லேடி சூப்பர் ஸ்டார். நயன்தாரா விக்கி, ஹிந்தியில் அறிமுகமாகும் படம் ஜவான். இதில் ஷாரூக்கான் ஹீரோ. அட்லீ இயக்குநர்.
இப்படத்தின் ஷூட்டிங் இதுவரையில் மும்பையில் பரபரப்பாக நடைபெற்று வந்தது. இந்த ஷெட்யூலில்தான் ஷாரூக் மற்றும் நயன் சம்பந்தப்பட்ட காட்சிகள் மளமளவென எடுக்கப்பட்டன..
நயன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இந்த ஷெட்யூலில் நிறைவுப் பெற்றதால், சமீபத்திய திருமண ஜோடியான நயனும், விக்கியும் இரண்டாம் தேனிலவுக்காக ப்ளைட்டை பிடித்து பறந்துவிட்டார்கள்.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது ஷெட்யூல் சென்னையில் நடைபெறுகிறது. கதாநாயகி இல்லாமல் ஷூட்டிங்கா என்று யோசிப்பவர்களுக்கு கூடுதலாக ஒரு தகவல். இப்படத்தில் திபீகா படுகோனும் இருக்கிறார். இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் என்கிறார்கள்.
இப்போது சென்னையில் நயன் இல்லாத நேரத்தில், ஷாரூக் மற்றும் திபீகா சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து வருகிறார்கள்.’’
லிங்குசாமி சிறைத்தண்டனையின் பின்னணி
’எண்ணி ஏழு நாள்’ படத்தை தயாரிப்பதற்காக பிவிபி கேபிட்டல்ஸ் நிறுவனத்திடமிருந்து லிங்குசாமி கடன் வாங்கியிருந்தார். கடனை அடைப்பதற்காக லிங்குசாமி கொடுத்த காசோலை பவுன்ஸ் ஆனது. இதனால் ’எண்ணி ஏழு வருடங்கள்’’ கழித்து, காசோலை மோசடி செய்ததற்காக சைதாப்பேட்டை நீதிமன்றம் லிங்குசாமிக்கும், அவரது தம்பி சுபாஷ் சந்திர போஸூக்கும் 6 மாத சிறைத்தண்டனை விதித்திருக்கிறது.
நான் ஈ, இரண்டாம் உலகம் உள்பட பல பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரித்த நிறுவனம் பிரபல பிவிபி நிறுவனத்தின் துணை நிறுவனம் பிவிபி கேபிட்டல்ஸ். தென்னிந்திய சினிமாவில் பட தயாரிப்பு, விநியோகம், திரையங்குகள் என தவிர்க்க முடியாத நிறுவனமாக முன்னணியில் இருக்கும் பிவிபி நிறுவனத்தின் பிவிபி கேபிட்டல்ஸ் பட தயாரிப்புகளுக்கு ஃபைனான்ஸ் செய்து வருகிறது.
இந்நிறுவனத்திடமிருந்து 2014-ல் கார்த்தி மற்றும் சமந்தாவை வைத்து படமெடுப்பதற்காக ஃபைனான்ஸ் வாங்கியிருந்தார் லிங்குசாமி. ஆனால் அந்த படம் கைவிடப்பட்டது.
இதனால் வாங்கிய கடனை திருப்பி கேட்டது பிவிபி ஃபைனான்ஸ். வேறு வழியின்றி முதல் தவணையாக 36 லட்சம் ரூபாய்க்கு காசோலையை அனுப்பினார் லிங்குசாமி. ஆனால் அவரது வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாததால் காசோலை போன வேகத்தில் திரும்பி வந்தது.
இதையடுத்து, 2016-ல் லிங்குசாமி வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை. அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பிவிபி கேபிட்டல்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
அவ்வழக்கின் தீர்ப்பு எண்ணி ஏழு வருடங்கள் கழித்து நேற்று வெளியானது. லிங்குசாமி தரப்பில் தவறு இருப்பதால் அவருக்கும், அவரது தம்பி சுபாஷ் சந்திர போஸூக்கும் 6 மாத சிறைத்தண்டனையை 3-வது விரைவு நீதிமன்றம் விதித்தது.
ஆனால் இவ்வழக்கில் மேல் முறையீடு செய்ய லிங்குசாமிக்கு வாய்ப்பும் அளித்துள்ளதால், அவர் கைதாவது தற்போது சாத்தியமில்லை. மேல் முறையீட்டிற்கு பிறகே லிங்குசாமி மீதான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் இது குறித்து லிங்குசாமி தரப்பில் மெளனம காக்கப்பட்டு வருகிறது.
.
சென்னையில் ஜெயிலர் செட்
’ஜெயிலர்’ படத்தின் போஸ்டர் வெளியானதுமே, ஜெயிலர் அப்டேட்கள் இருக்கிறதா என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஆனால் தயாரிப்பு தரப்போ மெளனத்தை மட்டுமே பதிலாக கொடுத்து வருகிறது.
இந்நிலையில் ‘ஜெயிலர்’ பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், ரஜினி சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகள் போலீஸ் ஸ்டேஷன், சிறைச்சாலைகளில் நடக்க இருக்கிறது. இதற்காக பிரம்மாண்டமான செட் போட்டு வருகிறார்கள்.
சமீபகாலமாகவே செட் என்றால், ஒட்டுமொத்த படக்குழுவும் ரயிலிலும், ப்ளைட்டிலும் ஹைதராபாத்திற்கு பறப்பதும் ஓடுவதுமே வழக்கமாக இருந்தது. ஆனால் இந்த முறை போலீஸ் ஸ்டேஷன் செட்டை சென்னையிலேயே போட்டிருக்கிறார்கள்.
இதற்கு ஒரு முக்கிய காரணம், சமீபத்தில் தெலுங்கு சினிமா உலகில் நடந்த ‘டோலிவுட் பந்த்’. பெரும்பாலான படங்களின் ஷூட்டிங் அங்கே நடைபெறவில்லை. அடுத்து, இங்கே எழுந்த பெஃப்சியின் குரல். இங்கே ஆயிரக்கணக்கானோர் இருக்கையில், வெளி மாநிலத்திற்குதான் சென்று ஷூட் செய்ய வேண்டுமா என்ற எழுப்பிய கண்டனக்குரல்.