No menu items!

கல்யாணமானாலும் Glamour ரூட்தான் – Kajal Agarwal

கல்யாணமானாலும் Glamour ரூட்தான் – Kajal Agarwal

திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு திருப்புமுனையாகதான் இருந்து வருகிறது.

சிலருக்கு வாழ்க்கையில் டேக் ஆஃப் ஆகும். உச்சத்தில் பறக்க ஆரம்பிப்பார்கள். ஆனால் உச்சத்தில் இருக்கும் நடிகைக்களுக்கு மார்க்கெட் ஃபால் ஆஃப் ஆக ஆரம்பிக்கும். இது ஒரு பொதுவான சமாச்சாரம்.

ஆனால் காஜல் அகர்வால் விஷயத்தில் இது எல்லாமே உல்டாவாக இருக்கிறது.

காஜல் அகர்வால் திருமணம் ஆவதற்கு முன்பாக, பரபரப்பாக நடித்து கொண்டிருந்த போது ஷங்கரின் ‘Indian 2’ படத்தில் கமிட்டானார். சில மற்றும் பல பிரச்சினைகளால் படம் கிடப்பில் போடப்பட்டது.

காஜல் அகர்வாலும் திருமணமாகி கர்ப்பம், பிரசவம், குழந்தை என செட்டிலாகி விட்டார்.

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் காஜலையும், இந்தியனையும் மறந்துப்போன நிலையில் இன்று ட்ரெண்டிங்கில் இருக்கிறார்கள் இதே காஜலும், இந்தியனும்.

இந்தியன் – 2 படத்தில் நடிப்பதால் காஜலுக்கு இப்போது வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்திருக்கின்றன. குறிப்பாக ஹீரோயினை மையமாக வைத்த woman centric பட வாய்ப்பு ஒன்றும் தேடி வந்திருக்கிறது.

ஆனால் ஒரு மைக்ரோ செகண்ட் கூட யோசிக்காமல் அந்த வாய்ப்பை மறுத்து இருக்கிறார் காஜல் அகர்வால்.

‘ஹீரோயினை மையமாக வைத்த கதைகளில் நடித்தால், அப்புறம் தொடர்ந்து வாய்ப்புகள் வராது. முத்திரை குத்தி ஒரமாக உட்கார வைத்துவிடுவார்கள். அதனால் க்ளாமர் கதை இருந்தால் மட்டும் என்னிடம் கொண்டு வாருங்கள். என் அழகு இன்னும் அப்படியேதான் இருக்கிறது’ என்று தனது மேனேஜர் தரப்பில் கூறியிருக்கிறாராம் காஜல் அகர்வால்.

இதைதான் சினிமாவில் ‘தாராள மனசு’ என்பார்கள்


Hollywood பட காப்பியா Samantha Ruth Prabhu படம்?

சமீபத்தில் ‘Myositis’ என்ற ஒரு வார்த்தை ட்ரெண்ட்டிங்கில் இருந்தது.

ஒரே காரணம் சமந்தா.

’எனக்கு மையோசைடிஸ்’ இருக்கிறது. இது auto immune பிரச்சினை. ஒவ்வொரு நாளும் கடினம்தான். ஆனால் நான் இன்னும் சாகவில்லை’ என்று கண்கலங்க கூறிய சமந்தாவைப் பார்த்து பரிதாபப்பட்டது ரசிகர்களின் இதயங்கள்.

அடுத்த சில நாட்களில் சமந்தா நடித்திருக்கும் ‘Yasodha’ திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இதில் சமந்தா ஆக்‌ஷன் காட்சிகளிலும் தூள் கிளப்பி இருக்கிறார். இந்தப் படத்தின் கதை வாடகைத்தாய் அதைச்சுற்றிய அரசியல்கள் பற்றியதாகவும் இருக்கிறது.

சமந்தா மீதுள்ள பரிதாபம் ‘யசோதா’ படத்தின் வசூலுக்கு உதவுமா என்று தயாரிப்பாளர் தரப்பு யோசித்து கொண்டிருக்க, இப்போது புது பேச்சு கிளம்பியிருக்கிறது.

‘யசோதா’ ஒரு ஹாலிவுட் படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது என சாட்டையைச் சுழற்றுகிறார்கள் ரசிகர்கள்.

2018 -ல் வெளிவந்த ஒரு ஆங்கிலப்படம் ‘Level 16’. இந்தப்படம் பெரிய அளவில் வெற்றிப் பெறவில்லை. அடுத்து இப்படம் திரையரங்குகளிலும் வெளியாகவில்லை. 2018-ல் நடைபெற்ற பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பிறகு, 2019-ல் சிபிசி டிவியில் திரையிடப்பட்டது.

இது ஒரு கேங்க்ஸ்டர் கதை. யசோதாவிலும் ஏறக்குறைய இதேபோல் சம்பவங்கள் இருக்கின்றன. ஆனால் வாடகைத்தாய் கான்செப்ட் இந்த ஹாலிவுட் படத்தில் இல்லையென்றாலும், லெவல் 16 மீதுள்ள ஈர்ப்பினால் கேங்க் ஆக்‌ஷனை அப்படியே கொஞ்சம் மாற்றி எடுத்திருக்கிறார்கள் இயக்குநர்கள் ஹரி மற்றும் ஹரீஷ் என்கிறார்கள் நெட்டிசன்கள்.


தெலுங்கு Super Star கிருஷ்ணா

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக முதலில் மகுடம் சூடியவர் கிருஷ்ணா.

அந்த மகுடம் மட்டும் இப்போது இங்கிருக்கிறது. மக்களின் அன்பு, புகழ், சொத்து, குடும்பம் என எல்லாவற்றையும் துறந்துவிட்டு நிரந்தர ஒய்வெடுக்க சென்றிருக்கிறார் கிருஷ்ணா.

காரணம் சிரீயஸான cardian arrest.

யார் இந்த கிருஷ்ணா என்றால், இன்று கோலிவுட்டில் கொடி கட்டி பறக்கும் கமர்ஷியல் ஹீரோ மகேஷ் பாபுவின் அப்பா என்று சொன்னால் இன்றைய தலைமுறையினருக்கு சட்டென்று புரியும்.

கிருஷ்ணாவின் முழுப்பெயர் கிருஷ்ணா கட்டாமனேனி. மனித வாழ்க்கையில் இருந்து விடுப்பட்டிருக்கும் அவருக்கு வயது 79.

கிருஷ்ணா தனது மனைவியை இழந்த சில நாட்களிலேயே தன்னுயிரையும் கொடுத்துவிட்டு அவரைச் சந்திக்க சென்றிருக்கிறார் என்பதால் கண்ணீரில் கரைந்து கொண்டிருக்கிறார் Prince Maheshbabu.

1942, மே மாதம் 30- தேதி கிருஷ்ணா பிறந்தார். 1961-ல் தெலுங்கு சினிமாவில் தான் ஒரு சூப்பர் ஸ்டார் ஆவோம் என்பதை அறியாமலேயே அடியெடுத்து வைத்தார். ’குல கொட்ரலு’, ’பருவு ப்ரதிஷ்டா’ என அடுத்தடுத்து நடித்தார். 1965-ல் ‘தேனே மனசுலு’ படத்தில் கதாநாயகன் ஆனார். 1967-ல் கிருஷ்ணா நடித்த ‘சாக்‌ஷி’ அவரை பிரபலப்படுத்தியது.

தெலுங்கு சினிமாவின் ஸ்டார் ஆக்டராக இவரது சினிமா க்ராஃப் சட்டென்று உச்சம் தொட்டது.

ஒரு நடிகராக இருந்தாலும் தெலுங்கு சினிமாவிற்கு இவரது பங்களிப்பு முக்கியமானது. 70 எம்.எம்., சினிமாஸ்கோப், ஈஸ்ட்மேட் கலர், டிடிஎஸ் என புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியவர் இவர்தான். டோலிவுட்டின் கெளபாய் ஆக நடித்த முதல் நடிகரும் இவரே,

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என இவருக்கு பன்முகம். தனது பத்மாலயா ஸ்டூடியோஸ் மூலமாக பல ப்ளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்திருக்கிறார். 350 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார் கிருஷ்ணா. 16 படங்களை இயக்கியும் இருக்கிறார்.

2016-ல் இவர் கடைசியாக நடித்தப்படம் ஸ்ரீ ஸ்ரீ.

கிருஷ்ணாவின் மறைவு தெலுங்கு சினிமாவிற்கு பெரும் இழப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...