No menu items!

100  Days of Bharat Jodo Yatra – ராகுல் நடை பயணம் வெற்றியா?

100  Days of Bharat Jodo Yatra – ராகுல் நடை பயணம் வெற்றியா?

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் (Bharat Jodo Yatra) இந்த வெள்ளிக் கிழமையுடன் 100 நாட்களை தொடுகிறது. கன்னியாகுமரியில் செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கியது இந்த யாத்திரை. தேசியக் கொடியை ராகுல் காந்தியிடம் எடுத்துக் கொடுத்து அவரை ஆரத் தழுவி, வாழ்த்து சொல்லி இந்த யாத்திரையைத் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.

பயணத்தை தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின், தனது ட்விட்டர் பதிவில் பதிவில்.’ Today, my brother @RahulGandhi  has begun a journey to retrieve India’s soul, to uphold the lofty ideals of our republic and to unite our country’s people with love. There can be no better place than Kumari, where the Statue of Equality stands tall, to start  At a time when communal polarisation and vicious hate campaigns are engulfing the minds of people, India’s grand old party has undertaken an arduous task to unshackle India from oppression.  I wish the #BharatJodoYatra to succeed in its goal of reinventing our glorious republic.’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்திய ஒற்றுமை பயணம் என்று குறிப்பிட்டிருந்தாலும் காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்துவதுதான் அதன் நோக்கம் என்பது எல்லோருக்கும் புரியும்.

இந்த நூறு நாளில் இரண்டு சவால்களை காங்கிரஸ் கடந்து வந்திருக்கிறது.

ராகுலின் நடை பயணத்தின் போதுதான் காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் நடந்தது. சசி தரூர், அசோக் கெலாட் குழப்பங்கள், சண்டை சச்சரவுகளுக்கிடையே அதிக சேதாரம் இல்லாமல் மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இது ஒரு வகையில் காங்கிரசின் இயக்கு சக்தியாக இருக்கும் ராகுல் குடும்பத்தினருக்கு வெற்றிதான். தாங்கள் விரும்பிய ஒருவர் தலைவராக இருக்கிறார்.

அடுத்த சவால், குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல்கள்.

நடை பயணத்தில் இருந்த ராகுல் காந்தி இந்தத் தேர்தல்களில் அதிக கவனம் செலுத்தவில்லை. குஜராத் தேர்தலில் இரண்டு முறைதான் ராகுல் பரப்புரை செய்தார். இமாச்சல பிரதேசத் தேர்தல் முழுவதையும் பிரியங்கா காந்திதான் கவனித்துக் கொண்டார்.

இந்த இரண்டு தேர்தல்களில் குஜராத்தில் பலமான அடி. இமாச்சல பிரதேசத்தில் பலமான வெற்றி.

இந்தத் தேர்தல் முடிவுகளைப் பொருட்படுத்தாமல் ராகுல் நடந்துக் கொண்டிருக்கிறார். மொத்தம் 150 நாட்கள். 3750 கிலோமீட்டர் தூரம். 12 மாநிலங்கள். இரண்டு யூனியன் பிரதேசங்கள். இன்னும் 50 நாட்கள் இருக்கின்றன. 800 கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டியிருக்கிறது. பிப்ரவரியில் பயணம் முடிகிறது.

இந்தப் பயணம் காங்கிரசுக்கு பல இடங்களில் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. ராகுலுக்கு அதிகமாய் கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டமும் உற்சாகமும் பாஜகவினருக்கு எரிச்சலைக் கொடுத்திருக்கிறது என்பது அவர்கள் ராகுலையும் இந்த பயணத்தையும் விமர்சித்து பேசும் பேச்சுக்களில் தெரிகிறது.

தமிழ்நாட்டில் ராகுலுடன் மு.க.ஸ்டாலின் இணைந்தார். மகாராஷ்டிராவில் சிவசேனையின் ஆதித்ய தாக்கரே இணைந்து ராகுலுடன் நடந்தார். சரத்பவாரின் மகள் சுப்ரியா சூலேவும் ராகுலுடன் நடந்தார்.

இப்படி நடக்கும் இடங்களிலெல்லாம் அங்கிருக்கும் முக்கிய பிரமுகர்கள் ராகுல் காந்தியுடன் இணைந்து நடந்தது காங்கிரசுக்கு நிச்சயம் பலம் சேர்க்கும்.

முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், முன்னாள் கடற்படை தளபதி ராம்தாஸும் அவர் மனைவியும், பாடகர் டி,எம்.கிருஷ்ணா, மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி, சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர் மேதா பட்கர்,  மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், பாலிவுட் நட்சத்திரங்கள் அமோல் பலேகர், பூஜா பட், ஸ்வரா பாஸ்கர், ரியா சென், கொல்லப்பட்ட கௌரி லங்கேஷின் அம்மாவும் சகோதரியும்…இப்படி பல தரப்பட்ட பிரபலங்கள் வெளிப்படையாக ராகுல் காந்தியின் பயணத்தில் இணைந்துக் கொண்டார்கள்.

வெளிப்படையாக என்ற வார்த்தையைக் கவனிக்க வேண்டும். மத்தியில் அதிக அதிகாரமிக்கதாக ஆளும் பாஜகவை எதிர்த்து பிரபலங்கள் துணிந்து வெளிவராத நிலையில் இந்தப் பிரபலங்கள் ராகுலுடன் கை கோர்த்தது ஆச்சர்யமான விஷயம்தான்.

பிரபலங்கள் மட்டுமில்லாமல் கடந்து செல்லும் பாதைகளில் எல்லாம் எளிய, சாமானிய மக்களுடன் உரையாடி, ஆடி, பாடி, விளையாடிக் கொண்டே செல்கிறார் ராகுல் காந்தி. இது மக்களிடம் அவருக்கான தொடர்பை பலப்படுத்தும்.

100 நாட்கள் கடந்த நிலையில் இந்த நடை பயணம் வெற்றியா என்றால் ஆமாம், காங்கிரசுக்கு வெற்றிதான் என்று கூற வேண்டும்.

இதனால் காங்கிரஸ் பலம் பெற்று 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிக்குமா என்றால், வாய்ப்புகள் மிகக் குறைவு என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

நடை பயணம் மக்களுடன் நல்லுறவைக் கொடுக்கும். வாக்குகளை கொடுக்குமா என்பது சந்தேகமே.

நடை பயணத்தில் கிடைக்கும் நல்லெண்னத்தை வாக்குகளாக மாற்றுவது காங்கிரசிடம்தான் இருக்கிறது.

அதற்கான முயற்சிகளை எடுக்காத வரை. காங்கிரஸ் நடந்துக் கொண்டேதான் இருக்க வேண்டும். ஆட்சி வாகனத்தில் ஏற முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...