No menu items!

Hansika Motwani-n காதலர் இவர்தான்.

Hansika Motwani-n காதலர் இவர்தான்.

ஹன்சிகாவின் திருமணத்திற்காக ஜெய்ப்பூரில் இருக்கும் முண்டோட்டா கோட்டை மற்றும் மாளிகையை ஒரு மாதத்திற்கு முன்பாக அவரது குடும்பத்தினர் ரிசர்வ் செய்து வைத்திருக்கிறார்கள். இந்த செய்தி வெளியே கசிய ஹன்சிகாவின் காதலர் யார் என்று சினிமா ரசிகர்கள் சங்கர் லாலை போல் ஆராய தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் ஹன்சிகாவின் காதலர், வருங்கால கணவர் பெயர் தெரிய வந்திருக்கிறது.

அவர் பெயர் சோகைல் கதுரியா.

ஹன்சிகாவுக்கும், கதுரியாவுக்கும் எப்படி பத்திகிச்சு என்ற கேள்விக்கு ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக் தேவைப்படுகிறது.

2020-ல் ஹன்சிகா ஒரு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியை தொடங்கினார். இந்நிறுவனம் திருமண திட்டமிடல், கொண்டாட்டங்கள், என பல வகையான நிகழ்ச்சிகளை நடத்தி கொடுக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வந்தது. அப்போதுதான் இந்நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக வந்து சேர்ந்தார் சோகைல் கதுரியா.

பிஸினெஸ் தொடர்பு பின்னர் நட்பாக மாறியது. இதன் அடுத்தக்கட்டமாக காதலாகவும் ப்ரமோஷன் பெற்றது.

சினிமாவில் மார்க்கெட்டை தக்க வைக்கவேண்டுமென்பதற்காகவே தனது காதல் குறித்த எந்தவித தகவல்களையும் ஹன்சிகா இதுவரையில் யாரிடமும் பகிர்ந்து கொண்டது இல்லை.

ஆனால் இப்போது டிசம்பர் 4-ம் தேதி ஹன்சிகாவுக்கும், கதுரியாவுக்கு திருமணம் என்று பேச்சு அடிப்படுகிறது. மேலும் திருமணம் முடிந்த பின்பே இவர் என் கணவர் என்று மட்டும் ஹன்சிகா வெளியே சொல்ல இருப்பதாகவும் தெரிகிறது.

சிம்புடன் காதல் நெருக்கமாகி திருமணம் வரை சென்றது நினைவிலிருக்கலாம். ஆனால் அந்த காதல் கடைசியில் இருவருக்கும் குட்பை சொல்லிவிட்டு கிளம்ப ரொம்பவே டல்லடித்து போனார் ஹன்சிகா. இதுபோன்று மீண்டும் நடந்து விடக்கூடாது என்பதற்காகவே இப்பொழுது திருமணம் பற்றி எந்த தகவல்களையும் ஹன்சிகா வெளியிடவில்லை என்றும் தெரிகிறது.

ஹன்சிகா, கதுரியா மற்றும் இவர்களது நெருங்கிய குடும்பத்தினர் நண்பர்கள் மட்டும் திருமணத்திற்காக ஜெய்ப்பூருக்கு செல்ல இருப்பதாகவும், திருமண கொண்டாட்டங்கள் மூன்று நாட்கள் நடைபெற இருப்பதாகவும் தகவல் கசிந்திருக்கிறது. டிசம்பர் 3-ம் தேதி மெஹந்தி மற்றும் சங்கீத் நிகழ்வுகள் நடைபெற இருக்கிறதாம்.

Samantha Ruth Prabhu-ன் அசர வைக்கும் ஆக்‌ஷன்

’எனக்கு மயோசிடிஸ் என்னும் ஆட்டோ இம்யூன் பிரச்சினை இருக்கிறது’ என்று சமந்தா சொல்ல கிறுகிறுத்து போயிருக்கிறது தென்னிந்திய சினிமா.

இந்நிலையில் வருகிற 11-ம் தேதி சமந்தா நடித்திருக்கும் ‘யசோதா’ படம் வெளியாக இருக்கிறது.

இதில் வாடகைத்தாய் பிஸினெஸின் மறுபக்கத்தை காட்டும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருப்பதாக பேச்சு அடிப்படுகிறது.

இப்படத்தில் சமந்தா ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார். இதுவரையில் கவர்ச்சியில் கலக்கிய சமந்தா ஆக்‌ஷனிலும் தூள் பறத்தியிருக்கிறார் என்று ப்ரமோஷனில் பற்ற வைத்திருக்கிறது இப்படத்தின் யூனிட்.

’ட்ரான்ஸ்போர்ட்டர் -3’, கிறிஸ்டோபர் நோலனின் ‘இன்செப்ஷன்’, ‘ட்ன்க்ரிக்’, ஷாரூக்கானின் ‘ரேஸ்’ சல்மான்கானின் ‘டைகர் ஸிந்தா ஹை’ என பல படங்களுக்கு அட்டகாசமான ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்தவர் யானிக் பென். சமந்தா நடித்த ‘ஃபேமிலி மேன் -2’ ஒடிடி சீரிஸூக்கும் ஆக்‌ஷன் டைரக்டர் இவர்தான்.

பாடி டபுள் என்றழைக்கப்படும் டூப் போடாமல் சண்டைக்காட்சிகளில் சமந்தா நடித்திருக்கிறார். தற்காப்பு கலை சம்பந்தமான ஆக்‌ஷன் மூவ்மெண்ட்களிலும் சமந்தா எந்தவிதமான மறுப்பும் சொல்லாமல் பட்டையக் கிளப்பியிருக்கிறார் என்று யானிக் பென்

ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்திருக்கும் சமந்தா, உட்கார்ந்தால் எழுந்திரிக்க முடியாது. படுத்தால் ஏழ முடியாது என பல பிரச்சினைகளில் சிக்கித்தவிக்கும் இப்போதைய நிலையைப் பார்த்து, ’உச்’ கொட்டி ’கெட் வெல் சூன்’ என ஆதரவு காட்டி வருகிறார்கள் ரசிகர்கள்.

Indian – 2 படத்தில் யுவராஜ் சிங் அப்பா

கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் களத்தில் விளையாடுவதை விட டிவி விளம்பரங்களில் நடிகர்களையும் ஓரங்கட்டுமளவிற்கு நன்றாகவே நடிக்கிறார்கள்.

சச்சின் டெண்டுல்கர், தோனி, கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஸ்ரேயாஸ் அய்யர் என இந்த பட்டியல் ரொம்பவே பெரியது.
கிரிக்கெட் வீரர்களைத் தாண்டி அவர்களது குடும்பத்தினரும் இப்போது சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த வகையில் லேட்டஸ்ட்டாக சினிமாவில் தலைக்காட்ட வந்திருப்பவர் யுவராஜ் சிங்கின் அப்பா யோக்ராஜ்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ’இந்தியன் – 2’ படத்தில்தான் யோக்ராஜ் அறிமுகமாக இருக்கிறார்.

’இந்தியன் – 2’ படத்தின் வேலைகள் படு ஜரூராக நடைபெற்று வருகிறது. அநேகமாக ஷங்கர் இயக்கிய படங்களிலேயே மிக அதிக நேரம் ஓடும் படமாக இது இருக்கலாம் என்ற பேச்சு கோலிவுட்டில் அடிப்படுகிறது. படத்தின் நீளம் சுமார் மூன்று மணிநேரம் பத்து நிமிடம் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இன்றைய அரசியல், எம்.எல்.ஏ,க்களை பேரம் பேசும் குதிரை பேரம், இவற்றோடு ஷங்கரின் வழக்கமான லஞ்சம், ஊழல் சமாச்சாரங்களும் இப்படத்தில் இடம்பெற்று இருப்பதாக இப்பட யூனிட்டில் கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...