No menu items!

கோவா பறந்த அமலா பால்

கோவா பறந்த அமலா பால்

இன்ஸ்டாகிராமில் 44 லட்சம் ஃபாலவர்ஸ் வைத்திருக்கும் அமலா பால் கோடை விடுமுறையைக் கொண்டாட கோவா சென்றிருக்கிறார். அங்கிருந்து அவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின்றன.

வசம் அதிக திரைப்படங்கள் இல்லாத நிலையில் வெப் சீரீஸ் பக்கம் தன் பார்வையை திருப்பினார் அமலா. தெலுங்கு வெப் சீரிஸை தொடர்ந்து இப்போது இந்தியில் வெப்சீரிஸ் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மற்றபடி இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வெளியிடுவதை முழு நேர பொழுதுபோக்காக வைத்திருக்கிறார் அமலா பால்.

சம்பளத்தை இரு மடங்கு உயர்த்திய ராஷ்மிகா மந்தானா!

நயன்தாரா, பூஜா ஹெக்டே, கீர்த்தி சுரேஷூக்கு கடும் போட்டியாக உருவெடுத்து இருக்கிறார் புஷ்பாவின் பர்ஃபி ராஷ்மிகா மந்தானா.

’புஷ்பா’வின் வெற்றி பிரம்மாண்டமாக அமைந்ததில் அல்லு அர்ஜூனை விட உற்சாகத்தில் இருப்பது ராஷ்மிகாதான். ’புஷ்பா -2’ ஷூட்டிங்கின் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்க, அல்லு அர்ஜூன் சம்பளத்தை உயர்த்த சொல்லி கேட்டிருக்கிறார். தயாரிப்பாளர் தரப்பும் சம்பளத்துடன், சில ஏரியாக்களின் பிஸினெஸ் உரிமைகளைக் கொடுக்க ஒப்புதல் அளித்திருக்கிறதாம். இதை தெரிந்து கொண்ட ராஷ்மிகா, ’சாமி..சாமி..’ என்று தயாரிப்பாளரிடம் போய் நிற்க, அவருக்கும் சம்பள உயர்வை ஒகே செய்திருக்கிறாராம் தயாரிப்பாளர். இதனால் உற்சாகத்தில் இருக்கிறார் ராஷ்மிகா.

இதனால் இப்போது சம்பளம் அதிகம் வாங்கும் பூஜா ஹெக்டேவை ‘டச்’ செய்திருக்கிறார். அடுத்தடுத்தப் படங்களில் பூஜா ஹெக்டே, நயன்தாராவை ராஷ்மிகா ஓவர்டேக் செய்துவிடுவார் என்கிறது சினிமா வட்டாரம்.

கேன்ஸ் 2022 படவிழாவில் பா.இரஞ்சித்

கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ், நீலம் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் ,பா.இரஞ்சித் எழுதி இயக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் 2022 படவிழாவில் வெளியிடப்படுகிறது.

மறக்கப்பட்ட, மறுக்கப்பட்ட மனித வாழ்வின் பக்கங்களை படம்பிடித்து காட்டும் ஒரு நிறுவனமாக நீலம் புரொடக்சன்ஸ் இயக்குனர் பா.இரஞ்சித்தால் ஆரம்பிக்கப்பட்டது. பரியேறும்பெருமாள் படத்திலிருந்து துவங்கப்பட்ட இந்த பயணம் இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், குதிரைவால், சார்பட்டா பரம்பரை, என தனித்துவமிக்க படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு கொடுத்திருக்கிறது.
அடுத்து சேத்துமான், ஜெ.பேபி, பொம்மை நாயகி, நட்சத்திரம் நகர்கிறது, என அடுத்தடுத்த படங்கள் வெளியீட்டிற்கு தயாராக இருக்கின்றன.
இதனைத்தொடர்ந்து நீலம் புரொடக்சன்ஸ் தமிழ் சினிமாவைத்தாண்டி தனது பயணத்தை துவங்க தனது சிறகை இன்னும் விரித்து பறக்க #நீலம்_ஸ்டுடியோஸ் துவங்கியிருக்கிறது.

Golden Ratio Films இணைந்து முதல் தயாரிப்பாக இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் “வேட்டுவம்” எனும் திரைப்படம் & தொலைக்காட்சி தொடர் இயக்கப்படுகிறது. இதனை பா.இரஞ்சித் எழுதி இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்படுகிறது. இதில் பா.இரஞ்சித் கலந்துக் கொள்கிறார் என்று மகிழ்ச்சியாக கூறுகிறார்கள் நீலம் தயாரிப்பு நிறுவனத்தினர்.

மே.18-ல் நிக்கி கல்ராணி திருமணம்

நடிகர் ஆதியும் நடிகை நிக்கி கல்ராணியும் வரும் மே 18-ம் தேதி சென்னையில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர். அதே நாளில் மாலை சென்னை உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் அவர்களின் நெருங்கிய நண்பர்கள் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துக்கொள்வார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...