நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதனுடன் தங்கள் சொத்து விபரங்களையும் தாக்கல் செய்துள்ளனர். அந்த விவரங்கள் வெளிவந்துள்ளன. அதன்படி முக்கிய வேட்பாளர்களின் சொத்து மதிப்புகள் இதோ…
ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் மொத்த சொத்து மதிப்பு ரூ. 652.93 கோடி.
சிவகங்கை தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வின் டிவி தேவநாதன் (இமகமுக) மொத்த சொத்து மதிப்பு ரூ. 400 கோடி.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் ஏ.சி. சண்முகம் மொத்த சொத்து மதிப்பு ரூ. 162 கோடி.
சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் கார்த்தி சிதம்பரத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.127 கோடி.
தர்மபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி மொத்த சொத்து மதிப்பு ரூ. 48.18 கோடி.
பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கே.என். நேருவின் மகன் அருண் நேரு மொத்த சொத்து மதிப்பு ரூ. 46.20 கோடி.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர். பாலுவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 45.71 கோடி.
திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் மொத்த சொத்து மதிப்பு ரூ. 21.92 கோடி.
தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் மொத்த சொத்து மதிப்பு ரூ. 19 கோடி.
விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளரும் மறைந்த நடிகர் விஜயகாந்த் மகனுமான விஜய பிரபாகரன் மொத்த சொத்து மதிப்பு ரூ. 17 கோடி.
கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மொத்த சொத்து மதிப்பு ரூ. 7.63 கோடி.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் எல் முருகனின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 4.26 கோடி.
மதுரையில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் ராம.ஸ்ரீனிவாசன் மொத்த சொத்து மதிப்பு ரூ. 2.5 கோடி.