No menu items!

விவாகரத்து செய்த பிரதமர்- அதிர்ச்சியில் கனடா!

விவாகரத்து செய்த பிரதமர்- அதிர்ச்சியில் கனடா!

18 வருட மகிழ்ச்சியான மண வாழ்க்கை. 3 குழந்தைகள். உலக அரங்கில் முக்கியமான தலைவர். இத்தனை அடையாளங்கள் இருக்கும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன் மனைவி சோஃபியாவை விவாகரத்து செய்கிறார். இன்று உலக அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஜஸ்டின் ட்ரூடோ 2015 ஆண்டிலிருந்து கனடாவின் பிரதமராக இருக்கிறார். ஸ்டைலிஷான சிரிப்பு, பேச்சு. இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவருடைய தந்தையும் கனடாவின் பிரதமராக இருந்தவர்தான். ஜஸ்டினுக்கு இப்போது 51 வயதாகிறது. இவரது மனைவி சோஃபியாவுக்கு 48 வயது. காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள் இப்போது பிரிகிறார்கள்.

என்ன நடந்தது?

ட்ரூடோ வெளியிட்டிருக்கும் பிரிகிறோம் அறிவிப்பில், ’பல அர்த்தமுள்ள கடிமான உரையாடல்களுக்குப் பிறகு நானும் சோஃபியாவும் பிரிவது என்ற முடிவை எடுத்திருக்கிறோம். ஒருவருக்கொருவர் அன்புடனும் மரியாதையுடனும் நெருங்கிய குடும்பமாய் தொடர்வோம்.’ என்று குறிப்பிட்டிருக்கிறார். பிரிவுக்கான காரணங்களை குறிப்பிடவில்லை.

மாண்ட்ரியல் நகரில் பள்ளி காலத்தில் சகோதரனின் தோழனின் வகுப்பு தோழியாக ட்ரூடோவுக்கு சோஃபியா அறிமுகமாகிறார். அதன்பிறகு 2003ல் ஒரு நடன நிகழ்ச்சியில் இருவரும் மீண்டும் சந்தித்துக் கொள்கிறார்கள். காதல் பற்றிக் கொள்கிறது. இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள். ட்ரூடோ சாமானிய குடும்பத்திலிருந்து வந்தவர் அல்ல. அவரது அப்பா கனடாவின் பிரதமராக இருந்தவர். நாடு முழுவதும் தெரிந்த குடும்பம்.

சோஃபியா குடும்பமும் வசதியானதுதான். அப்பாவுக்கு பங்கு சந்தை தொழில். சோஃபியா படிப்பு முடிந்ததும் விளம்பரத் துறையில் பணியாற்றியிருக்கிறார். பிறகு செய்தியாளராகவும் பணி புரிந்திருக்கிறார்.

2005ல் இருவரும் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். திருமண வாழ்க்கையின் பரிசுகளாக மூன்று பிள்ளைகள். மூத்த மகனுக்கு 15 வயதாகிறது. இரண்டாவது மகளுக்கு 13 வயது ஆகிறது. கடைசி மகனுக்கு 9 வயதாகிறது.

இதுவரை இவர்கள் பிரிவுக்கான காரணங்கள் வெளிப்படையாக தெரிகின்றன. பொது இடங்களிலும் அரசு விழாக்களிலும் இருவரும் எப்போதும் தங்கள் அன்பை வெளிப்படையாக வெளிப்படுத்துவார்கள். அதனால் மிகச் சிறந்த ஜோடி என்ற பிம்பமும் இவர்களுக்கு உண்டு. இந்த நெருக்கமான ஜோடி பிரிகிறதா என்று கனடா மக்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

ஆனால் சமீபமாய் இருவரும் ஒன்றாக விழாக்களுக்கு வருதுவது குறைந்துவிட்டது. கடைசியாக கடந்த மே மாதம் நடந்த இங்கிலாந்து மன்னராக சார்லஸ் முடிசூட்டிய நிகழ்ச்சிக்கு இருவரும் ஒன்றாக சென்றார்கள்.

கனடாவில் பதவியிலிருக்கும் பிரதமர் மனைவியை பிரிவது இது முதல் முறையல்ல, ட்ரூடோவின் தந்தையும் பிரதமராக இருந்தபோது மனைவியைப் பிரிந்து விவாகரத்து செய்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...