No menu items!

தமிழுக்கு வரும் ஸ்ரீதேவியின் வாரிசு!

தமிழுக்கு வரும் ஸ்ரீதேவியின் வாரிசு!

ஸ்ரீதேவியை தமிழ் சினிமா ஆராதித்த அளவிற்கு அவரது வாரிசுகளுக்கு ஆதரவளிக்க தமிழ் சினிமா தயாராக இருந்தாலும், போனி கபூர் தனது மகள்களை தமிழ் சினிமாவில் நடிக்க இதுவரையில் அனுமதிக்கவே இல்லை.

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், ஒரு வழியாக தெலுங்கு சினிமாவில் நடிப்பதன் மூலம் தென்னிந்திய சினிமாவுக்குள் நுழைந்திருக்கிறார்.

இந்நிலையில், இரண்டாவது மகள் குஷி இதுவரையில் நடிப்பது பற்றி வாயைத் திறக்காமலேயே இருந்தார். ஆனால் கடைசியில் பூனை வெளி வந்துவிட்டது.

விக்னேஷ் சிவனினிடம் உதவி இயக்குநராக இருந்த ஆகாஷ் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படத்தில்தான் குஷி அறிமுகமாக இருக்கிறாராம். படத்தில் பெரும்பாலான காட்சிகள் அமெரிக்காவில் நடப்பது போல் இருக்கிறதாம். இதனால் பட்ஜெட் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குஷி அறிமுகம் முடிவான நிலையில், அதர்வாவுக்கு இங்கே தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்ட் போடுவதாக கூறியிருப்பதால், குஷி இப்படத்தில் நடிப்பாரா மாட்டாரா என்ற சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.

ஆனால் குஷி தமிழில் நான் நடித்தே தீருவேன் என்று அடம்பிடிப்பதாக சொல்கிறார்கள்.


என் கணவருக்கு அடுத்து ஷாரூக்கான்தான் – ப்ரியா மணி

ப்ரியா மணிக்கு ‘பருத்திவீரன்’ மாதிரியான படம் எதுவும் தொடர்ந்து அமையவில்லை. நடித்தப் படங்களும் ஹிட்டாகவும் இல்லை. இதனால் கொஞ்சம் கூட யோசிக்காமல், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

பொதுவாகவே சினிமா நட்சத்திரங்களுக்கு திருமணமாகி செட்டிலானாலும், வீட்டில் கேமரா ஆக்‌ஷன் மாதிரியான வார்த்தைகளைக் கேட்காமல் இருக்கமுடியாது. பொறுக்க முடியாமல் மீண்டும் நடிக்க வந்துவிடுவார்கள். இந்தப் பட்டியலில் ப்ரியா மணியும் அடக்கம்.

தனது கணவர் முஸ்தபா ராஜை கவனித்து கொள்ள வேண்டுமென, குடும்ப வாழ்க்கையில் செட்டிலானவர் இப்போது மீண்டும் நடிப்பில் பரபரப்பாகி இருக்கிறார்.

ப்ரியா மணியின் கவனம் இப்போது வெப் சிரீஸ், ஹிந்திப் படங்கள் மீது இருக்கிறது. அந்த வகையில் ப்ரியா மணியின் எண்ட்ரீ ‘1234 கெட் ஆன் த ஃப்ளோர்’ என்ற ஐயிட்டம் சாங்கின் குத்தாட்டத்தில் ஆரம்பித்தது. அதை ஆரம்பித்து வைத்தவர் ஷாரூக்கான். ’சென்னை எக்ஸ்ப்ரஸ்’ இவர் ஆடிய குத்தாட்டம் ப்ரியா மணிக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

அதேபோல் மீண்டும் ஒரு திருப்புமுனையைக் கொடுத்திருக்கிறார் ஷாரூக்கான். சமீபத்தில் வெளியாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஜவான்’ படத்தில் ப்ரியா மணி ஷாரூக்கானுடன் இணைந்து நடித்தும் இருக்கிறார்.

பத்து வருடம் கழித்து வாய்ப்பு கொடுத்ததால், ஷாரூக்கானை தூக்கி வைத்து கொண்டாடுகிறார் ப்ரியா மணி. ‘’உண்மையைச் சொல்லணும்னா என் கணவர் முஸ்தபா ராஜூவுக்கு அடுத்து ஷாரூக்கானைதான் நான் ரொம்ப லவ் பண்றேன். எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும், பந்தா இல்லாதவர். கூட நடிக்கும் நட்சத்திரங்களை அக்கறையோடு பார்த்துப்பார். அவர் ஸ்பாட்டுல இருந்தாலே அவரைச் சுத்தி இருக்கிற எல்லோருக்கும் ஒரு பாஸிட்டிவ்வான உணர்வை உருவாக்கிடுவார். ஷாரூக்கான் ஐ லவ் யூ’’ என்று கடாயில் போட்ட பாப் கார்ன் மாதிரி படபடக்கிறார்.

ப்ரியா மணி அடுத்து அஜய் தேவ்கனுடன் ‘மைதான்’ என்ற ஹிந்திப்படத்தில் நடித்திருக்கிறார்.

பார்க்க மெச்சூர்டாக தெரிகிறார் என்று கண்டுகொள்ளாமல் விட்ட தமிழ்சினிமாவுக்கு பதிலளிக்கும் வகையில் அடுத்தடுத்து ஹிந்திப் படங்களில் நடிக்கிறார் ப்ரியா மணி.


ரஜினியை மடக்க திட்டமிடும் சிவராஜ்குமார்!

’ஜெயிலர்’ படத்தின் வசூல் அதை தயாரித்த நிறுவனத்திற்கு லாபத்தை அள்ளிக் கொடுத்திருக்கலாம். இயக்குநர் நெல்சனுக்கும், இசையமைப்பாளர் அனிருத்துக்கும் காரை பரிசாகப் பெற வாய்ப்பை உருவாக்கி இருக்கலாம்.

ஆனால் தமிழ் நாட்டில் அதிகம் முகம் தெரியாத, கன்னட நட்சத்திரம் சிவராஜ்குமாருக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்று கொடுத்திருக்கிறது.

இதனால் ‘ஜெயிலர்’ படம் வெளியாகி பல வாரங்கள் ஆனப்பின்பும் கூட அந்த ஜெயிலர் ஜூரத்தில் இருந்தபடியே பல திட்டங்களைப் போட்டுக் கொண்டிருக்கிறார் சிவராஜ்குமார்.

ரஜினியுடன் அவரது அப்பா ராஜ்குமார் காலத்திலிருந்தே நல்ல உறவு இருந்துவருகிறது. ‘ஜெயிலர்’ வெற்றிக்குப் பிறகு ரஜினியின் நெருக்கம் வேறு மாதிரியாக அமைந்திருக்கிறது.

மறுப்பக்கம், சிவராஜ்குமார் தெலுங்கு சினிமாவின் அதிரடி ஆக்‌ஷன் ஸ்டார் பாலகிருஷ்ணாவுடனும் இணைந்து நடித்திருக்கிறார். ’கெளதமிபுத்ரா சடகாமி’ படத்தில் பாலகிருஷ்ணாவுடன் நடித்தது அவர்களுக்கு இடையே ஒரு நல்ல நட்பை உருவாக்கி இருக்கிறது.

இந்த நட்பு வட்டங்களை வைத்து ஒரு பலே திட்டத்தை கையிலெடுக்க சிவராஜ்குமார் திட்டமிட்டு வருகிறாராம். அதாவது தமிழில் இருந்து ரஜினி, தெலுங்கில் இருந்து பாலகிருஷ்ணா, கன்னடத்தில் இருந்து சிவராஜ்குமார் என்ற கூட்டணியை வைத்து ஒரு பான் – இந்தியா படத்தை மெகா பட்ஜெட்டில் படமெடுக்க சிவராஜ்குமார் முயற்சி எடுத்து வருகிறாராம்.

ரஜினி தரப்பில் இருந்து எந்தவித ரியாக்‌ஷனும் இதுவரை இல்லை என்பது கூடுதல் தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...