No menu items!

காதலை அறிவித்த தெருக்குரல் அறிவு: யார் அவரின் திமிரான தமிழச்சி?

காதலை அறிவித்த தெருக்குரல் அறிவு: யார் அவரின் திமிரான தமிழச்சி?

‘என்ஜாய் எஞ்சாமி’ புகழ் பாடகர் அறிவு, ’என் திமிரான தமிழச்சி’ என தனது காதலியை அறிமுகப்படுத்தியுள்ளார். யார் அவரின் திமிரான தமிழச்சி?

பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தில் ‘உரிமையை மீட்போம்’ பாடல் மூலம் அறிமுகமானவர், அறிவரசு கலைநேசன் எனும் ‘தெருக்குரல்’ அறிவு. விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் ‘வாத்தி ரெய்டு’ பாடலால் பிரபலமானார். தனுஷ், ஜீவா உள்பட பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் பாடகராவும் பாடலாசிரியராகவும் தொடர்ந்து பயணித்த அறிவு, ‘என்ஜாய் எஞ்சாமி’ ஆல்பம் பாடல் மூலம் உலகளவில் ஹிட்டானார்.

சினிமாவிற்குள் நுழையும் முன்பு, ‘தெருக்குரல்’ அமைப்பு மூலமாக வெளியிட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் வலி குறித்து தனிப் பாடல்களால் கவனம் பெற்றிருந்தவர், அறிவு. அதனாலேயே ‘தெருக்குரல்’ அறிவு என்று அறியப்பட்டார்.

இந்நிலையில், அறிவு தனது காதலை வெளிப்படுத்தியுள்ளதுடன் காதலி யார் என்பதையும் அறிமுகப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் “என் திமிரான தமிழச்சி” எனக் குறிப்பிட்டு கல்பனா அம்பேத்கர் என்ற பெண்ணைக் காதலிப்பதாகத் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், இருவரின் கால்கள் மட்டுமே தெரியும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘பல மைல்கள் ஒன்றாகவே பயணிப்போம். பழங்குடியினரை மூர்க்கத்தனமாக நேசிக்கும் காதலர்கள் நாங்கள்’ எனப் பதிவிட்டுள்ளார்.

அதே தேதியில் கல்பனாவும் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என தனது சமூக வலைதள பக்கங்களில், இருவரின் கால்கள் மட்டுமே தெரியும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘புதிய பாதையில் பயணம்’ (Journey Into a new path) என்று பதிவிட்டுள்ளார்.

யார் இந்த கல்பனா அம்பேத்கர்?

நீலம் பண்பாட்டு மையத்தின் மூலம் பா. ரஞ்சித் நடத்தி வரும் ‘மார்கழியில் மக்களிசை’ கலைத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர்தான் இந்த கல்பனா அம்பேத்கர். எம்.பி.ஏ. படித்துள்ள கல்பனா தற்போது சினிமாவில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். பெயரிலேயே அம்பத்கரை கொண்டுள்ள கல்பனா, அறிவை போலவே அம்பேத்கர் மட்டுமல்லாமல் பெரியார் சித்தாந்தங்களிலும் நாட்டம் கொண்டவர்.

கலையும் அரசியலும் இணைத்த இந்த காதலர்களுக்கு இப்போது சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...