No menu items!

ராஷ்மிகா மந்தானாவின் டயட் இதுதான்

ராஷ்மிகா மந்தானாவின் டயட் இதுதான்

இளசுகளைக் கவர்ந்திழுத்திருப்பதில் நயன்தாரா, த்ரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷை எல்லாம் நெருங்க முடியாத வகையில் எங்கேயோ இருக்கிறார் ராஷ்மிகா மந்தானா.

பொதுவாக குறுகுறு பார்வை, சுறுசுறு பேச்சு, விறுவிறு சேட்டைகள் என தான் இருக்கும் இடத்தையே கலகலப்பாக வைத்திருப்பதில் ராஷ்மிகா மந்தானாவுக்கு போட்டியே இல்லை.

எல்லோருக்கும் பிடித்த மாதிரி ராஷ்மிகா இருக்க அவருடைய உற்சாகம் மட்டுமே காரணமில்லை. அவரது வசீகரமான தோற்றமும் ஒரு காரணம். இந்த கட்டுக்கோப்பான அழகுக்காக ராஷ்மிகா மந்தானா டயட்டும் இருக்கிறார்.

ராஷ்மிகா மந்தானா மாதிரி ஸ்லிம்மாக இருக்க வேண்டுமென்றால் நீங்களும் அவருடைய டயட்டை முயற்சித்துப் பார்க்கலாம். அவரது டயட் இதோ.

காலையில் ஆப்பிள் சிடார் வினிகர் ட்ரிங் குடிக்கிறார். இது உடல் நன்றாக செயல்பட அவசியமான ஜூரண சக்தியை மேம்படுத்துமாம்.

பிறகு நம்மைப் போல் அவர் நாள் முழுக்க பிரியாணி, கொத்து பரோட்டா, க்ரில்ட் சிக்கன், ஃபிஷ் ஃப்ரை என சாப்பிடுவது இல்லை. லைட்டான ஆனால் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவைதான் உட்கொள்கிறார்.

சிஷனல் ஃப்ரூட் வகைகள், இனிக்கும் உருளைக்கிழங்கு, காய்கறிகள் அதிகம் இருக்கும் வகையில் அவற்றின் சூப் இவைதான் ராஷ்மிகாவுக்கு தினமும் கொடுக்கப்படுகிறதாம். இதனால் ஷூட்டிங்கில் பரபரப்பாக இருந்தாலும், உடலுக்கு தேவையான விட்டமின்கள், மினரல்கள் கிடைக்கும் வகையில் பார்த்து கொள்கிறது அவருடைய உதவியாளர்கள் குழு.

பெரும்பாலும் இவர் வீட்டில் சமைத்த உணவையே சாப்பிடுகிறார். ஹோட்டல்கள் ரெஸ்டாரன்ட்களில் தயாராகும் உணவுகளை சாப்பிடுவது இல்லை. முடிந்தவரை இயற்கை வகை, உணவுகளை அதிகம் சேர்த்து கொள்கிறார்.

அரிசி, ஜங்க் ஃபுட், பொறித்த வகையறா ஸ்நாக்ஸ் இவற்றை தொடுவதே இல்லையாம்.

இப்படியே டயட் இருப்பதால் என்றைக்காவது ஒரு நாள் மட்டும் தனக்குப் பிடித்தவற்றை ஒரு பிடி பிடித்துவிடுவார் என்கிறது அவருடைய டயட்டை கொடுக்கும் உதவியாளர்கள் குழு.


துபாயில் செட்டிலான யுவன் ஷங்கர் ராஜா!

தமிழ் சினிமாவில் கதை, திரைக்கதையை வடிவமைக்க இங்கே எங்கேயாவது ஒரு நட்சத்திர ஹோட்டலில் ரூம் போட்டு யோசிப்பார்கள். சிலர் இந்தியாவிற்குள்ளே ஏதாவது ஜில்லென்று இருக்கும் கோடை வாசஸ்தலங்களுக்குச் சென்று யோசிப்பார்கள்.

ஆனால் ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா போன்ற இசையமைப்பாளர்கள் பாட்டெழுதி ட்யூன் போட தாய்லாந்து, சிங்கப்பூர், மலேஷியா, துபாய்க்கு பறப்பார்கள். ஒரு வாரம் அங்கே தங்கியிருந்து ட்யூனை போட்டு, இங்கே வந்து செட்டிலாகி விடுவார்கள்.

ஆனால் இப்போது யுவன் ஷங்கர் ராஜா, துபாய்க்கு குடிப்பெயர்ந்துவிட்டாராம். 2014-ல் யுவன் ஷங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறினார். இதற்கு அடுத்தகட்டமாக 2015-ல் ஷாஃப்ரூன் நிஷா என்பவரையும் நிக்காஹ் செய்து கொண்டார். அது முதல் இஸ்லாமியராகவே வாழ்ந்து வருகிறார்.

இதனாலோ என்னவோ தனது ஜாகையை இஸ்லாமிய நாடான துபாய்க்கே மாற்றிவிட்டார் என்கிறார்கள்.

துபாயில் ஒரு அதிநவீன ரிக்கார்ட்டிங் ஸ்டூடியோவையும் ஆரம்பித்துவிட்டார். இவர் இசையமைக்க இருக்கும் ‘விஜய் 68’, அமீரின் ‘மாயவலை’, ‘கவின் நடிக்கும் ‘ஸ்டார்’, ‘காஞ்சுரிங் கண்ணப்பன்’ ஆகிய படங்களின் இசைக்கோர்வைப் பணிகளும் துபாயில்தான் நடந்து வருவதாக கூறுகிறார்கள்.

அதெப்படி துபாயில் என்றால், ட்யூனை போட்ட பிறகு அதை ஆன்லைன் மூலம் பாடகர்கள் பாடகிகளுக்கு அனுப்பி விடுகிறாராம். பிறகு அவர்களும் பாடலைப் பாடிய பின்பு ட்ராக்கை ஆன்லைனிலேயே அனுப்புகிறார்கள்.

பாடல், ட்யூன் சம்பந்தப்பட்ட அனைத்து கலந்துரையாடல்களையும் இணையம் மூலமாகவே மேற்கொள்கிறாராம் யுவன்.

காஸ்ட்லியான தயாரிப்பாளராக இருந்தால், அப்படியே ஃப்ளைட் பிடித்து என் வீட்டிற்கு வந்துவிடுங்கள். பேசிக்கொள்ளலாம் என்கிறாராம்.


பருத்திவீரன் பஞ்சாயத்து முடிவு என்ன?

கார்த்தியின் 25-வது படம் ‘ஜப்பான்’. அதை கொண்டாடும் வகையில் அப்பட விழாவில் கார்த்தியை வைத்து படங்கள் இயக்கிய இயக்குநர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

இவ்விழாவில் கார்த்தியின் முதல் படமான ‘பருத்திவீரனை’ இயக்கிய அமீரும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. பருத்திவீரன் தயாரிப்பு மற்றும் வெளியீடு இரண்டிலும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும், அமீருக்கும் இடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. தயாரிப்பு செலவு குறித்த பிரச்சினை இன்னும் முடியவில்லை. இது குறித்த வழக்கு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் இயக்குநர் அமீர் கலந்து கொள்வாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ‘ஜப்பான்’ பட விழாவில் அமீர் கலந்து கொள்ளவில்லை.

அறிமுகப்படுத்திய இயக்குநருக்கு கார்த்தி முறைப்படி அழைப்பு விடுக்கவில்லை. திரைப்பட பி.ஆர்.ஓ மூலம் அழைக்கப்பட்டதால் அமீர் கலந்து கொள்ளவில்லை என்பதால் அவர் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டது.

இதற்கிடையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அமீருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு குறித்து ஊடகங்களில் பேட்டி கொடுத்தார். இங்கு இருந்துதான் ’பருத்திவீரன்’ தொடர்பான சர்ச்சை ஏறக்குறைய 16 ஆண்டுகளுக்குப் பின் வெடித்தது.

அமீர் தன்னுடைய நண்பர்கள் உதவியுடன் நிதிப்பிரச்சினையை சமாளித்து படத்தை வெளியிட்டார் என ஞானவேல் ராஜா கூறிய கருத்திற்கு எதிராக இயக்குநர் சசிகுமார், சமுத்திரக்கனி, நடிகர் பொன் வண்ணன், பாடலாசிரியர் சினேகன் என பலர் அடுத்தடுத்து தங்களது கருத்துகளைப் பதிவிட்டனர்.

ஆனால் பருத்திவீரனின் வெளியீட்டில் பணம் கொடுத்து உதவியாக கூறப்பட்ட சூர்யாவோ, அதில் நடித்த கார்த்தியோ அல்லது இவர்களது அப்பா சிவகுமாரோ இதுவரை எந்த கருத்தையும் கூறவில்லை.

இதுவே சூர்யா குடும்பத்தின் மீது விமர்சனங்களை வைக்க வழிவகுத்துவிட்டது.

இப்படியே நீண்டுக்கொண்டு போகும் பஞ்சாயத்திற்கு முடிவு என்வென்பது தெரியாத சூழலில், இப்போது தயாரிப்பாளர் சங்கம் களத்தில் இறங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்திருக்கிறது.

’பருத்திவீரன்’ பட பஞ்சாயத்து எழுந்த போது தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக மறைந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான இராம. நாராயணன் பொறுப்பு வகித்தார். அப்போது தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளராக சிவசக்தி பாண்டியன் செயல்பட்டார்.

இப்போது இராம. நாராயணன் உயிருடன் இல்லாத காரணத்தினால், ’பருத்திவீரன்’ பிரச்சினையைக் கையாண்ட சிவசக்தி பாண்டியன் அப்போது நிகழ்ந்தவற்றைப் பற்றி பொதுவெளியில் கூறவேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில நாட்களில் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்படலாம் என்றும் அதில் சிவசக்தி பாண்டியன் கலந்து கொண்டு, அப்போது நடந்த விவகாரம் குறித்து பேசுவார் என்றும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

சிவசக்தி பாண்டியன் கூறுவதைப் பொறுத்து ‘பருத்திவீரன்’ பஞ்சாயத்தில் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பது குறித்த தெளிவு ஏற்படும். இப்பிரச்சினையும் ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...