No menu items!

மூளைக்குள் மைக்ரோசிப் – எலன் மஸ்க் கடவுள் ஆகிறாரா?

மூளைக்குள் மைக்ரோசிப் – எலன் மஸ்க் கடவுள் ஆகிறாரா?

உங்கள் காதலிக்கு காதல் மெயில் அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

மொபைலையோ லேப்டாப்பையோ திறக்க வேண்டும். ஜிமெயில் போக வேண்டும். கடிதத்தை டைப் செய்ய வேண்டும். பிறகு ‘Send’ பட்டணை அழுத்த வேண்டும். ஜிமெயிலிலிருந்து வெளிவர வேண்டும். இத்தனை காரியங்களை செய்ய வேண்டும்.

இனி நீங்கள் எதையும் செய்ய வேண்டாம். காதலிக்கு மெயில் அனுப்ப வேண்டும் என்று நினைத்தால் போதும் தானாக ஜிமெயில் திறந்து விடும். காதலிக்கு நீங்கள் எழுத நினைக்கும் விஷயங்களை எழுத தொடங்கிவிடும். அனுப்பிவிடலாம் என்று நினைத்தால் போது அனுப்பிவிடும் என்கிறார் எலன் மஸ்க்.

’நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை’ என்று 1962ல் கண்ணதாசன் எழுதினார். எலன் மஸ்க் 2024ல் அதற்கான முதல் அடியை எடுத்து வைத்துவிட்டார்.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களை நிறுவி உலகின் மிகப் பெரிய கோடீஸ்வராராக மட்டுமல்ல அதி புத்திசாலியாக தன்னை நிலை நிறுத்தியிருக்கும் எலன் மஸ்க்கின் மற்றொரு நிறுவனம் நியூராலின்க் (Neuralink). இந்த நிறுவனம் மனித மூளையை ஆட்டுவிக்கும் மைக்ரோசிப்களை தயாரிக்கும் ஆராய்ச்சி நிறுவனம். 2016ல் இந்த நிறுவனத்தை துவக்கினார் எலன் மஸ்க். நேற்று அதன் முதல் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.

நியூராலின்க் நிறுவனம் தயாரித்த லின்க் என்ற மைக்ரோசிப்பை மனிதனின் மூளைக்குள் பொருத்தியிருக்கிறார்கள்.

’ The first human received an implant from @Neuralink yesterday and is recovering well. Initial results show promising neuron spike detection’ என்று தனது எக்ஸ் பக்கத்தில குறிப்பிட்டிருக்கிறார் எலன் மஸ்க்

அதாவது, ‘நியூரோலிங் முதல் மனிதரிடம் உள்வைக்கப்பட்டது மற்றும் நன்றாக அவர் குணமடைந்து வருகிறார். ஆரம்ப முடிவுகள் நம்பிக்கைக்குரிய நியூரான் ஸ்பைக் கண்டறிதலைக் காட்டுகின்றன’ என்கிறார்.

இன்னொரு பதிவில், ‘இது உங்கள் ஃபோன் அல்லது கம்ப்யூட்டரை செயல்படுத்தும், அவற்றின் மூலம் கிட்டத்தட்ட எல்லா சாதனங்களையும் உங்கள் சிந்தனை மூலமாகவே இயக்கலாம். இந்த தொழில்நுட்பத்தின் ஆரம்ப பயனர்கள் தங்கள் கை, கால் செயல் இழந்தவர்களாக இருப்பார்கள். ஒரு வேக தட்டச்சரைவிட ஏலம் விடுபவரைவிட ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் வேகமாய் இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்பதை எண்ணிப் பாருங்க. அதுதான் இலக்கு’ என்று எலன் மஸ்க் தெரிவித்திருக்கிறார். (Enables control of your phone or computer, and through them almost any device, just by thinking. Initial users will be those who have lost the use of their limbs. Imagine if Stephen Hawking could communicate faster than a speed typist or auctioneer. That is the goal.)

மூளைக்குள் பொருத்தப்படும் இந்த சாதனம் ஐந்து ஒரு ரூபாய் காசுகளை அடுக்கிய சைஸில் இருக்கும். அதன் உள் ஒரு சிப், ஒரு எலக்ட்ரோட். அந்த எலக்ட்ரோடில் 1000 அதி மெல்லிய வளையக் கூடிய கண்டக்டர்கள் அப்புறம்… சில புரியாத சங்கதிகள். இத்தனையும் இணைந்து மூளையின் செயல்திறனை முடுக்கிவிடும். மூளை செல்களின் அசைவுகளை அதிர்வுகளை வெளிச் சாதனங்களுக்கு கட்டளைகளாக கடத்தும். மூளையின் செயலிழந்த பகுதிகளை செயல்பட வைக்கும்.

மூளைக்கு இது போன்ற சாதனத்தைப் பொருத்திப் பார்க்க முதலில் அமெரிக்க மருத்துவ அமைப்பு அனுமதி தரவில்லை. இந்த சாதனம் முதலில் விலங்குகளில் பொருத்திப் பார்க்கப்பட்டது. அதன் விளைவுகளை காண்காணித்தப் பிறகு இப்போது ஒரு மனிதனுக்கு பொருத்தப்பட்டிருக்கிறது. அந்த மனிதன் யார், அவருக்கு என்ன பிரச்சினை என்பதெல்லாம் இதுவரை தெரியவில்லை.

அவருடைய மூளையில் பரிசோதிக்கப்பட்டு வெற்றிகரமான முடிவுகள் வந்தால் மேலும் சிலருக்கு பொருத்தி பரிசோதித்துப் பார்க்க வாய்ப்பிருக்கிறது.

உடலில் ஏற்படும் நரம்பு பாதிப்புகளுக்கான தீர்வுகளை எலன் மஸ்க்கின் லின்க் மைக்ரோசிப் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. அதன் பிறகு மூளையின் சிந்தனைகளை வெளியே கடத்தும் டெலிபதி கட்டத்துக்கு உயரும் என்று கூறப்படுகிறது.

அவையெல்லாம் நடந்துவிட்டால் எலன் மஸ்க் – ஏறக்குறைய கடவுள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...