No menu items!

விஜய் திடீர் முடிவு – மீண்டும் தெலுங்கு இயக்குநர்

விஜய் திடீர் முடிவு – மீண்டும் தெலுங்கு இயக்குநர்

’இப்படியொரு குடும்பக்கதைக்காகதான் நான் காத்திருந்தேன்’ என்று விஜய் உற்சாகமாக நடித்தப்படம், தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கிய ‘வாரிசு’.

இந்தப்படம் டிவி சீரியலை போல இருக்கிறது என்று இணையத்தில் பல கமெண்ட்கள் எழுந்தன. ஆனால் ’வாரிசு’ வசூலில் 300 கோடியைத் தொட்டதால் விஜய்க்கு ரொம்பவே சந்தோஷம் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ வெளிப்படையாகவே கூறினார்.

இதனால் வம்சி – தில் ராஜூ – விஜய் கூட்டணி மீண்டும் இணைய இருக்கிறது என்று பேச்சு கிளம்பியது. இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளிவரவில்லை.

இந்நிலையில், விஜயை ஒரு தெலுங்கு இயக்குநர் சந்தித்து இருக்கிறார். அவர் ஒரு மணிநேரம் கதை சொல்லியிருக்கிறார். கதை கேட்க உட்கார்ந்த முதல் சிட்டிங்கிலேயே விஜய்க்கு கதை பிடித்துவிட்டது. அதனால் அந்த தெலுங்கு இயக்குநருடன் விஜய் இணைந்து தமிழ் – தெலுங்கு என இருமொழிகளில் பைலிங்குவல் படமெடுக்க இருப்பதாக ஒரு பேச்சு பரவி வருகிறது. கோபிசந்தை விஜய் சந்திக்க ஒப்புக்கொண்டதே கூட ஒரு திடீர் முடிவுதானாம். தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை விரிவுப்படுத்த இதுபோன்று தெலுங்கு இயக்குநர்களின் ஆக்‌ஷன் கதைகளில் நடித்தால், அங்கேயும் தன்னுடைய படங்களுக்கென்று பிஸினெஸ்ஸை உருவாக்கலாம் என விஜய் நினைக்கிறாராம்.

அந்த தெலுங்கு இயக்குநரின் பெயர் கோபிசந்த் மாலினேனி. தெலுங்கில் இவர் இயக்கிய ‘க்ராக்’ ஹிட். அடுத்து இவர் நந்தமூரி பாலகிருஷ்ணாவை வைத்து இயக்கிய ‘வீரசிம்ம ரெட்டி’ அதிரிபுதிரி வெற்றி.

’வீரசிம்ம ரெட்டி’ படத்தில் கோபிசந்த் மாலினேனி வைத்திருந்த ‘அப்பாயின்மெண்ட் இல்லன்னா… நான் லொகேஷனும் பார்க்கமாட்டேன். ஒகேஷனும் பார்க்கமாட்டேன்’ மாதிரியான பஞ்ச் டயலாக்குகளும், அதிர வைக்கும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளும்தான் விஜயை ரொம்பவே இம்ப்ரஸ் செய்திருப்பதாக கூறுகிறார்கள். கோபிசந்த் சொல்லியது ஒரு பக்கா மாஸ் ஸ்கிரிப்ட் என்றும் பேச்சு அடிப்படுகிறது. இதனால் விஜய் கோபிசந்த் உடன் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.


பூஜா ஹெக்டேவுக்கும், சல்மான்கானுக்கும் காதலா?

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ’முகமூடி’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமான பூஜா ஹெக்டேவுக்கு இங்கே அடுத்தடுத்து படங்கள் கிடைக்கவில்லை.

ஆனால் தெலுங்கு சினிமா ரசிகர்கள் இவரை கனவுக்கன்னியாக தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அடுத்தடுத்து 6 படங்களும் ப்ளாக் பஸ்டராக அமையவே தெலுங்கு சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோயின் ஆனார். 3 கோடி சம்பளம் வாங்க ஆரம்பித்தார்.

பூஜா ஹெக்டேவின் சினிமா க்ராஃப் சூப்பராக போய் கொண்டிருந்த போதுதான், ’பாகுபலி’ புகழ் பிரபாஸூக்கு ஜோடியாக நடித்த பான் – இந்தியா படமான ‘ராதே ஷ்யாம்’ படத்தை இவர் ரொம்பவே எதிர்பார்த்தார். ஆனால் அந்தப் படம் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்று ஃப்ளாப் ஆனது.

இதனால் பாலிவுட் பக்கம் போகலாம் என்று முடிவு செய்த பூஜா ஹெக்டேவுக்கு, அங்கேயும் ஃப்ளாப். சர்க்கஸ் படம் ஹிந்தியில் சரியாக போணியாகவில்லை.

வேறுவழியின்றி மீண்டும் தமிழ் சினிமா பக்கம் திரும்பினார். விஜய்க்கு ஜோடியாக நடித்த ‘பீஸ்ட்’ படத்தினால் இவருக்கு தனிப்பட்ட முறையில் எந்தவித பலனும் இல்லாமல் போனது.

தயாரிப்பாளர்களால் ‘அன்லக்கி’ என்று கமெண்ட் அடிக்கப்பட்டதாலும், திரும்பிய பக்கமெல்லாம் ஃப்ளாப் என்பதாலும் ரொம்பவே அப்செட்டான பூஜா ஹெக்டேவுக்கு, சல்மான் கான் ஆதரவுக்கரம் நீட்டினார். ’கிஸி கா பாய் கிஸி கா ஜான்’ [Kisi Ka Bhai Kisi Ka Jaan] படத்தில் வாய்ப்பு கொடுத்தார் சல்மான் கான். இதனால் 57 வயதான சல்மான் கானுடன் காதல் வசப்பட்டிருக்கிறார் பூஜா ஹெக்டே என்று ஒரு கிசுகிசுவும், ஒரு ஃப்லிம் மேக்கர் பூஜாவுக்கு. விலையுயர்ந்த சொகுசு கார் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறார் என்று மற்றொரு கிசுகிசுவும் பாலிவுட்டில் பரபரப்பானது.

இதுவரை சல்மானுடன் காதல் என்ற கிசுகிசு பற்றி எந்த கமெண்ட்டையும் சொல்லதா பூஜா ஹெக்டே ஒரு வழியாக தனது மெளனத்தைக் கலைத்திருக்கிறார்.’ ’இந்த மாதிரி கிளம்புற ஒவ்வொரு கிசுகிசுவுக்கும் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது. பதில் சொல்லணுங்கிற அவசியமும் இல்ல. சில நேரங்கள்ல இந்த மாதிரி கிசுகிசுவுக்கு பதில் எதுவும் சொல்லாம அமைதியா இருக்குறதுதான் சரியா இருக்கும். இந்த மாதிரி வர்ற ரிப்போர்ட்கள் எதுவும் ஆதாரம் இல்லாதவை. அளவுக்கு மீறிய ரிப்போர்ட்டா இருக்கு.’ என்று பொரிந்து தள்ளிவிட்டார்.


’கங்குவா’ எனது கனவுக்கதை!

’ஜெய்பீம்’ மாதிரி நல்லப்படங்களில் நடித்தாலும், சூர்யாவுக்கென்று ஒரு கமர்ஷியல் மார்க்கெட்டை உருவாக்குவதற்கேற்ற படங்கள் எதுவும் தற்போது எதுவும் அமையவில்லை. இதற்கிடையில் பான் – இந்தியா என்ற பிஸினெஸ் பரபரப்பாக இருக்கும் போது, அந்தப் போட்டியில் தானும் இருக்கவேண்டுமென சூர்யா திட்டமிடுவதாக கூறுகிறார்கள்.

கோவிட் நேரத்தில் வெளியான பாகுபலி, கேஜிஎஃப், ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் எல்லாமே மெகா பட்ஜெட் படங்கள். அடுத்து வரலாற்று கதைக்களில் வந்தப் படங்களுக்கும் ஒடிடி மூலம் மக்களிடையே பெரும் வரவேற்பு உருவாகி இருக்கிறது. இதனால்தான் ’பிரம்மாஸ்திரா’, ’ஆதிபுருஷ்’, ‘சகுந்தலம்’ மாதிரியான படங்கள் அதிகமாகி இருக்கின்றன.

இந்த மார்கெட் நிலவரத்தைப் பார்த்துதான் ’கங்குவா’ மாதிரியான படத்தில் நடிக்க சூர்யா ஆர்வம் காட்டியதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு மாவீரனைப் பற்றிய கதை இது. நெருப்பாய் இருப்பவன் என்று பொருள்படுமாம். எப்படியாவது படமாக எடுத்துவிடமேண்டுமென்று இயக்குநர் சிறுத்தை சிவா ஆர்வத்தோடு காத்திருந்தார். ‘இது எனது கனவுக்கதை’ என்று இயக்குநர் சிறுத்தை சிவா சூர்யாவிடம் சொல்ல, எதைப்பற்றியும் யோசிக்காமல் பட்டென்று நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சூர்யா.

இளையதலைமுறை நடிகர்கள் இப்போது பான் – இந்தியா ஹீரோக்களாகிவிட, கொஞ்சம் லேட்டாக சூர்யாவும் இந்த கோதாவில் குதித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...