No menu items!

அன்று குப்பை கூட்டும் இளைஞன் – இன்று சிக்சர் சிங்!

அன்று குப்பை கூட்டும் இளைஞன் – இன்று சிக்சர் சிங்!

அணியின் வெற்றிக்கு ஒரு பந்தில் 2 ரன்களை எடுக்கவேண்டிய நிலை இருந்தாலே பல வீரர்களுக்கு கதிகலக்கும். ஆனால் நேற்றைய போட்டியில் கேகேஆர் அணியின் வெற்றிக்கு கடைசி 5 பந்துகளில் வெற்றிக்கு 28 ரன்கள் தேவை என்ற சூழலில், ‘அதென்ன 28… இன்னும் ரெண்டு கூட்டி 30 ரன்களாகவே வச்சுக்கோங்க என்று கடைசி 5 பந்துகளிலும் சிக்சர் விளாசி சாதனை படைத்துள்ளார் ரிங்கு சிங். இதன்மூலம் ஐபிஎல் 2023-யின் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளார்.

கடந்த வாரம்வரை பலருக்கும் எங்கு சிங் யாரென்றே கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரியாது. ஆனால் நேற்று நடந்த போட்டிக்கு பிறகு பலரும் கூகிளில் அவரைத்தான் தேடி தெரியாது. ஆனால் நேற்று நடந்த போட்டிக்கு பிறகு, ‘யாருய்யா நீ… இத்தனை நாளா எங்க இருந்தே?’ என்ற கணக்கில் அவரை கூகுள் செய்து தேடிக்கொண்டிருக்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.

யார் இந்த ரிங்கு சிங்?

பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற மெட்ரோ நகரங்களில் இருந்து உருவாவார்கள். அப்படி உருவாகும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் பணக்காரர்கள் வீட்டு பிள்ளைகளாகத்தான் இருப்பார்கள். கிரிக்கெட் பிட்ச் முதற்கொண்டு வீட்டிலேயே அனைத்தையும் சொந்தமாக வைத்திருப்பார்கள். ஆனால் இப்படி எந்த வசதியும் இல்லாத… இன்னும் சொல்லப்போனால் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்தான் ரிங்கு சிங்.

உத்தரப் பிரதேச மாநிலம்தான் ரிங்கு சிங்கின் சொந்த ஊர். அங்குள்ள அலிகார் பகுதியில் வீடுகளுக்கு காஸ் சிலிண்டர்களை சப்ளை செய்யும் கான்சந்திர சிங்கின் 3-வது மகன்தான் ரிங்கு. ரிங்குவின் அப்பாவுக்கு மொத்தம் 5 குழந்தைகள். அப்பாவுக்கு குறைந்த வருமானம் என்பதால் கஷ்ட ஜீவனம். படிக்க வைப்பதற்கே பணம் செலவு செய்ய யோசிக்கும் அப்பாவிடம் போய் கிரிக்கெட் கோச்சிங்குக்கு பணம் கேட்டால் கொடுபாரா?

“நமக்கெல்லாம் கிரிக்கெட் சரிப்பட்டு வராது… போய் ஒழுங்கா படி இல்லைன்னா கூலிவேலை செய்து பொழைக்கற வேலையைப் பாரு” என்று சொல்லிவிட்டார்.

ரிங்கு சிங் கவலைப்படவில்லை. அப்பா சொன்னபடி படிக்காவிட்டாலும், கூலி வேலை தேடினார். 13 வயதில் கிரிக்கெட் பயிற்சி மையத்தை கூட்டிப் பெருக்கும் வேலை கிடைத்துள்ளது,. அந்த வேலையில் சேர்ந்த ரிங்கு, மாலை நேரங்களில் கிரிக்கெட் கோச்சிங்கில் சேர்ந்திருக்கிறார். அப்பாவின் முதலாளி ஒரு பேட்டை வாங்கிக் கொடுக்க, அதையே மூலதனமாக்கி கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினார். உள்ளூர் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்க கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் இறக்கிவிட்டார். இதனால் உத்தரபிரதேச அணியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.

ஒரு கட்டத்தில் கேகேஆர் தேர்வாளர்களுக்கு அவரது ஆட்டத்தைப் பற்றி தெரியவர 2018-ம் ஆண்டில் 80 லட்சம் கொடுத்து வாங்கிப் போட்டிருக்கிறார்கள். ஆனால் போதுமான வாய்ப்புகள் இல்லாததால் அவரால் எதுவும் சாதிக்க முடியவில்லை. இதனால் 2021 ஏலத்தில் ரிங்குவின் மதிப்பு குறைந்தது. 2018-ல் 80 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கிய கேகேஆர் அணியே இப்போது 55 லட்சம் ரூபாய்க்கு அவரை வாங்கியது.

தன் மதிப்பு குறைந்ததைப் பற்றி கவலைப்படாமல் எப்போதும்போல் உற்சாகமாக இருந்துள்ளார் ரிங்கு. தனக்கென்று ஒரு வாய்ப்பு வரும் என்று அவர் நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார். அந்த நம்பிக்கைதான் நேற்று அவரை ஹீரோவாக்கி உள்ளது. கடைசி 5 பந்துகளில் மொத்தம் 30 ரன்களை அடித்து கொல்கத்தாவை ஜெயிக்க வைத்திருக்கிறார்.

“வாழ்க்கையில் பலரும் எனக்காக பல உதவிகளைச் செய்திருக்கிறார்கள். இன்றைய இன்னிங்ஸை அவர்களுக்காக நான் அர்ப்பணிக்கிறேன்” என்று கண்ணீர் மல்க சொல்லியிருக்கிறார் ரிங்கு சிங்.

ரிங்குவின் சாதனை பற்றி அவரது அப்பாவிடம் கேட்டதற்கு, “நான் அவனுக்கு ஒரு கிரிக்கெட் பேட்டைக்கூட வாங்கிக் கொடுக்கவில்லை. மாறாக கிரிக்கெட் ஆடுவதற்கு பதில் படி என்றுதான் சொன்னேன். ஆனால் தானாக உழைத்து இந்த நிலைக்கு அவன் உயர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.

வசதியான சூழலில் வாழ்ந்தவர்கள் பெற்ற வெற்றியைவிட எந்த வசதியும் இல்லாத ரிங்குவின் வெற்றி பெருமைக்குரியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...