்’ படத்தின் ஷூட்டிங் மார்ச் 7-ம் தேதி தொடங்கலாம் என்கிறார்கள்.

#rajini, #rajinikanth, #superstar, #jeevitha, #lalsalam, #aishwaryarajini, #aishwarydhanush, #vishnuvishal, #vikranth,


பிகினியில் அசத்தும் பொன்னியின் செல்வன் நடிகை!

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் ராஜராஜ சோழனின் காதலி வானதி கதாபாத்திரத்தில் நடித்தவர் மாடலும் நடிகையுமான சோபிதா துலிபாலா.

வானதி கதாபாத்திரத்தில் அமைதி தழும்ப நடித்திருக்கும் இவரது மற்றப்படங்களைப் பார்த்தால் பொன்னியின் செல்வன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியோ அல்லது மயக்கமோ வரலாம்.

காரணம் சோபிதா துலிபாலா கவர்ச்சியில் காட்டிவரும் தாராளமயமாக்கல்தான்.

சமீபத்தில் வெளியாகி இருக்கும் ‘த நைட் மேனேஜர்’ வெப்சிரீஸில் சோபிதா நெருக்கமான காட்சிகளில் தயக்கம் இல்லாமல் நடித்திருக்கிறார். ஒன்றா இரண்டா என்று இல்லாமல் முத்தக்காட்சிகளிலும், சிக்கென்ற உடலழகைக் காட்டும் பிகினியிலும் நடித்திருக்கிறார் சோபிதா.

ஆனால் இப்பொழுது இதைப் பார்த்து ரசிகர்கள் சோபிதாவை கலாய்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். காரணம் இவர் இப்படி நெருக்கமாக நடித்திருப்பது அனில் கபூருடன். இப்பொழுது 66 வயதாகும் அனில் கபூருடன் இப்படியெல்லாம் நடிக்க வேண்டுமா என்று பொறாமையில் சோபிதாவை பொறித்து எடுத்து கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

#ps1, #ponniyinselvan, #maniratnam, #sophita, #sopitha, #thenightmanager, #anilkapoor, #vanathi ,#sopithadulipala, #nagachaitanya,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...