No menu items!

விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி செளத்ரி யார்??

விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி செளத்ரி யார்??

‘லியோ’ படம் பற்றிய பரபரப்பு உச்சத்தில் இருக்கிறது. இதற்கிடையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் ‘தளபதி 68’ படம் பற்றி தகவல் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.

’தளபதி 68’ படத்தில், பிரஷாந்த், பிரபு தேவா, ஸ்நேகா, லைலா, சில்வர் ஜூப்ளி நாயகன் மோகன் என நட்சத்திரப் பட்டாளமே நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

விஜய்க்கு ஜோடியாக ப்ரியங்கா மோகன் அருள் நடிப்பதாகவும் ஒரு பேச்சு அடிப்பட்ட நிலையில், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘கொலை’ படத்தில் நடித்த மீனாட்சி செளத்ரியும் இப்போது விஜய்க்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் என்றும் பேச்சு அடிப்படுகிறது.

அறிமுகமாகும் முதல் தமிழ்ப் படத்திலேயே விஜய்க்கு ஜோடியா என ஆச்சர்யப்பட வைத்திருக்கும் இந்த மீனாட்சி செளத்ரி யார் என்றால், ஒரு பக்காவான பயோ-டேடா அவர் வசம் இருக்கிறது.

மீனாட்சி செளத்ரி, ஹரியானா இறக்குமதி. ஃபெமினா மிஸ் இந்தியா 2018’ போட்டியில் பங்கு பெற்றவர். ‘மிஸ் க்ராண்ட் இந்தியா’வாக மகுடம் சூடியவர். இதையடுத்து ‘மிஸ் க்ராண்ட் இண்டர்நேஷனல்’ அழகிப் போட்டியில் முதல் ரன்னர்-அப் பட்டத்தைத் தட்டிச் சென்றவர்.

அழகிப் பட்டம் வென்றவரை அப்படியே ஃப்ளைட்டில் ஏற்றி ஹைதராபாத்திற்கு கொண்டு வந்துவிட்டது தெலுங்கு சினிமா. 2021-ல் ‘இசாதா வாஹனமுலு நிலுபரடு’ என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானார்.

பல் அறுவைச்சிகிச்சையில் மருத்துவப் படிப்பை முடித்திருக்கிறார் இந்த மீனாட்சி செளத்ரி.
இதுவரையில் பெரிய ஹிட் படங்கள் எதிலும் நடித்திராத, மீனாட்சி செளத்ரி இப்போது விஜய்க்கு ஜோடியாக இருக்கிறார் என்கிறார்கள்.


கவர்ச்சியில் இறங்கிய நயன்தாரா!

’லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தைப் பெற்ற பிறகு நயன்தாரா, கவர்ச்சியாக நடிப்பதைத் தவிர்த்து வந்தார். முடிந்த வரை கவர்ச்சி தேவைப்படும் கதாபாத்திரங்களை அவர் ஏற்றுக்கொள்ளவும் இல்லை.

ஆனால் அவர் இப்போது திடீர் கவர்ச்சியில் இறங்கி இருக்கிறார். யாரும் எதிர்பார்க்காத வகையில் நயன்தாரா தனது முடிவை மாற்ற காரணம், நம்மை இளமையாக வைத்திருக்க உதவும் ஒரு காஸ்மெட்டிக் சீரம். அந்த சீரமை தயாரித்து அறிமுகப்படுத்தி இருப்பது 9ஸ்கின் என்ற நிறுவனம்.

விளம்பரத்தில் நடிக்க 5 கோடி கொடுத்திருப்பார்கள். அதான் கவர்ச்சியில் இறங்கி விட்டார் என்று நினைத்தால், அதுவும் காரணமில்லை.

9ஸ்கின் என்பது நயன்தாரா தொடங்கி இருக்கும் புதிய காஸ்மெட்டிக் நிறுவனம். இந்நிறுவனம்தான் பெண்கள் தங்களை இளமையாக வைத்திருக்க உதவும் நைட் க்ரீம், சீரம் என பல தயாரிப்புகளை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதற்கான விளம்பரத்தில்தான் நயன்தாரா தனது அழகை வெளிப்படுத்தும் வகையில் நடித்திருக்கிறார்.

தன்னுடைய தயாரிப்பை விளம்பரப் படுத்த கவர்ச்சியாக வரும் நயன்தாரா, தான் நடிக்கும் படங்களின் ப்ரமோஷனுக்கு இழுத்துப் போர்த்திக்கொண்டு வந்தால் கூட போதும் என்று புலம்பும் தயாரிப்பாளர்களின் புலம்பலுக்கு செவி சாய்ப்பாரா என்று இனி பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...