No menu items!

அதை குறைக்க முடியாது – கீர்த்தி ஷெட்டி!

அதை குறைக்க முடியாது – கீர்த்தி ஷெட்டி!

’வணங்கான்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வரும் கன்னட இறக்குமதி கீர்த்தி ஷெட்டி ரொம்பவே டல்லாக இருக்கிறாராம்.

சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் போதும் கூட ஏன் இந்த வருத்தம் என்று கேட்டால், சமீபத்தில் அவர் நடித்து வெளியான ‘த வாரியர்’ படம் எதிர்பார்த்தளவுக்கு பாக்ஸ் ஆபீஸ் கல்லா கட்டாமல் போனதுதான் என்கிறார்கள்.

ஆனாலும் கன்னடத்தில் தெலுங்கில் கொடுத்த தொடர் ஹிட்களால், தமிழில் மிகப்பெரிய எண்ட்ரீயை கொடுத்தே ஆகவேண்டுமென நினைத்த கீர்த்திக்கு வாய்ப்புகள் வந்தவண்ணம் இருக்கிறதாம்.

யார் ஹீரோ… சம்பளம் எவ்வளவு.. இந்த இரண்டு கேள்விகளுக்கும் அவர் எதிர்பார்க்கும் பதில் கிடைத்தால் மட்டுமே புன்னகைக்கிறாராம். இரண்டாம் கட்ட ஹீரோக்களுடன் நடிக்க விரும்பவில்லை என்றும், சம்பளமாக பெரிய இரண்டு கேட்பதாகவும், அதற்கு கீழே சம்பளத்தைக் குறைக்க தயார் இல்லை எனவும் வாய்ப்பு கொடுக்க வருபவர்களிடம் கீர்த்தி தரப்பிலிருந்து கண்டிஷன் போடப்படுகிறதாம்.
இதற்கிடையில் பாலா போட்ட கண்டிஷனால் வேறெந்த தமிழ்ப் படத்திலும் கமிட்டாகாமல் இருக்கிறாராம். இந்நிலையில் ‘த வாரியர்’ படமும் சரியாக போகாததால், எங்கே தனது தமிழ் எண்ட்ரீ சொதப்பி விடுமோ என கீர்த்தி தரப்பு டென்ஷனில் இருக்கிறதாம்.

ஹீரோ கூப்பிட்டால் போகணும் – மல்லிகா ஷெராவத்

’பாலிவுட்டில் என்னோடு நடிக்க மறுத்த ஹீரோக்களின் பட்டியல் மிகப்பெரியது. காரணம் நான் அவர்களோடு காம்ப்ரமைஸ் செய்து கொள்ளவில்லை’ என்று கொளுத்திப் போட்டிருக்கிறார் பாலிவுட்டின் கவர்ச்சி பாம் மல்லிகா ஷெராவத்.
ஹீரோக்கள், தங்களுடன் நடிக்கும் ஹீரோயின்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டிமென்று நினைக்கிறார்கள். அவர்கள் நில் என்றால் நாம் நிற்கவேண்டும், உட்கார் என்று உடனே உட்காரவேண்டும். எதைச் சொன்னாலும் அதை மறுவார்த்தை பேசாமல் செய்ய வேண்டும்.

அதிகாலை 3 மணிக்கும் கூப்பிட்டாலும் கூட உடனே ஹீரோ வீட்டிற்குப் போகவேண்டும். போனால் படத்தில் இருப்பீர்கள். போகவில்லை என்றால் அந்தப் படத்திலிருந்து தூக்கி அடிக்கப்படுவீர்கள்.’’ என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

மல்லிகா ஷெராவத் தனது வெளிப்படையான பேச்சில், ‘என்னால் முடிந்தவரை நல்ல கதாபாத்திரங்களை செய்ய முயற்சி செய்திருக்கிறேன். நானும் சில தவறுகளை செய்திருக்கிறேன். ஆனால் ஒரு நடிகையாக என்னுடைய சினிமா பயணம் மிக அருமையான ஒன்றாகவே அமைந்திருக்கிறது.’’ என்று சிரிக்கிறார்.

200 வருட வரலாறு – விக்ரம் – பா. ரஞ்சித் படம்

உடல்நலம் மீண்டும் தேறியப் பிறகு மீண்டும் பரபரப்பாகி இருக்கிறார் விக்ரம்.
விக்ரம் நடித்த ‘பொன்னியின் செல்வன்’, அடுத்து ‘கோப்ரா’ ஆகிய இரு படங்களும் திரையில் வெளியாவதற்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில்தான் விக்ரம் இயக்குநர் பா. ரஞ்சித்துடன் புதிய படத்தில் கைக்கோர்த்திருக்கிறார். சமீபத்தில்தான் இப்படத்திற்கான பூஜை போடப்பட்டது.

இப்படத்தின் கதைக்களம் பற்றிய தகவல் கோலிவுட்டில் கசிந்துள்ளது.
தனது படங்களில் வித்தியாசமான களத்தை கையிலெடுக்கும் பா.ரஞ்சித், விக்ரமுடன் சேரும் படத்திலும் வித்தியாசமான களத்தைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார். இப்படத்தில் 1800-களில் நடைபெறும் சம்பவங்களை திரைக்கதையாக அமைத்து இருக்கிறாராம்.

ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதை என்பதால், அதற்கான களம் அந்த காலத்தை பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும். இதனால் 1800 களில் இருப்பது போன்ற கட்டிடங்கள், தெருக்கள், கடைவீதிகள் என எல்லாவற்றையும் பிரம்மாண்டமான செட்டாக அமைத்திருக்கிறார்களாம். விக்ரமின் தோற்றமும் இப்படத்தில் கொஞ்சம் வேறு மாதிரியாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

இப்படம் பற்றி அடிப்படும் மற்றுமொறு கிசுகிசு, பிரம்மாண்டமான காட்சிகளை கண்டுகளிக்கும் வகையில் 3டி பார்மேட்டில் எடுக்கவும் பா.ரஞ்சித் திட்டமிட்டு வருகிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...