No menu items!

ஐஸ்வர்யா ராஜேஷின் ஃப்ளாப்புகளும், சம்பளமும்..

ஐஸ்வர்யா ராஜேஷின் ஃப்ளாப்புகளும், சம்பளமும்..

கமர்ஷியல் படங்களை விட, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க அதிக ஆர்வம் காட்டிவரும் நடிகைகள் பட்டியலில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு எக்கச்சக்க ஏமாற்றம்.

அவர் நடித்த ’த க்ரேட் இந்தியன் கிச்சன்’, ‘பர்ஹானா’. ‘டிரைவர் ஜமுனா’, ‘சொப்பனசுந்தரி’ என எல்லா படங்களும் வசூல்ரீதியாக வெற்றிப்பெறவில்லை. இந்தப் படங்களில் கதையானது ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரங்களை சுற்றி நடக்கும் கதைகளாக இருந்தன. அதிலும் கதை மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷை நம்பி எடுக்கப்பட்ட படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுபக்கம், கமர்ஷியல் ஹீரோக்களின் படங்களில் அவர்களுக்கு நடிக்க வாய்ப்புகள் ஏதுவும் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு வரவும் இல்லை.

இதனால் ரொம்பவே தடுமாற்றத்தில் இருக்கிறாராம். அடுத்து என்ன செய்வது.. எந்த மாதிரியான படங்களில் நடிப்பது… இந்த மாதிரியான குழப்பங்கள் இருக்கிறதாம்.

ஆனாலும் சம்பள விஷயத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் 1.5 கோடி வேண்டும் என்பதில் ரொம்பவே கறாராக இருக்கிறாராம்.


அதிகம் கேட்கும் கமல்!

எல்லாம் திட்டமிட பட்டவை. ஸ்கிரிப்ட் எழுதி அதன்படி நடிக்கிறார்கள். சிலருக்கு மட்டும் ஆதரவு கொடுக்கிறார் கமல்.

இப்படி எத்தனையோ சந்தேகங்கள் இருந்தாலும், எக்கச்சக்கமான கமெண்ட்கள் கிளம்பினாலும் சரி கொஞ்சம் கூட அசராமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி விடுகிறார்கள்.

இப்போது பிக்பாஸ் சீசன் ஆரம்பிக்க இருக்கிறது. அதே நேரத்தில் அரசியல் களமும் சூடுப்பிடித்திருக்கிறது. இதனால் கமல் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

கமல் இப்போது சினிமாவில் பரபரப்பாக இருப்பதால், அடுத்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸூடன் இணைந்து களமிறங்க இருப்பதால், பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து அளிக்க வருவாரா என்ற குழப்பம் அதிகரித்து இருக்கிறது.

ஆனால் கமல் நிச்சயம் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து அளிப்பார். காரணம் அந்த நிகழ்ச்சி மேடையை தனது கருத்துகளை, கொள்கைகளை எடுத்துவிடுவதற்கான தளமாக பயன்படுத்தி வருகிறார். அதனால் ஜகா வாங்க மாட்டார். ஆனால் இப்போது இருப்பதாக கூறப்படும் குழப்பம், சம்பளத்தை ஏற்றி விடுவதற்கான யுக்தியாக இருக்கலாம் என்று கண் சிமிட்டுகிறது ஒரு தொலைக்காட்சி வட்டாரம்.


ரஜினி வீட்டில் என்ன நடக்கிறது?

ரஜினி ஒரு வழியாக தான் நடித்து கொண்டிருக்கும் படங்களின் ஷூட்டிங்கை முடித்துவிட்டார். இதனால் ஜெயிலர்’, ‘லால் சலாம்’ என இரண்டுப்படங்களும் ரிலீஸூக்கு தயாராகி வருகின்றன.

இந்நிலையில்தான் ரஜின் சிங்கிளாக மாலத்தீவிற்கு கிளம்பிவிட்டார். முதலில் இலங்கைக்குப் போனவர் பின்பு மாலத்தீவுக்கும் சென்றிருக்கிறார்.

இப்படி ரஜினி வெளிநாடு போகையில் அவரோடு மூத்த மகள் ஐஸ்வர்யாவும் சேர்ந்து செல்வது வழக்கம். ஆனால் இந்த முறை ஐஸ்வர்யா சென்னையில்தான் இருக்கிறார்.

இதுவே இப்போது பல யூகங்களுக்கு வழிவகுத்து இருக்கிறது.

ஐஸ்வர்யா தனுஷூடனான திருமண முறிவுக்குப் பின் இப்போது இரண்டாம் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற மாதிரியான செய்திகள் கடந்த இரண்டு வாரமாக உலாவருகின்றன.

ஐஸ்வர்யா நடிகர் ஒருவருடன் ரிசார்ட் ஒன்றில் தங்கியிருந்தார் என்று முதலில் ஒரு கிசுகிசு கிளம்பியது. இதை கிளப்பிவிட்டது ஒரு தெலுங்கு இணையதளம்.

இதையடுத்து, இங்கும் பல இணையதளங்கள் செய்திகளை வெளியிட்டன. ஆனால் அதில் அந்த நடிகர் யார் என்ற தகவல் எதுவும் இல்லை.

இந்நிலையில் ஐஸ்வர்யா இரண்டாம் திருமணம் செய்து கொள்ள போகிறார். உதவி இயக்குநரை ஐஸ்வர்யா திருமணம் செய்யும் எண்ணத்தில் இருக்கிறார். ஆனால் ரஜினி அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. மேலும் இந்த விஷயத்தில் மனமுடைந்த ரஜினி தனிமைக்காகவே மாலத்தீவு சென்றிருக்கிறார் என்று தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

’லால் சலாம்’ போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் நடப்பதால்தான் ஐஸ்வர்யா தனது அப்பாவுடன் மாலத்தீவிற்கு செல்லவில்லை என்கிறது ஐஸ்வர்யாவுக்கு நெருங்கிய வட்டாரம்.

அடுத்து ரஜினி இரண்டாம் திருமணம் செய்து கொள்வதில் மறுப்பு சொல்பவர் இல்லை. தனது இரண்டாவது மகள் இரண்டாம் திருமணம் செய்து கொள்வதில் முழு சம்மதம் தெரிவித்தார். அதற்கு காரணம் முதல் திருமணத்தில் செளந்தர்யாவுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை.

ஆனால் ஐஸ்வர்யா விஷயத்தில் மகன்கள் நன்றாக வளர்ந்துவிட்டார்கள். அதனால் இரண்டாவது திருமணம் என்பது சரியாக வராது என்று ரஜினி சொல்லிவிட்டதாகவும் தெரிகிறது.

அதனால் இரண்டாவது திருமணம் என்பது ஐஸ்வர்யாவுடைய அடுத்த தேர்வாக இருக்காது என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...