No menu items!

தமன்னா காதல் உண்மையா?

தமன்னா காதல் உண்மையா?

கோலிவுட்டில் லேட்டஸ்ட்டாக காதல் கிசுகிசுவில் வகையாக சிக்கியிருப்பவர் தமன்னா.

கொஞ்ச நாட்களுக்கு முன்பாக, கோவாவில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் தமன்னாவும், பாலிவுட் நட்சத்திரமான விஜய் வர்மாவும் ஒன்றாக பார்ட்டி செய்வது போல் ஒரு வீடியோ வைரல் ஆனது.

அந்த வீடியோவில் தமன்னாவும் விஜய் வர்மாவும் பின்னாடி ஜோடியாக உட்கார்ந்திருப்பது போல் ஒரு காட்சி சில விநாடிகள் ஓடுகிறது..

இதையடுத்து தமன்னா காதலா என கிசுகிசுக்கள் கிளம்ப ஆரம்பித்தன.

இப்போது லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், தமன்னாவும் விஜய் வர்மாவும் தங்களுக்கு இடையே இருக்கும் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள் என்பதே.

விஜய் வர்மா தனது சோஷியல் மீடியா அக்கெளண்ட் ஒன்றில் அடிக்கடி புகைப்படங்களையும், வீடியோக்களையும் அப்லோட் செய்வது வழக்கம். அப்படிதான் இப்பொழுது ஷூக்கள் அணிந்த இரண்டு கால்களை க்ளோஸப்பில் படமெடுத்து பதிவிட்டு இருக்கிறார்.

இந்த இரு கால்களின் நடுவே ஒரு இதயம் எமோஜி வேறு இருக்கிறது.

ஒன்று விஜய் வர்மா கால். மற்றொன்று தமன்னாவின் கால்தான். விஜய் வர்மா தங்களது காதலை எல்லோரிடமும் தெரிவிக்க தயாராகி விட்டார் என்று பேச்சு அடிப்படுகிறது.

. #vijayvarma #actorvijayvarma #tamannaahspeaks #tamannaahforever #tamannaahbhatia #milkybeautytamannaah


வெப்சிரீஸூக்கு விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு?

விஜய் சேதுபதியின் கவனம் இப்பொழுது பாலிவுட் பக்கம் அதிகம் திரும்பியிருக்கிறது.

கைத்ரீனா கைஃப்புடன் நடிக்கும் ’மெர்ரி கிறிஸ்மஸ்’. அடுத்து ஷாரூக்குடன் நடிக்கும் ‘ஜவான்’, ’மும்பைகார்’ இந்தப் படங்களுடன் தற்போது ஒரு வெப்சிரீஸீலும் நடித்திருக்கிறார்.

‘ஃபர்ஸீ’ [Farzi] என்ற பெயரில் ஒடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் இந்த வெப்சிரீஸில் ஷாகித் கபூருடன் இணைந்து நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

சமந்தாவை வைத்து ‘சிடாடல்’ வெப்சிரீஸீன் இந்திய பதிப்பை இயக்கி வரும் ராஜ் & டிகே ஆகிய இருவரும்தான் விஜய் சேதுபதி நடித்திருக்கும் வெப்சிரீஸை இயக்கி இருக்கிறார்கள். இது ஒரு டார்க் காமெடி த்ரில்லர் தொடர்.

இதில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘மைக்கேல் வேதநாயகம்’ கதாபாத்திரத்திற்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது.

விஜய் சேதுபதி இதை வைத்து பாலிவுட்டில் நுழைய திட்டமிட்டு வருகிறாராம். இதற்காகவே இந்த வெப்சிரீஸில் நடிப்பதற்கு அதிகம் சம்பளம் வேண்டாம் என்று 7 கோடி சம்பளமாக வாங்கியிருக்கிறாராம்.

இன்னும் இரண்டுப் படங்கள், ஒரு வெப்சிரீஸ் முடித்ததும் சம்பளத்தை ஏற்றிவிடுவேன் என தனக்கு நெருக்கமான வட்டாரத்தில் விஜய் சேதுபதி உற்சாகமாக சொல்லி வருகிறாராம்.

vijaysethupathi #vijaysethupathy #vjs #farzi #shahidkhan #webseries #makkalselvan


நயன்தாரா சர்ச்சையில் பின்வாங்கிய மாளவிகா

‘மாஸ்டர்’ படத்தில் நடித்த மாளவிகா மோகனன், சர்ச்சை நாயகியாக பரபரப்பை கிளப்பிக்கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ’ஒரு ஹாஸ்பிடல் காட்சி. அதில் நடித்த ஹீரோயின் முழு மேக்கப்பில் இருக்கிறார். ஹாஸ்பிடல் காட்சியிலும் கூட இப்படி ஹேர் ஸ்டைல் கலையாமல், ஐ லைனர் போட்டு கொண்டு, மஸ்காரா போட்டுகொண்டு மேக்கப்போடுதான் நடிக்கவேண்டுமா’ என்று கமெண்ட் அடித்தார் மாளவிகா மோகனன்.

இது நயன்தாராவைதான் மாளவிகா கலாய்க்கிறார் என்று சலசலப்பைக் கிளப்பியது.

சில நாட்கள் கழித்து, தன்னுடைய ‘கனெக்ட்’ படத்தின் ப்ரமோஷனுக்காக பேட்டியளித்த நயன்தாரா அதற்கு பதிலடி கொடுத்தார்.

‘முழு மேக்கப்புடன் நடித்ததாக ஒரு நடிகை சொல்லியிருந்தார். அது கமர்ஷியல் படம். ரியலிஸ்டிக் படம் இல்லை. யதார்த்தமான படமாக இருந்தால், அதை வெளிப்படுத்தும் வகையில் நடிக்கலாம். கமர்ஷியல் படத்தில் இப்படிதான் இருக்கவேண்டுமென கேட்கும் போது அப்படிதானே நடிக்கமுடியும்’ என்று நயன்தாரா அந்த கமெண்ட் கலாட்டாவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

கொஞ்ச நாட்களிலேயே மாளவிகா மோகனன் தற்போது நடித்துவரும் ‘கிறிஸ்டி’ பட ப்ரமோஷனில் பேசும் போது, ‘லேடி சூப்பர்ஸ்டார் என்று சொல்கிறார்கள். அது என்ன லேடி சூப்பர்ஸ்டார்? திபீகா படுகோன், ஆலியாபட், காத்ரீனா கைஃப் இவர்களெல்லாம் சூப்பர்ஸ்டார்கள் தானே. அப்புறம் ஏன் லேடி சூப்பர்ஸ்டார் என்று சொல்லவேண்டும்’ என்று மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை சொன்னார்.

இந்த கமெண்ட்டும் சூட்டைக்கிளப்பவே, சுதாரித்து கொண்ட மாளவிகா இப்பொழுது தாமாகவே முன்வந்து, ‘நான் யாரையும் காயப்படுத்துவதற்காக சொல்லவில்லை. அது நட்சத்திரங்களில் நடிகைகளை மட்டும் ஏன் லேடி என்று பிரித்துப் பார்க்கவேண்டும். சூப்பர்ஸ்டார் என்று சொல்வதுதானே சரியாக இருக்கும். அதைதான் நான் சொன்னேன்’ என்று சொல்ல இப்பொழுது நயன் – மாளவிகா ரசிகர்களின் சைபர் போர் முடிவுக்கு வந்திருக்கிறது.

nayanthara #malavika #malavikamohanan #masterheroine #nayantharacontroversy #tamilcinema #cinemalove #commercialheroine #nayan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...