No menu items!

விஜய் – இந்தியாவின் ‘மோஸ்ட் பாப்புலர் ஆக்டர்ஸ்’ பட்டியலில் முதலிடம்

விஜய் – இந்தியாவின் ‘மோஸ்ட் பாப்புலர் ஆக்டர்ஸ்’ பட்டியலில் முதலிடம்

இந்திய சினிமாவில் பல மாற்றங்களை உருவாக்கிவிட்டு குட்பை சொல்லியிருக்கிறது கோவிட்.

உலகம் முழுவதும் கோவிட் தொற்று அதிகரித்த போது, அதிகம் பாதிக்கப்பட்ட பல துறைகளில் சினிமா அடங்கும்.

அதுவும் இந்திய சினிமா உலகில் மிக அதிகம் பாதிக்கப்பட்டது பாலிவுட். கோவிட் பாதிப்பு ஓரளவிற்கு கட்டுக்குள் வந்தப் பிறகு, ஒடிடி-க்கு கிடைத்த மவுசு பாலிவுட் படங்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் ஆமீர்கான் முதல் நேற்று அறிமுகமான புதுமுகங்களை வரை ஒரு சிங்கிள் ஹிட் கொடுப்பதற்கே கடுமையாக போராடும் சூழல் உருவானது.

இந்த நேரத்தில் ஆர்.ஆர்.ஆர்., கேஜிஎஃப், காந்தாரா, விக்ரம் என வரிசையாக தென்னிந்தியப் படங்கள் அங்கே பெரும் வரவேற்பைப் பெற்றதால், பான் – இந்தியா என்ற கான்செப்ட்டுக்கு இப்போது மவுசு அதிகமாகி இருக்கிறது.

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், யாஷ், பான் – இந்தியா ஸ்டார்களாக அதிகம் பேசப்படும் நடிகர்களாகி இருக்கிறார்கள்.

இந்நிலையில் பிரபல மீடியா நிறுவனம் ஒன்று ’இந்தியாவின் மோஸ்ட் பாப்புலர் ஆக்டர்கள்’ யார் என்று ஒரு சர்வேயை நடத்தியிருக்கிறது. இந்த சர்வே முடிவின் அடிப்படையில் இந்தியாவின் ’மோஸ்ட் பாப்புலர் ஆக்டர்ஸ்’ பட்டியலையும் இந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருப்பவர் தமிழ் சினிமாவில் ‘தளபதி’ என்று கொண்டாடப்படும் விஜய். ‘பாகுபலி’யில் மிரட்டிய பிரபாஸ் 2-ம் இடத்தைப் பிடித்திருக்கிறார். ‘ஆர்.ஆர்.ஆர். படத்தில் வேகம் காட்டிய ஜூனியர் என்.டி.ஆர். 3-ம் இடத்தையும், ‘புஷ்பாவில்’ ஃபயர் காட்டிய அல்லு அர்ஜூன் 4-, இடத்தையும் பிடித்திருக்கிறார்கள். 5-வது இடத்தை பாலிவுட்டின் அக்‌ஷய் குமார் கைப்பற்றியிருக்கிறார்.

மோஸ்ட் பாப்புலர் ஆக்டர்ஸ் பட்டியலில் டாப்-5 வரிசையில் இடம்பிடித்திருக்கும் ஒரே பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மட்டுமே என்பது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகி இருக்கிறது.

இவர்களுக்கு அடுத்து ‘கேஜிஎஃப்’பில் மிரட்டிய யாஷ், டோலிவுட்டின் ராம் சரண், மகேஷ்பாபு, அடுத்து நம்ம கோலிவுட்டின் அஜித், சூர்யா ஆகியோர் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்கள்.

தென்னிந்தியாவைச் சேர்ந்த நடிகர்கள் டாப் -10 பட்டியலில் 9 இடங்களையும் கைப்பற்றி அசத்தியிருக்கிறார்கள்.


கணவர் விவாகரத்துக்கு நான் காரணமில்லை – ஹன்சிகா மோத்வானி

லேட்டஸ்ட்டாக தலை தீபாவளி கொண்டாட இருக்கும் நடிகைகள் பட்டியலில் சேர்ந்திருப்பவர் ஹன்சிகா மோத்வானி.

கடந்த டிசம்பரில் காதலர் சோஹைல் கதுரியாவை கல்யாணம் செய்தவர், இப்போது ஷூட்டிங்கில் பிஸியாகி விட்டார்.

ஹன்சிகாவின் காதல் கணவர் சோஹைல் கதுரியா ஏற்கனவே திருமணமானவர். அவரது மனைவி ரிங்கி, இந்த ரிங்கி ஹன்சிகாவின் நெருங்கிய தோழி.

இப்படியொரு முக்கோண காதல், நட்பு இவர்களுக்கு இடையே இருக்கிறது.

நெருங்கிய தோழியின் கணவரைக் ஹன்சிகா காதலித்ததால்தான், சோஹைல் கதுரியா, ரிங்கி இருவருக்கும் இடையே விவாகரத்து ஆனது. ஹன்சிகா இப்படி தன் தோழிக்கு துரோகம் செய்யலாமா என்று கேள்வி எழுந்திருக்கிறது.

இதுபற்றி ஹன்சிகா மோத்வானியிடம் கேட்ட போது ‘ஒரு பிரபலமாக இருப்பதற்கான விலையை நான் கொடுத்துவிட்டேன். எல்லோரும் என்னை ஒரு வில்லனாகவே ஆக்கிவிட்டார்கள். உண்மையில் நான் எந்த தப்பும் பண்ணவில்லை. சோஹைல் கதுரியாவை நான் திருமணம் செய்யப் போகிறேன் என்று தகவல் வெளியானதுமே, எனக்கு என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை. எனக்கு மன அழுத்தம் அதிகமாகியது. பிறகு என் அம்மா சொன்ன அட்வைஸின்படி நானும் கதுரியாவும் இருக்கும் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டேன். அந்த புகைப்படங்களைப் பார்த்துவிட்டு எல்லோரு என்னை வாழ்த்தினார்கள். இதனால் என மனது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனது.

திருமணத்திற்கு முன்பாக சோஹைல் கதுரியா ஏற்கனவே திருமணமானவர். அவரும் அவரது மனைவியும் பிரிவதற்கு நான்தான் காரணம் என்று கமெண்ட் அடித்தார்கள். அதைக்கேட்டு கதறி அழுதேன். எந்தளவிற்கு அழுதேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். அவரது கடந்த கால வாழ்க்கையைப் பற்றி எனக்கு தெரியும். அவரது விவாகரத்திற்கு நான் காரணமில்லை.’’ என்று குரல் தழுதழுக்கிறார் ஹன்சிகா மோத்வானி.

‘எனக்கு 2014-லிலேயே திருமணம் ஆகிவிட்டது. எங்களுக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்த தால் அந்த திருமணம் அதிக நாட்கள் நீடிக்கவில்லை’ என்று ஹன்சிகாவுக்கு ஆதரவாக சோஹைல் குரல் கொடுத்து இருக்கிறார்.

Disney+Hotstar’ Hotsta LoveShaadiDrama Sohail . HansikaMotwani


நயன்தாரா, விஜய்சேதுபதியுடன் இணையும் அல்லு அர்ஜூன்.

ஒரே படத்தில் கோலிவுட், பாலிவுட், டோலிவுட், மோலிவுட், சான்டல்வுட் நடிகர்கள் நடிகைகளை நடிக்க வைப்பதுதான் இப்போது ட்ரெண்ட்.

‘பான் – இந்தியா’ என்ற கான்செப்ட் உருவானதிலிருந்து இது ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவருகிறது.
‘ஜெயிலர்’ படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் யார் யார் என்று யோசிப்பதை விட யார் நடிக்கவில்லை என்று ஒரு பட்டியலை தட்டிவிடலாம். அந்தளவிற்கு நாளுக்கு நாள் பல நடிகர்களை கமிட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இப்போது இதே வலைக்குள் சிக்கியிருக்கிறார் இயக்குநர் அட்லீ.

ஷாரூக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தை அட்லீ தற்போது இயக்கி வருகிறார். இப்படம் மூலமாக பாலிவுட்டில் என்ட்ரீ ஆகியிருக்கிறார் நயன்தாரா. ஷாரூக்கான், நயன்தாரா இணைந்து நடிக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே இப்படத்தில் விஜய் சேதுபதியும் கமிட்டானார்.

நயன்தாரா, விஜய் சேதுபதியை அடுத்து இப்போது இப்படத்தில் ’புஷ்பா’ படப்புகழ் அல்லு அர்ஜூன் இணைய இருப்பதாக பேச்சு அடிப்படுகிறது.

விஜய்சேதுபதிக்கு படத்தில் பல காட்சிகள் இருக்கிறது. ஆனால் நான்கைந்து காட்சிகளில் மட்டும் வந்து கலக்கும் கதாபாத்திரத்திற்குதான் இப்போது அல்லு அர்ஜூனை அட்லீ அணுகியிருக்கிறாராம்.

வெயிட்டான சம்பளம். 10 நாள் ஷூட்டிங்தான். இப்படி ஒரு தூண்டிலைப் போட்டு அல்லுவை அள்ளிக்கொண்டு போக ஜவான் குழு மும்முரமாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...