No menu items!

டெல்லியை பாதுகாக்க 1,30,000 வீரர்கள் – ஜி20 மாநாடு எச்சரிக்கை

டெல்லியை பாதுகாக்க 1,30,000 வீரர்கள் – ஜி20 மாநாடு எச்சரிக்கை

ஜி20 மாநாட்டுக்காக இந்திரலோகம் போல்  மாற்றப்பட்டுள்ளது டெல்லி நகரம். அதேநேரத்தில் சுற்றிலும் பாதுகாப்பு படை வீர்ர்கள் இருக்க, சிறைச்சாலைகளில் வசிப்பதுபோல் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் டெல்லி மக்கள். “மிகப்பெரிய மாநாடு நடப்பதால் சில அசவுகரியங்களை சந்திக்க வேண்டி இருக்கும். அதற்காக டெல்லி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று மோடியே சிரம்தாழ்த்தி கேட்கும் அளவுக்கு அங்கு நிலைமை இருக்கிறது.

ஜி20 மாநாட்டுக்காக டெல்லி  நகரம் கண்டிருக்கும் சில மாற்றங்கள்…

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வருவதால்,  டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 80 ஆயிரம் போலீஸார் உட்பட 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீஸாரைத் தவிர மத்திய ரிசர்வ் படை, ராணுவ வீரர்கள் ஆகியோரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஜி20 மாநாட்டுக்கான பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் சுமார் 45 ஆயிரம் வீர்ர்கள் வழக்கமான காக்கி நிற சீருடையை அணியாமல் நீல நிற சீருடையை அணிந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். மாநாட்டின் முக்கிய பகுதிகளில் இவர்கள் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.

தீவிரவாதிகள் நகருக்குள் நுழைந்தால் சுடுவதற்கு வசதியாக முக்கிய கட்டிடங்களின் உச்சியில் ஸ்னைப்பர்கள் (குறிபார்த்து சுடும் வீர்ர்கள்) நிறுத்தப்பட்டுள்ளனர்.

மாநாடு நடக்கும் நேரத்தில் வான்வெளி தாக்குதல்கள் ஏதும் நடக்காமல் பாதுகாக்க,  டெல்லியின் வான்பகுதி முழுக்க   இந்திய விமானப்படையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

மாநாடு நடக்கும் நேரத்தில் டெல்லி நகரம் முழுக்க ட்ரோன்களை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பறக்கும் ட்ரோன்களை சுட்டுவீழ்த்த பாதுகாப்பு படையினர் தயாராக நிறுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லி நகரின் முக்கிய இடங்களில்  சுமார் 400 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மாநாட்டுக்கு வரும் தலைவர்களின் பாதுகாப்புக்காக 20 குண்டு துளைக்காத வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக மட்டும் 18 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.

மாநாடு நடக்கும் நாட்களில் மற்ற மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வாகனங்கள் செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்காக மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாநாட்டை முன்னிட்டு 8-ம் தேதி முதல் 10-ம் தேதிவரை டெல்லியில் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நாட்களில் ஆன்லைனில் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதுகூட தடை செய்யப்பட்டுள்ளது.

மாநாடு நடக்கும் நாட்களில் இந்தியா கேட், கர்தவ்யா பாத் போன்ற பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்று போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களுக்கு டெல்லி வளமையான நகரமாக தெரியவேண்டும் என்பதற்காக நடைபாதைக் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. குடிசைப் பகுதிகள் பச்சை நிற பதாகைகளால் மூடப்பட்டுள்ளன.

சாலையோரம் வசித்துவந்த 4 ஆயிரம் பேர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, தற்காலிக இருப்பிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் கண்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்த சாலையோரங்களில் சுமார் 70 ஆயிரம் பூந்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...