No menu items!

டி.ராஜேந்தருக்கு என்ன ஆச்சு?

டி.ராஜேந்தருக்கு என்ன ஆச்சு?

டி.ராஜேந்தர். தமிழ் சினிமாவின் மற்றொரு சகலகலாவல்லவர். எப்போதும் உற்சாகமாய் காட்சி அளிப்பவர் இப்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார் என்ற செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

மே 9 ஆம் தேதி டி.ஆர்.க்கு பிறந்த நாள். ஆனால் அதற்கு இரண்டு நாட்கள் முன்பு – மே 7 ஆம் தேதி – அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு இதயத்தில் பாதிப்பு என்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஒஎம்ஆர் சாலையில் உள்ள அந்த மருத்துவமனையில் அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் இருந்திருக்கிறார். ஆனால் முழுமையான குணமடையவில்லை.

22ஆம் தேதி அவருக்கு மீண்டும் உடல் பாதிப்பு தீவிரமடைய அங்கிருந்து போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இப்போது டி.ராஜேந்தர் நலமாக இருக்கிறார். மற்றவர்களிடம் பேசுகிறார். பிரச்சினை எதுவும் இல்லை என்று டி.ராஜேந்தர் குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

இன்னும் சில தினங்களில் டி.ராஜேந்தரை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா இந்த மூன்று நாடுகளில் ஒன்றுக்கு அவர் அழைத்துச் செல்லப்படுவதாக தகவல்.

ஒவ்வொரு ஆண்டும் ராஜேந்தர் குடும்பத்தினர் சில தினங்கள் வெளிநாட்டில் ஒன்றாக இருப்பது வழக்கம். அது போன்ற பயணம்தான் இதுவும் என்று குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

டி.ஆருக்கு ஓய்வு தேவை, சென்னையில் இருந்தால் தினமும் அவரை சந்திக்க விருந்தினர்கள் வந்துக் கொண்டே இருக்கிறார்கள், அவர்களை தவிர்க்க இயலவில்லை, டி.ஆரால் ஒய்வு எடுக்க முடியவில்லை அதனால் வெளிநாடு பயணம் என்கிறார்கள்.

அப்பாவுக்கு ஒய்வு தேவை அதற்கு வெளிநாடு பயணம்தான் உதவும் என்பது சிம்பு எடுத்த முடிவு. எந்த நாட்டுக்கு விசா உடனடியாக கிடைக்கிறதோ அந்த நாட்டுக்கு செல்வது என்று குடும்பத்தினர் இருக்கிறார்கள். விரைவில் சிம்பு இது குறித்து அறிக்கை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் டி.ஆர். உடல் நலம் பெற்று அடுக்கு மொழியில் அசத்துவதற்கு வாழ்த்துகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...