No menu items!

Weekend ott – இந்த வாரம் என்ன பார்க்கலாம் ?

Weekend ott – இந்த வாரம் என்ன பார்க்கலாம் ?

யாத்திசை (தமிழ்) – அமேசான் ப்ரைம்

‘பொன்னியின் செல்வன்’ என்ற பிரம்மாண்டமான சரித்திரப் படம் வெளியான அதே காலகட்டத்தில், குறைந்த பொருட்செலவில் தயாராகி வெளிவந்த சரித்திரப் படம் யாத்திசை. பாண்டியர்களின் வரலாற்றை அடிப்படையாக கொண்ட இப்படத்தை தரணி ராஜேந்திரன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியுள்ளார். அதிக அளவில் புதுமுகங்களைக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

ஏழாம் நூற்றாண்டில் சேர, சோழர்களை வென்று ஒட்டுமொத்த தென் திசையையையும் ஆளும் பேரரசனாக பாண்டிய மன்னன் ரணதீரன் திகழ்கிறான். அவனால் காட்டுக்கு விரட்டப்பட்ட சிறு குழுக்களில் எயினர்கள் குழுவும் ஒன்றாக இருக்கிறது. அக்குழுவைச் சேர்ந்த கொதி, சோழர்கள் உதவியுடன் பெரும்படை திரட்டி, பாண்டிய அரசன் ரண தீரனுடன் போர் புரியச் செல்கிறான். இந்த போரில் வென்றது யார் என்பதை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

நிறைய செலவு செய்யாமலும் தரமான ஒரு சரித்திரப் படத்தை எடுக்க முடியும் என்பதற்கு இப்படம் எடுத்துக்காட்டாக உள்ளது. படத்தில் பேசப்படும் தமிழ் பல இடங்களில் புரியவில்லை. இந்த குறை இல்லாமல் இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.


கொரோனா பேப்பர்ஸ் (Corona Papers – மலையாளம்) – டிஸ்னி ஹாட்ஸ்டார்

தமிழில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘8 தோட்டாக்கள்’ படத்தின் மலையாள ரீமேக்தான் கொரோனா பேப்பர்ஸ். ஆனால் அப்படத்தை அப்படியே எடுக்காமல் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு தன்னுடைய ஸ்டைலில் வித்தியாசமாக படமாக்கி இருக்கிறார் இயக்குநர் பிரியதர்ஷன்.

காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டராக சேரும் நாயகன் ஷேன் நிகாமின் துப்பாக்கி 8 தோட்டாக்களுடன் காணாமல் போகிறது. காவல்துறையின் சீர்கேடுகளால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, பண ரீதியாகவும், மன ரீதியாகவும் கஷ்டப்படும் சித்திக்கிடம் அந்த துப்பாக்கி கிடைக்கிறது. அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? நாயகனால் அவனது துப்பாக்கியை மீட்க முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.

ஆரம்ப காட்சி முதல் கடைசி காட்சி வரை ரசிகர்களை ஒருவித பதைபதைப்புடன் வைத்திருப்பதில் இயக்குநர் பாஸ் மார்க் வாங்கிவிடுகிறார்.


மிசஸ் அண்டர்கவர் (Mrs undercover – இந்தி) – ஜீ5

கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தே நாயகியாக நடித்து ஜீ5 ஓடிடியில் வெளியாகியிருக்கும் படம் ’மிசஸ் அண்டர்கவர்’.

காமன் மேன் என்ற பெயரில் உலவும் ஒருவர் வரிசையாக பெண் ஆளுமைகளைக் கொலை செய்கிறார். இதனால் நகரில் பதற்றம் ஏற்படுகிறது. சீரியல் கில்லரை பிடிக்கும் பொறுப்பு, முன்னாள் சீக்ரட் ஏஜண்டான ராதிகா ஆப்தேவுக்கு கொடுக்கப்படுகிறது. அவரால் கொலையாளியை கண்டுபிடிக்க முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.

வார இறுதியில் சஸ்பென்ஸ் த்ரில்லரை பார்க்க விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் இது.


தி நைட் ஏஜண்ட் (The Night Agent – ஆங்கில வெப் சீரிஸ்) – நெட்பிளிக்ஸ்

வெள்ளை மாளிகையில் பணியாற்றும் கடைநிலை எஃப் பி ஐ ஊழியர் பீட்டர் சதர்லாண்ட். அங்குள்ள டெலிபோனில் அவசரகால அழைப்புகளை கவனித்துக்கொள்ளும் பணி அவருக்கு. எப்போதும் போனே வராத அந்த ஃபோனுக்கு ஒரு நால் இரவில் ஃபோன் வருகிறது.
போனில் உதவிகேட்ட பெண்ணுக்கு பீட்டர் உதவச் செல்ல, அது மிகப்பெரிய சிக்கலுக்குள் அவரை கொண்டுசேர்க்கிறது. அந்த சிக்கலில் இருந்து பீட்டர் மீண்டாரா என்பதுதான் படத்தின் கதை.

அமெரிக்க அரசியல், உளவு மற்றும் பாதுகாப்பு துறைகள் செயல்பாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளுக்காக இந்த தொடரை ரசிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...