No menu items!

தல Dhoni பிடிவாதம் – CSK-வில் தொடரும் ஜடேஜா

தல Dhoni பிடிவாதம் – CSK-வில் தொடரும் ஜடேஜா

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் மனதில் இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி, அணியில் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து நீடிப்பாரா என்பதுதான். அந்த கேள்விக்கு தற்காலிகமாக ஒரு விடை கிடைத்துள்ளது.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அடுத்த ஆண்டிலும் ரவீந்திர ஜடேஜா நீடிப்பார் என்பதே அந்த பதில்.  சென்னை அணியில் ஜடேஜா நீடிப்பதற்கு தல தோனியின் பிடிவாதம்தான் முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.

இதைப்பற்றி விரிவாக தெரிந்துகொள்ளும் முன் சிஎஸ்கேவுக்கும் ரவீந்திர ஜடேஜாவுக்கும் எங்கே பிரச்சினை ஏற்பட்டது என்பதை முதலில் தெரிந்துகொள்வோம்.

2012-ம் ஆண்டில் 20 மில்லியர் டாலருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார் ரவீந்திர ஜடேஜா. அப்படி சென்னை வாங்கப்பட்ட நாள்முதல், அணியின் முக்கிய வீரராக இருந்தார். தனது அதிரடி ஆட்டத்தால் பல போட்டிகளில் சிஎஸ்கே அணிக்கு அவர் வெற்றியை தேடித் தந்தார். இதனால் கடந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி  15 கோடி ரூபாய் கொடுத்து ஜடேஜாவை தக்கவைத்தது. அணியின் கேப்டனாகவும் அவர்  நியமிக்கப்பட்டார். ஆனால்  சிஎஸ்கே அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, ஜடேஜாவின் ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. அத்துடன் சென்னை அணியும் பல போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. இந்த தொடர் தோல்விகளால் ஜடேஜாவை கேப்டன் பதவியில் இருந்து சிஎஸ்கே நிர்வாகம் நீக்கியது.

ஆரம்பத்தில் அவராகவே கேப்டன் பதவியில் இருந்து விலகியதாக சொன்னபோதிலும், அணி நிர்வாகத்தின் நிர்பந்தத்தால் அவர் பதவி விலகியது பிற்காலத்தில் தெரியவந்தது. இதன் காரணமாக ரவீந்திர ஜடேஜாவுக்கும் சிஎஸ்கேவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது.   தோனியின் தலைமையில் சில போட்டிகளில் ஆடிய ஜடேஜா, பின்னர் காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறினார்.

  சில காலம் கழித்து சிஎஸ்கே அணியை சமூக வலைதளங்களில் பின் தொடர்வதில் இருந்து ரவீந்திர ஜடேஜா பின்வாங்கினார். சிஎஸ்கே தொடர்பான பதிவுகளையும் தனது சமூக வலைதளத்தில் இருந்து நீக்கினார். இது சென்னை அணியில் இருந்து அவர் விலகுகிறார் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் சிஎஸ்கே அணியும் அவரை தக்கவைத்துக் கொள்வதில் விருப்பம் காட்டாமல் இருந்து வந்தது.

இந்த சூழலில் அடுத்த ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்னும் சில வாரங்களில் நடக்கவுள்ளது. இதற்கு ஏதுவாக ஒவ்வொரு அனியும் தாங்கள் விடுவிக்க  விரும்பும் வீரர்களின் பெயர்களை நவம்பர் 15-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்துதான் ரவீந்திர ஜடேஜாவை டெல்லி அணிக்கு கொடுத்து அவருக்குப் பதிலாக அக்‌ஷர் படேலையும், ஷர்துல் தாக்குரையும் வாங்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த தகவலை அறிந்ததும் கொதித்துப் போயுள்ளார் தல தோனி. தன்னுடன் ஆரம்ப கட்டத்தில் ஆடிய வீரர்கள் தொடர்ந்து தன்னுடன் இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதம் கொண்டவர் தோனி. 2 ஆண்டுகள் தடைக்கலத்துக்குப் பிறகு சிஎஸ்கே அணி மீண்டும் ஆடவந்தபோதே தோனி இந்த நிபந்தனையைத்தான் விதித்தார். இப்போதும் அதே நிபந்தனையை விதித்துள்ள தோனி, எந்த கட்டத்திலும் ஜடேஜாவை அணியில் இருந்து நீக்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்துள்ளார்.

தோனியின் இந்த பிடிவாதத்தால், ஜடேஜாவை அணியில் இருந்து நீக்கும் முடிவை சிஎஸ்கே நிர்வாகம் ஒத்திக்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் வேகப்பந்து வீச்சாளர்களான மில்னே, ஜோர்டன் ஆகியோரை விடுவிக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. மேலும் எந்தெந்த வீரர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்பது நவம்பர்  15-ம் தேதிவாக்கில்தான் தெரியவரும்.

இப்போதைக்கு ஜடேஜா   அணியில் தொடர்வதால் உற்சாகமாக இருக்கிறார்கள் சிஎச்கே ரசிகர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...