No menu items!

நம்பிக்கையில் அண்ணாமலை டென்ஷனில் நயினார் – மிஸ் ரகசியா

நம்பிக்கையில் அண்ணாமலை டென்ஷனில் நயினார் – மிஸ் ரகசியா

“ஒருவழியா அமேதிக்கும், ரேபரேலிக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவிச்சுட்டாங்க” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“அந்த ரெண்டு தொகுதிகளும் காங்கிரஸ் கட்சியோட முக்கிய தொகுதிகளாச்சே.. அப்படி இருக்கும்போது அங்க வேட்பாளர்களை அறிவிக்கறதை ஏன் இப்படி இழுத்தடிச்சாங்க?”

“அமேதியில ராகுல் காந்தியையும், ரே பரேலியில பிரியங்கா காந்தியையும் நிறுத்தறதுதான் காங்கிரஸ் கட்சியோட திட்டமா இருந்துச்சு. அதுக்காக பிரியங்கா காந்திக்கு வீடுகூட ஏற்பாடு செஞ்சிருக்காங்க. ஆனா இந்த தேர்தல்ல நிக்கறதை பிரியங்கா காந்தி விரும்பல. தானோ தன்னோட கணவரோ தேர்தல்ல நின்னா, தாங்கள் மேல இருக்கற நில மோசடி வழக்கை பாஜக பிரச்சாரத்துல பயன்படுத்தும்னு அவங்க நினைச்சிருக்காங்க. அதே மாஅதிரி அமேதி தொகுதியில நிக்க ராகுல் காந்தியும் தயங்கி இருக்கார். ஆனா கட்சித் தலைவர்கள் இந்த ரெண்டு தொகுதிகள்ல ஏதாவது ஒண்ணுலயாவது அவர் போட்டி போடணும்னு சொல்லி இருக்காங்க. கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வற்புறுத்தின பிறகு ரே பரேலி தொகுதியில நிக்க அவர் சம்மதிச்சிருக்கார். அமேதியில கடைசி நேரத்துல வேற வேட்பாளரை நிறுத்தி இருக்காங்க.”

“அண்ணாமலை மேல நயினார் நாகேந்திரன் கோபமா இருக்கறதா சொல்லிக்கறாங்களே?”

“4 கோடி ரூபாய் பிடிபட்ட விஷயத்துல நயினார் நாகேந்திரனுக்கு இன்னும் அண்ணாமலை மேலதான் சந்தேகம். இதைப்பத்தி அண்ணமலைகிட்ட நேரடியாவே கேட்டுடறதுன்னு அவர் முடிவெடுத்து இருக்கார். போன வாரம் ஒருநாள் அண்ணாமலை கமலாலயத்துக்கு வரப்போறதா கேள்விப்பட்டு நயினாரும் கிளம்பி வந்திருக்கார். ஆனா நயினார் வர்றதை கேள்விப்பட்டு அண்ணாமலை கமலாலயம் வர்ற திட்டத்தையே மாத்திட்டார். இதை தெரிஞ்சுக்கிட்ட நயினார் நாகேந்திரன், ‘எத்தனை நாள் வராமல் தப்பிக்கிறார்னு நான் பார்க்கிறேன். பார்க்கும்போது கச்ச்சேரியை வச்சுக்கறேன்’னு உறுமிட்டு போனாராம். கமலாலயத்துல இப்ப இதைப் பத்திதான் பரபரப்பா பேசிக்கறாஅங்க.”

“இந்த அளவுக்கு அவர் கோபத்துல இருக்காரா?”

”ஆமா. 4 கோடி விவகாரத்துலருந்து எப்படி தப்பிக்கிறதுனு அண்ணாமலை ஒண்ணுமே சொல்லாம இருக்கிறாராம். 4 கோடிக்கு எப்படி கணக்கு கொடுக்கிறதுன்ற சிக்கல்ல நயினார் இருக்கிறார். தேர்தல் முடிஞ்சதும் நான் ஏற்பாடு செய்யறேன்னு அண்ணாமலை சொல்லியிருந்தாராம். ஆனா தேர்தல் முடிஞ்சதும் அண்ணாமலையை நயினார் தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கிறார். ஆனா அவர் தொடர்பு எல்லைக்கு வெளிலேயே இருக்கிறாராம். இந்தப் பண விவகாரத்துலருந்து எப்படி தப்பிக்கிறதுனு நயினார் டென்ஷனா இருக்கிறார்”

“சரி, அண்ணாமலை தரப்புல என்ன சொல்றாங்க?”

“அவங்க மேல தப்பு இல்லனு சொல்றாங்க. நயினார்தான் யோசிக்காம பண்ணி மாட்டிக்கிட்டார் அதுக்கு எதுக்கு அண்ணாமலையை இழுக்கிறார்னு சொல்றாங்க”

“அப்போ அண்ணாமலை கேம்ப்ல எல்லோரும் ஹேப்பியா இருக்காங்கனு சொல்லு”

“ஆமா. கம்மி ஓட்டுலயவாது ஜெயிச்சிடுவோம்னு அண்ணாமலை நம்பிக்கையா இருக்காராம். அதிமுககாரங்க நமக்கு ஓட்டுப் போடுறேன்னு சொல்லி கடைசி நிமிஷத்துல திமுகவுக்கு ஓட்டு போட்டுட்டாங்க. ரிசல்ட் வந்ததும் அதிமுகவினரை பாத்துக்கலாம்னு உற்சாகமா சொல்லியிருக்கிறார்”

“தேர்தலுக்கு முன்னால சத்தமா பேசிக்கிட்டிருந்த கவர்னர் ரொம்ப சைலண்டா இருக்காரே…இன்னுமா பேசக் கூடாதுனு சொல்லியிருக்காங்க?”

“அவர் டெல்லி மேலிடம் மேல வருத்தத்துல இருக்கிறார். அவரை தெலுங்கு பக்கத்துலருந்து நிறைய பேர் வந்து பார்க்கிறாங்க. அவர் அனேகமா தெலங்கானா கவர்னரா மாற்றப்படலாம்னு ஒரு நியூஸ் இருக்கு”

“எடப்பாடி பழனிசாமி கேரளா போயிருக்கிறதா கேள்விப்பட்டேனே?”

“ஆமாம். ஆயுர்வேத சிகிச்சைக்காக அவர் கேரளால தங்கி இருக்கார். அவருடன் கட்சிக்காரர்கள் யாரும் பேசுவதில்லையாம். முக்கியமா அதிமுக பெரிய தலைகள் யாரும் அவருடன் தொடர்புல இல்லையாம். ரிசல்ட் வர்றதுக்கு முன்னாலே இப்படி இருக்காங்களேனு எடப்பாடி புலம்புகிறார் என்று ஒரு செய்தி அதிமுக வட்டாரத்துலருந்து வருது“

“ஓபிஎஸ் எப்படியிருக்கிறார்?”

“அவருக்கும் இதே நிலைதசன். அவருடனும் யாரும் பேசுவதில்லையாம். இப்படி இந்த ரெண்டு பேர் இருக்கும்போது இன்னும் ரெண்டு பேர் உற்சாகமா இருக்காங்க..யார்னு சொல்லுங்க பார்ப்போம்”

“அடிக்கிற வெயில்ல புதிர்லாம் போடாதே…ஆளை சொல்லு”

“ஒகே. ஜி.கே.வாசனும் சரத்குமாரும். எல்லோருக்கும் போன் போட்டு உற்சாகமா பேசிக்கிட்டு இருக்காங்க. ரெண்டு பேருமே மத்தியில பாஜக ஆட்சிக்கு வந்துடும்னு எல்லோர்கிட்டயும் சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஓபிஎஸ்க்கு போன் போட்ட வாசன், கவலைப்படாதிங்க. அடுத்த அஞ்சு வருஷம் உங்களுக்கு அமோகமா இருக்கப் போகுதுனு சொல்லியிருக்கிறார்”

“சரத்குமார் என்ன சொல்றார்”

“பேசுறவங்ககிட்டலாம் பாஜகவுல சேருங்க. நல்ல வைட்டமின் சக்தியோடு வளர்ச்சி இருக்கும்னு கூப்பிடுகிறாராம்”

”அது என்ன வைட்டமின் சக்தி?”

“புரியாத மாதிரி கேட்கக் கூடாது. டெல்லில ஒரு முக்கிய தலைவருக்கு காட்ராக்ட் ஆபரெஷன் நடந்துருக்கு. வெளில யாருக்கும் சொல்லல. கண் ஆபரேஷன் செஞ்சும் கண்ல பிரச்சினை வந்துக்கிட்டே இருக்காம்”

“யார் அந்த முக்கிய தலைவர்?”

”இந்தியாவிலேயே அவர் ஒருத்தர்தானே தலைவர் அவரைத் தெரியாதா?” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...