No menu items!

‘ஜெயிலர்’ ஹாலிவுட் பட காப்பியா?

‘ஜெயிலர்’ ஹாலிவுட் பட காப்பியா?

ரஜினியின் ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் ஏதாவது ஒரு வகையில் ரகளையைக் கிளப்புவது வழக்கம்.

இந்த முறை ‘ஜெயிலர்’ பட விழாவில் ரஜினி பேசிய சூப்பர் ஸ்டார் பட்டம், காகம் பருந்து கதை எல்லாமே இங்கே பேசுபொருளாகி இருக்கிறது. இன்றும் இணையத்தில் ரஜினி ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் டிஜிட்டல் யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் ‘ஜெயிலர்’ படத்தின் ஷோகேஸ் வெளியானதும், அடுத்த பரபரப்பு ஆரம்பமாகி இருக்கிறது.

இயக்குநர் நெல்சன் இயக்கியிருக்கும் இப்படத்தின் ஷோகேஸை பார்த்தவுடன், ஹாலிவுட் படத்தின் காப்பியா என்ற சர்ச்சை ஆரம்பமாகி இருக்கிறது.

‘Nobody’ என்ற படம் இப்போது ஒடிடி- தளத்தில் பார்க்க கிடைக்கிறது. இப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள், ஜெயிலரின் ஷோகேஸ் காட்சிகளைப் பார்க்கும் போது 2021-ல் வெளிவந்த ‘Nobody’ படத்தின் கதையைப் போலவே இருப்பதாக கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

‘Nobody’ படத்தில் ஹீரோவுக்கு வயது 50-க்கும் மேல் இருக்கும். அமெரிக்காவின் முன்னாள் இண்டலிஜென்ஸ் கம்யூனிட்டி அதிகாரி. தன் குடும்பத்துடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார். எதற்கும் சரிப்பட்டு வரமாட்டார் என்று சொல்லப்படுகிற ஹீரோ, எதிர்பாராத ஒரு பிரச்சினையில் புலியைப் போல பாய்ச்சல் எடுப்பார். எதிரிக்கும்பலை அதிரிபுதிரியாக போட்டுத்தாக்குவார்.

ஜெயிலர் காட்சிகளைப் பார்த்தால், ரிட்டயர்ட் ஆகி குடும்பத்தோடு அமைதியாக வாழும் ரஜினி, தனது குடும்பத்திற்கு பிரச்சினை என்று வந்தவுடன் ஆக்‌ஷனில் விஸ்வரூவம் எடுக்கிறார்.

இந்த இரண்டுப் படங்களின் அடிப்படை கரு ஒரே மாதிரியாக இருக்கிறது என்று குறிப்பிட்டு காட்டுகிறார்கள் ரசிகர்கள்.

கதையின் கரு ஒரே மாதிரியாக இருந்தாலும், பெரும் நட்சத்திரப் பட்டாளத்தை வைத்து திரைக்கதையில் நம்மூருக்கு ஏற்றமாதிரி கொஞ்சம் மாற்றியமைத்து, கூடவே ப்ளாக் காமெடி நகாசுகளை சேர்த்து ஜெயிலரை நெல்சன் கொடுத்திருப்பார் என்ற கமெண்ட் இப்போது வர ஆரம்பித்திருக்கிறது.

இதனால் ஒரிஜினல் ஜெயிலரா அல்லது காப்பி ஜெயிலரா என்பது ஆகஸ்ட் 10-ம் தேதி தெரிந்துவிடும்.


சூர்யாவுடன் இணையும் துல்கர் சல்மான்!

பான் – இந்தியா என்ற ஒரு வார்த்தை பிரபலமான பிறகு, இயக்குநர்களும் சரி, நடிகர்களும் சரி ஒரு விஷயத்தில் மிகத்தெளிவாக இருக்கிறார்கள்.

ஒரே படத்தை எடுத்து பல மொழிகளில் டப் செய்து ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் வெளியிட வேண்டுமானால் பெரிய பட்ஜெட் மட்டும் இருந்தால் போதாது. அந்தப் படத்திற்கு நட்சத்திர மதிப்பு இருக்கவேண்டும். அப்போதுதான் பல மொழிகளில் வெளியிட்டு காசு பார்க்க முடியுமென என்பதை புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

இதே பாணியில் ‘லியோ’, ’ஜெயிலர்’ என வரிசையாக தமிழில் படங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன.

இந்த பட்டியலில் இப்போது சூர்யாவும் இணைய இருக்கிறார். தற்போது நடித்து வரும் ‘கங்குவா’ படத்திற்குப் பிறகு, சூர்யா ’சூரரைப் போற்று’ பட இயக்குநர் சுதா கோங்ராவுடன் இணைய இருக்கிறார்.
இப்படத்திற்காக மலையாளம், தெலுங்கு, ஹிந்தி நட்சத்திரங்களை நடிக்க வைக்கும் திட்டமிடப்பட்டிருக்கிறதாம்.

சூர்யா நடிக்கும் இப்படத்தில் இடம்பெறும் முக்கிய கதாபாத்திரத்தில் அவரது தம்பி கார்த்தியை நடிக்க வைக்க சுதா பேசியிருக்கிறார். சூர்யா – கார்த்தி இதுவரை இணைந்து நடித்தது இல்லை என்பதால், இந்த கூட்டணிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் நல்ல வரவேற்பு இருக்கும் என திட்டமிட்டு இருக்கிறார்கள்.
கார்த்தி அடுத்தடுத்து படங்களில் நடித்த வருவதால், சுதா கொடுத்த வாய்ப்புக்கு நோ சொல்லிவிட்டாராம்.
இதனால் இப்போது துல்கர் சல்மானை வளைத்துப் போட்டிருக்கிறார்கள். மலையாளத்தில் மட்டுமில்லாமல், இவர் நடித்த ’சீதாராமம்’ படம் தெலுங்கிலும் துல்கருக்கு ஒரு மார்க்கெட்டை உருவாக்கி இருக்கிறது. இதனால் இந்த மூன்று மொழிகளிலும் வியாபாரத்தை எளிதில் முடித்துவிடலாம் என இப்போது தீர்மானிக்கப் பட்டிருக்கிறதாம்.

துல்கருக்கு இதுவரை வாங்காத சம்பளமாக, ஒரு வெயிட்டான சம்பளத்தையும் கொடுத்திருக்கிறார்கள்.


கர்நாடக முதல்வராகும் விஜய் சேதுபதி!

லேட்டஸ்ட் கிசுகிசு என்னவென்றால், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் வாழ்க்கையை படமாக எடுக்கும் வேலைகள் நடந்து வருகிறதாம். இதற்கு ‘லீடர் ராமைய்யா’ என்று டைட்டிலையும் கூட முடிவு செய்துவிட்டார்களாம்.

இப்படத்தை சத்யா ரத்னம் இயக்கவிருப்பதாகவும் தெரிகிறது. ’மக்களால் உருவாக்கப்பட்ட மன்னர்’ என்ற அடைமொழியுடன் இப்படம் வெளிவரும் என்கிறார்கள்.

இதையடுத்து, சித்தராமையா வாழ்க்கையை இரண்டுப் பாகங்களாகவும், முதல் பாகத்தில் அவரது இளமைப் பருவத்தையும், இரண்டாம் பாகத்தில் தற்போதுள்ள அரசியல் வாழ்க்கையையும் படமாக எடுக்கும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்படலாம் எனத்தெரிகிறது.

இதனால் இரண்டாம் பாகத்தில் சித்தராமையாவாக யாரை நடிக்க வைப்பது என்று யோசித்த போது, யாருடைய முகமும் செட்டாகவில்லையாம். ரூம் போட்டு யோசித்தவர்களுக்கு விஜய் சேதுபதி முகம் பொருத்தமாக இருக்கும் என தோன்றியிருக்கிறதாம்.

வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் இரண்டாம் பாதியில்தான் விஜய் சேதுபதி கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும். அதேபோல் இந்தப்படமும் இருக்கும் என்று சொல்லி விஜய்சேதுபதியின் கால்ஷீட்டை கேட்டிருப்பதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

விஜய் சேதுபதி கால்ஷீட் கொடுத்தால், கர்நாடக முதல்வராக திரையில் ஒரு தமிழன் தோன்றுவார் என்பதுதான் ஹைலைட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...