No menu items!

த்ரிஷாவுக்கு 30 விநாடிக்கு ஒரு கோடி

த்ரிஷாவுக்கு 30 விநாடிக்கு ஒரு கோடி

சில சமயங்களில் நட்சத்திரங்களுக்கு கிடைக்கும் இரண்டாவது சுற்று, அறிமுகமான முதல் சுற்றைவிட அள்ளிக்கொடுக்கும்.

அந்த அதிர்ஷ்டசாலி நட்சத்திர பட்டியலில் த்ரிஷாவும் இப்போது இணைந்திருக்கிறார்.

அவர் இளமைத் ததும்பும் போது கதாநாயகியாக நடித்து சம்பாதித்ததை விட, இப்போது கதாநாயகியாக நடிக்கும் படங்களுக்கு வாங்கும் சம்பளம் அதிகம்.

’பொன்னியின் செல்வன்’ வரிசைப் படங்கள், ’லியோ’ என த்ரிஷாவுக்கு மூன்று பெரிய படங்கள் அமையவே இன்று த்ரிஷா தெலுங்கு பக்கமும் பிஸியாகி இருக்கிறார். சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்குப் பிறகு த்ரிஷா சிரஞ்சீவுயுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்.

இப்படத்தில் நடிக்க த்ரிஷாவுக்கு 3 கோடி சம்பளமாம்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு இ-காமர்ஸ் தளத்தின் விளம்பரத்தில் நடித்திருந்தார் த்ரிஷா. விளம்பரம் படம் என்பதால் 1 கோடி வாங்கிவிட்டு நடித்திருக்கிறார் த்ரிஷா.

வெறும் 30 விநாடிகள் ஓடும் இந்த விளம்பரத்தில் நடிக்க த்ரிஷா வாங்கிய சம்பளம் இங்குள்ள இளம் கதாநாயகிகளுக்கு பொறாமையை உண்டு பண்ணியிருக்கிறது.


பாக்ஸ் ஆபீஸில் வேகமெடுக்கும் சூர்யா!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை, பாக்ஸ் ஆபீஸ் என்றால் ரஜினி, விஜய், அஜித் மட்டும்தான் நூறு கோடிகளில் வசூல் கெத்து காட்டமுடியும் என்ற நிலை இருந்துவந்தது.

விக்ரம் நடித்தப் படங்கள் பெரிய பட்ஜெட்டில் இருந்தாலும், பெரிதாக ஓடவில்லை. இதனால் வசூலும் இல்லை. இவருக்கு அடுத்து சூர்யாவின் படங்கள் ஒடிடி தளங்களில் வெளியாகின. சிம்புவுக்கு சொல்லிக்கொள்ளுமளவிற்கு படங்கள் இல்லை. தனுஷ், சிவகார்த்திகேயன் படங்கள் ஓரளவிற்கு பாக்ஸ் ஆபீஸ் வசூலை அள்ளின.

இதனால் முதல் மூவருக்கும் அடுத்து யார் என்ற இடம் காலியாகவே இருந்தது வந்தது.
இந்த இடத்தைப் பிடித்திருப்பதோடு, முதல் மூவருக்கும் கடும் போட்டியாகவே மாறியிருக்கிறார் சூர்யா. காரணம் ‘கங்குவா’.

சூர்யா நடித்தப் படங்களில் மிக அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம்தான் ‘கங்குவா’. சூர்யா பிறந்த நாளில் அப்படம் பற்றிய சில காட்சிகளையும், போஸ்டரையும் வெளியிட்டனர். இது இப்போது சூட்டைக் கிளப்பி இருக்கிறது.

இதை பார்த்து உற்சாகமாகி இருக்கிறதாம் சூர்யா தரப்பு. இப்படத்தின் டிஜிட்டல் உரிமை 45 கோடிக்கு கேட்கப்பட்டு வருகிறதாம். இதன் காட்சிகளைப் பார்த்த ஹிந்தி விநியோகஸ்தர்கள் கங்குவா, ஹிந்தி மார்கெட்டில் மட்டும் 400 கோடி வசூல் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்று கூறியிருக்கிறார்கள். இதனால் 10 மொழிகளில் வெளியாகி இருக்கும் ‘கங்குவா’ 1000 கோடி வசூல் என்ற இலக்கை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

’கங்குவா’ எதிர்பார்த்த வெற்றி பெற்றால், இதன் இரண்டாம் பாகம் மற்றும் மூன்றாம் பாகம் எடுக்கும் திட்டமிருப்பதாக சூர்யா வட்டாரம் தெரிவிக்கிறது. இதற்கான ஸ்கிரிப்ட்டும் தயாராக இருக்கிறது.

ஆக இதுவரை தனக்கென்று ஒரு சரியான படம் கிடைக்காததால், டாப் 10 கமர்ஷியல் ஹீரோக்கள் பட்டியலில் எந்த தனக்கு இடம் என தெரியாமல் இருந்த சூர்யா பரபரவென முன்னேற்றம் காண இருப்பதாக கோலிவுட்டில் பேச்சு அடிப்படுகிறது.


இதுதான் ரஜினியின் மாஸ்!

யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்பார்கள். அப்படிதான் ரஜினிகாந்தும்.

அமேசான் காடுகளில் மட்டுமே கிடைக்கிற அபூர்வ மூலிகைகளால் ஆன எர்வா மார்டின் தலைக்கு தேய்க்கிற வயதில் இருக்கும் ரசிகர்கள் என்று பலவாறாக கிண்டலடிக்கப்பட்டாலும், அடுத்தடுத்து சில படங்கள் எதிர்பார்த்தளவிற்கு வசூலைக் குவிக்கவிட்டாலும், சூப்பர் ஸ்டார் என்றால் அது என் காலம் முடியும் வரைக்கும் நான்தான் என்று சொல்லாமல் சொல்ல வைத்திருக்கிறது ரஜினியின் மாஸ்.

’ஜெயிலர்’ படத்தின் ஆடியா வெளியீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம். ஜூலை 28-ம் தேதி நடக்கவிருக்கும் ‘ஜெயிலர்’ ஆடியோ விழாவில் கலந்து கொள்வதற்காக ரஜினி ரசிகர்களுக்கென்று 1000 பாஸ்களை ஒதுக்கியது.

இந்த பாஸ்களை ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்தார்கள். அவ்வளவுதான். அந்த பாஸ்களை ஆன்லைனில் வெளியிட்ட 15 விநாடிகளிலேயே வாங்கிவிட்டார்கள் ரசிகர்கள்.

இப்படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பதால், வசூலிலும் மாஸ் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருக்கிற நட்சத்திரங்களின் எண்ணிக்கைக்கு நோகாத வண்ணம் ‘ஜெயிலர்’ படம் இரண்டு மணி நேரம் 49 நிமிடங்கள் ஓடுவதாக தெரிய வந்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...